இலங்கை சந்தைப்படுத்தல் கற்கைநிலையம் (The Sri Lanka Institute of Marketing – SLIM), இலங்கையில் மிகச் சிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சாதனைகளைப் போற்றிக் கௌரவித்து, கொண்டாடும் அதியுயர் மேடையான SLIM DIGIS 2.4 இன் ஆரம்பம் குறித்து மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விளம்பர பிரச்சாரங்களில் புத்தாக்கம், படைப்பாற்றல் மற்றும் வினைதிறன் ஆகியவற்றை அங்கீகரிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட SLIM DIGIS, 2024 ஆம் ஆண்டில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொழில்துறையின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தொடர்ந்தும் ஆதரவளிக்கும். இம்முறை 4வது தடவையாக SLIM DIGIS இடம்பெறுவதுடன், இலங்கையில் சந்தைப்படுத்தல் துறையில் அதன் நீண்டகால செல்வாக்கினை சுட்டிக்காட்டி, ‘Celebrate Digital Mastery’ என்ற தொனிப்பொருளின் கீழ் விருதுகள் நிகழ்வு இடம்பெறுகின்றது. அந்த வகையில் SLIM DIGIS 2.4 க்கான நுழைவு விண்ணப்பங்கள் <Date> முதல் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், <Date> திகதி வரை அவை ஏற்றுக்கொள்ளப்படும்.
இலங்கையில் சந்தைப்படுத்தல் சமூகத்தின் உச்ச அமைப்பான SLIM, சந்தைப்படுத்தலின் மகத்துவத்தை வளர்த்து, தொழிற்துறையில் அதியுயர் தொழில்ரீதியான தராதரங்களை ஊக்குவிக்கும். கடந்தகாலங்களில் டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் நாட்டின் முன்னணி விருதுகள் நிகழ்வாக SLIM DIGIS தனது ஸ்தானத்தை உறுதியாக நிலைநாட்டியுள்ளது. SLIM DIGIS ஆனது தேசிய அங்கீகாரத்தை வழங்குவது மட்டுமல்லாது, இலங்கை தனது டிஜிட்டல் சந்தைப்படுத்தல் திறமைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு இடமளித்து, சர்வதேச விருது நிகழ்வுகளுக்கான அத்திவாரமாக இது அமைவதால், இதற்கு விண்ணப்பிக்குமாறு விளம்பர முகவர் நிறுவனங்களும், வாடிக்கை நிறுவனங்களும் ஊக்குவிக்கப்படுகின்றன.
SLIM DIGIS 2.4 இன் ஆரம்பம் குறித்து SLIM இன் தலைவர் கயான் பெரேரா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இன்றைய நிலைமையில், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் என்பது டிஜிட்டல் தளங்களினூடாக தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி, ஈடுபாடுகளைப் பேணுவது என்பது அன்றி, டிஜிட்டல்மயமான உலகில் தொடர்பாடல் மற்றும் வர்த்தகத்தின் பரிணாமத்தை உள்வாங்கிக் கொள்வதாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மூலோபாயங்கள் மற்றும் செயல்பாடுகளின் வினைதிறனை மதிப்பிடும் உச்ச மேடையாக சந்தைப்படுத்தல் சமூகத்தின் மத்தியில் தனது ஸ்தானத்தை SLIM DIGIS சிறப்பாக ஸ்தாபித்துக்கொண்டுள்ளது. இந்த ஆண்டிலும், அனைத்து துறைகளிலிருந்தும் நாட்டின் உச்ச வர்த்தகநாமங்கள் மத்தியில் மயிர்கூச்செறியும் போட்டியை SLIM DIGIS சந்திக்கும் என நாம் எதிர்பார்ப்பதுடன், டிஜிட்டல் துறையில் தமது திறமையை இதன் மூலமாக வெளிக்காண்பிக்க வழிகோலும்,” என்று குறிப்பிட்டார்.
