விவசாயப் பெருமக்களை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட கமத்தொழில் சார் இணைய வழி தீர்வான govi.ai, SLASSCOM ஏற்பாடு செய்த Ingenuity Awards 2024 விருது விழாவில் சிறந்த புத்தாக்க உற்பத்திகள்/கமத்தொழில் தொழில்நுட்ப கருத்திட்ட பிரிவின் தேசிய மட்டத்தின் மூன்றாவது இடத்தை வென்றுள்ளது. விவசாயிகளிடையே Internet of Things (IoT) மற்றும் Cloud Analytics போன்ற தொழில்நுட்பம் தொடர்பான அறிவை வளர்ப்பதன் மூலம் பயிர்ச்செய்கை மற்றும் அறுவடை தொடர்பான தரவுகளின் அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு தேவையான சூழலை உருவாக்குவதே இந்த உள்ளீட்டின் நோக்கமாகும். இதற்கு தேவையான மென்பொருள் மற்றும் வன்பொருள் அனைத்துமே மேற்படி நிறுவனத்தின் சொந்த உற்பத்தி என்பது குறிப்பிடத்தக்கது. சிறியதொரு காணியை கொண்டுள்ள விவசாயி தொடக்கம் ஆராய்ச்சி மற்றும் வணிக மட்டத்திலான விவசாயிகள் வரை பரந்தளவிலான சமூகமொன்றுக்கு இந்த உள்ளீட்டின் மூலம் அனுகூலங்கள் கிடைக்கின்றன. காலநிலை மாற்றங்களின் தாக்கங்களை குறைத்தல், நீர் மற்றும் உர வழங்களை சிறந்த மட்டத்துக்கு கொண்டு வருதல், செலவை குறைத்தல் மற்றும் நிலைபேறான பழக்கங்களை மேம்படுத்தல் அவற்றின் சிலவாகும்.govi.ai உள்ளீட்டிலுள்ள IoT உணர்கருவியின் மூலம் ஈரப்பதன் உள்ளிட்ட மண்ணின் தரத்துடன் தொடர்புடைய pH, EC மற்றும் போசாக்கு பெறுமதிகளுக்கு ஏற்புடைய தகவல்களை பெற முடியும். அதன் மூலம் வீண்விரயத்தை குறைத்தல், வினைத்திறனை மேம்படுத்தல் மற்றும் ஆக்கம் மற்றும் தரத்தை மேம்படுத்தல் போன்ற பல்வேறு நன்மைகளை பெற முடியும். govi.ai உள்ளீட்டின் நீர்ப்பாசனம் மற்றும் பசளையிடலுடன் தொடர்புடைய செயற்பாடுகள் விவசாயிகளுக்கு குழப்பமற்ற மனதுடன் நிலைபேறான முறையில் நிலத்தை முகாமைத்துவம் செய்வதற்கு வழியேற்படுத்துகின்றன. அதனுடன் தொடர்புடைய தரவுப் பலகை பயிரின் ஆரோக்கியம், வளப் பயன்பாடு மற்றும் மேலும் பல விடயங்கள் தொடர்பான முன்னைய மற்றும் தற்போதைய தரவுகளை கொண்டுள்ளது. உள்ளீட்டில் காணப்படுகின்ற உணர்கருவிகள் மூலம் தொலைவிலிருந்தும் தானியங்கி முறையிலும் பயிர் நிலங்களை கண்காணிக்கவும் நீர் வழங்கல், வளி, பசளையிடல் போன்ற தர முகாமைத்துவம் செய்யவும் முடியும். “இலங்கையின் கமத்தொழில் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு govi.ai கொண்டுள்ள அர்ப்பணிப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டதொரு சந்தர்ப்பமாக இதனை குறிப்பிட முடியும். நாம் எப்பொழுதும் புத்தாக்க தீர்வுகள் மூலம் விவசாயிகளை மேம்பட்ட விழிப்புணர்வுடைய சமூகமாக மாற்றவும், நிலைபேறான பயன்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். கமத்தொழில் தொடர்பாக இலங்கையர்கள் வசமுள்ள அறிவுடன் தொழில்நுட்பத்தை இணைத்து இவ்வாறான புத்தாக்க தீர்வுகள் மூலம் மேம்பட்ட சுபீட்சமானதும் நிலைபேறான கமத்தொழில் வளர்ச்சிக்குமான வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்.” என Azend Technologies தலைமை நிறைவேற்று அதிகாரி திரு ரஜீவ் சில்வா தெரிவித்தார்.
Popular
அலியான்ஸ், தொடர்ந்து ஆறாவது ஆண்டாகவும் உலகில் 1ஆம் ஸ்தானத்திலுள்ள காப்புறுதி வர்த்தகநாமமாக தரப்படுத்தப்பட்டுள்ளது
இலங்கையிலுள்ள முன்னணி காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாகவும், சர்வதேச பெருநிறுவனமான Allianz SE இன் அங்கமாகவும் இயங்கி வருகின்ற அலியான்ஸ் லங்கா, தொடர்ந்து ஆறாவது ஆண்டாகவும் Interbrand இன் மிகச் சிறந்த சர்வதேச வர்த்தகநாமங்கள்...
கல்விக்கான தனது அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்து
இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக, அறிவு பகிர்வு மற்றும் கல்விசார் வாய்ப்புகளை மேம்படுத்தல்...
DFCC வங்கி மற்றும் Prime Land Residencies ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பிரத்தியேகமான வீட்டுக்கடன் தீர்வுகள்
தமக்கென இல்லமொன்றை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கனவினைச் சுமப்பவர்களுக்கு, கம்பஹாவில் “The Palace” என்ற ஆடம்பர அடுக்குமனையை சொந்தமாக்கிக் கொள்வதற்கான தனித்துவமான வாய்ப்பொன்றினை வழங்கும் வகையில் DFCC வங்கி மற்றும் Prime...
திறமை மற்றும் படைப்பாற்றலுக்கு ஒத்துழைப்பு வழங்கி சமையல் சம்பியன்ஷிப் 2024 போட்டிக்கு அனுசரணை வழங்கும் செரண்டிப் கோதுமை மா...
7 ஸ்டார் கோதுமை மா உற்பத்தியாளரான செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் உள்நாட்டு தொழில்துறை திறமைகள் மற்றும் படைப்பாற்றல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் சமையல் சம்பியன்ஷிப் 2024 போட்டியில் பாண் மற்றும் ...
ஹட்ச் வழங்கும் ஒப்பற்ற Data Roaming சலுகைகள் உடன் வெளிநாட்டில் இருந்தும் கூட தொடர்ந்தும் இணைப்பில் இருங்கள்
இலங்கையில் முன்னணி மொபைல் வலையமைப்பு சேவை வழங்குனர்களில் ஒன்றான ஹட்ச், வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது data roaming சேவைகளுக்கு மிகவும் விரும்பப்படுகின்ற மற்றும் மிகவும் குறைந்த கட்டணங்கள் கொண்ட தெரிவாக மாறி, தனது...