SLIM நிகழ்வுகள் மற்றும் நிலைபேற்றியலுக்கான உப தலைவர் கலாநிதி டில்ஹான் சம்பத் ஜெயதிலக அவர்கள் இதை எதிரொலித்து தனது கருத்தினை பகிர்ந்து கொள்கையில், “ஏராளமான படைப்பாற்றலை காணக்கூடிய ஒரு துறையாக டிஜிட்டல் காணப்படுவதுடன், பலரும் இதைநோக்கி ஈர்க்கப்பட்டு வருவதுடன், இது இலங்கையில் டிஜிட்டல் படைப்பாற்றலை மையப்படுத்தி, சீரான கட்டமைப்பொன்றை தோற்றுவிப்பதற்கு உதவியுள்ளது. மற்றுமொரு ஆண்டில் இந்த பயணத்தில் எம்முடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரினதும் மகத்தான உழைப்பிற்கு அங்கீகாரமளிப்பதில் SLIM பெருமை கொள்கின்றது,” என்று குறிப்பிட்டார்.
SLIM DIGIS 2.4 செயற்திட்ட தலைவரான திருமதி. கௌஷலா அமரசேகர இது குறித்து ஆர்வத்துடன் தனது கருத்தை வெளியிடுகையில், “இலங்கையில் ‘Celebrate Digital Mastery’ ஐக் கொண்டாடும் வகையில் SLIM DIGIS 2.4 இன் ஆரம்பம் குறித்து நாம் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளோம். நுழைவு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை ஆரம்பிக்கின்றமை குறித்து பெரும் ஆர்வத்துடன் உள்ளதுடன், தமது மகத்தான பணியை வெளிக்காண்பிக்குமாறு டிஜிட்டல் சமூகத்திற்கு நாம் அழைப்பு விடுவதுடன், எமது விருதுகள் வழங்கும் நிகழ்வுக்காக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ்விருதுகள் மகத்துவத்திற்கு அங்கீகாரமளித்து, புத்தாக்கத்தை வளர்த்து, திறமைசாலிகள் பிரகாசிப்பதற்கான மேடையை வழங்கி, உலகளாவிய டிஜிட்டல் துறையில் இலங்கையை மேல்நிலைக்குக் கொண்டு செல்லும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் துறையினர் மத்தியில் அங்கீகாரத்தைச் சம்பாதித்து, விருதுகளை வென்றுகொள்வதற்கான மேடையை இது வழங்குவதுடன், எமது துடிப்பான தொழிற்துறையிலுள்ள திறைமைசாலிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. டிஜிட்டல் மகத்துவத்தைக் கொண்டாடி, மேம்படுத்துவதற்கு எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்,” என்று குறிப்பிட்டார்.
நடுவர் குழுவின் தலைவர் திரு. உமைர் வொலிட் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “நடுவர் குழுவின் தலைவர் என்ற வகையில், SLIM DIGIS என்பது வெறுமனே ஒரு கொண்டாட்டம் என்பதுடன் நின்றுவிடாது, எமது தேசத்தின் டிஜிட்டல் துறையை முன்னோக்கிக் கொண்டு செல்கின்ற திறமைசாலிகள் மற்றும் புத்தாக்கத்திற்கான அங்கீகாரம் என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகின்றேன். இவ்விருதுகள் வெற்றிக்கிண்ணங்களைப் பெறுவதற்கும் அப்பாற்பட்டவை, அவை சாதனைகளின் அடையாளம், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மகத்துவத்தின் உறுதிப்படுத்தல், மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான உந்துசக்தி. டிஜிட்டல் சந்தைப்படுத்தலுக்கு இலங்கையின் அங்கீகாரம் கிடைக்கும் மேடையாக அமைந்துள்ள SLIM DIGIS விருதுகள் இத்தொழிற்துறையினுள் மகத்துவத்திற்கான கலாச்சாரத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இலங்கை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையின் எதிர்காலம் மிகவும் நம்பிக்கையூட்டுவதாக தென்படுவதுடன், அதனை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இந்த விருதுகள் உந்துசக்திக்கான மூலகருவியாக அமைந்துள்ளன. இந்த ஆண்டு SLIM DIGIS பெருவிழாவில் பங்குபற்றுமாறு இலங்கையின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சிந்தனையாளர்களுக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்,” என்று குறிப்பிட்டார்.
இந்த பெருமதிப்பு மிக்க விருதுகளுடன் கிடைக்கின்ற நன்மதிப்புடனான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு போட்டியிட்டு, தமது டிஜிட்டல் திறமைகளின் கைவண்ணத்தை காண்பிக்குமாறு இத்தொழில் சார்ந்தவர்களையும், நிறுவனங்களையும் வலியுறுத்துவதுடன், அனைத்து துறைகளிலிருந்தும் விண்ணப்பங்களுக்கு SLIM DIGIS 2.4 அழைப்பு விடுகின்றது. மேலதிக