INSEE Ecocycle ஆனது Green Industry Awards 2024 விருதுகள் நிகழ்வில் தங்க விருதை வென்றுள்ளது

11

இலங்கையில் நிலைபேணத்தக்க கழிவு முகாமைத்துவத்தில் முன்னோடியான INSEE Ecocycle ஆனது Green Industry Awards 2024 விருதுகள் நிகழ்வில் மதிப்பிற்குரிய தங்க விருதை வென்று பெருமையடைந்துள்ளது. நிலைபேணத்தக்க கைத்தொழில் அபிவிருத்திக்கான பசுமை கைத்தொழில் முயற்சிகள் தொடர்பான 1வது சர்வதேச கண்காட்சி நிகழ்வின் போது கைத்தொழில் அபிவிருத்திச் சபையால் இது வழங்கப்பட்டுள்ளது. Sound Chemical Management பிரிவில் நிலைபேணத்தக்க கைத்தொழில் நடைமுறைகளுக்கு INSEE Ecocycle ஆற்றியுள்ள புத்தாக்கத்துடனான பங்களிப்புக்களுக்கான இவ்விருது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது ஜுன் 23ஆம் திகதியன்று BMICH இல் இடம்பெற்றது.              

கைத்தொழில் கழிவு சார்ந்த சவால்கள் தொடர்பில் ஓயாத அர்ப்பணிப்புடன், முன்னோடித் தீர்வுகளை வழங்குவதற்காக கைத்தொழில் அபிவிருத்திச்சபையானது INSEE Ecocycle க்கு அங்கீகாரமளித்துள்ளது. 2003 ஆம் ஆண்டில் இயங்க ஆரம்பித்தமை முதற்கொண்டு, புதிய தொழில்துறை தராதரங்களை நிலைநாட்டி, நிலைபேணத்தக்க கழிவு முகாமைத்துவம் மற்றும் சூழல் சேவைகளை வழங்குவதில் INSEE Ecocycle முன்னிலை வகித்து வந்துள்ளது. கடந்த காலங்களில் 1 மில்லியன் மெட்ரிக் தொன்னுக்கும் மேற்பட்ட கழிவுகளை இந்நிறுவனம் வெற்றிகரமாக நிர்வகித்துள்ளதுடன், உள்நாட்டில் கூட்டு நிறுவனங்கள், பல்தேசிய கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச ஸ்தாபனங்கள் அடங்கலாக, 1,500 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் ஒத்துழைத்துச் செயற்பட்டுள்ளது. இச்சாதனையானது சுற்றுச்சூழலைப் பேணுதல் மற்றும் நிலைபேற்றியல் மீது INSEE Ecocycle  காண்பிக்கும் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.    

INSEE Ecocycle இன் பொது முகாமையாளர் சுஜித் குணவர்த்தன அவர்கள் இச்சாதனை குறித்து கருத்து வெளியிடுகையில், “Green Industry Awards 2024 விருதுகள் நிகழ்வில் INSEE Ecocycle இற்கு கிடைக்கப்பெற்ற அங்கீகாரமானது நிலைபேணத்தக்க கழிவு முகாமைத்துவத்தில் எமது தலைமைத்துவத்தை மீள உறுதிப்படுத்தியுள்ளது மட்டுமல்லாது, சூழலைப் பாதுகாப்பதில் மகத்துவத்திற்கான ஒரு முன்னுதாரணத்தையும் நிலைநாட்டியுள்ளது. தூய்மையான, பசுமையை தேசத்தைத் தோற்றுவிப்பதை நோக்கிய எமது பயணத்தில் அங்கம் வகிக்கின்ற ஊழியர்கள், கூட்டாளர்கள் மற்றும் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரின் முயற்சிகளின் அர்ப்பணிப்பிற்கு இத்தங்க விருது சான்றாக அமைந்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.   

கைத்தொழில் கழிவு முகாமைத்துவம், மாநகர திண்மக்கழிவு முகாமைத்துவம், விரைவாக விற்பனையாகின்ற நுகர்வோர் தயாரிப்பு கழிவுகளிலிருந்து வளத்தை மீட்டெடுத்தல், இரசாயன கழிவு முகாமைத்துவம், கைத்தொழில் துறை தூய்மையாக்கம், பிளாஸ்திக் மீள்சுழற்சி, பகுப்பாய்வு ஆய்வுகூட சேவைகள் மற்றும் பல அடங்கலாக, ஒட்டுமொத்த தீர்வுகளையும் வழங்கும் வகையில் தனது சுற்றுச்சூழல் சேவைகளுக்கு INSEE Ecocycle தன்னை விஸ்தரித்துள்ளது. ஒட்டுமொத்த கழிவு முகாமைத்துவ தீர்வுகள் வழங்குனர் என்ற வகையில், சேகரிப்பது முதற்கொண்டு இறுதியாக அப்புறப்படுத்தப்படும் வரை கழிவு முகாமைத்துவ நடைமுறையின் ஒவ்வொரு பாகத்திற்கும் உரிய தீர்வு முன்னெடுக்கப்படுவதை INSEE Ecocycle உறுதி செய்கின்றது.   

மேலும், நுகர்வுக்குப் பின்னரான பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை நிர்வகிப்பதற்கு, நிறுவனங்களுக்கான உற்பத்தியாளர் பொறுப்புடமை ஸ்தாபனமாக INSEE Ecocycle செயற்பட்டு வருகின்றது. நிறுவனத்தின் முழுமையான அணுகுமுறையானது ஒட்டுமொத்த மதிப்புச்சங்கிலியையும் உள்ளடக்குவதுடன், நிலைபேணத்தக்க கழிவு முகாமைத்துவத்தில் முன்னிலையாளர் என்ற தனது வகிபாகத்தையும் மீள உறுதிப்படுத்தியுள்ளது. இதை விட, PCB மாசுற்ற டிரான்ஸ்போமர் எண்ணெய், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் காலாவதியான இரசாயனப் பொருட்களை அப்புறப்படுத்தல் பேபான்ற தேசிய மட்டத்திலான கழிவு முகாமைத்துவ செயற்திட்டங்களையும் INSEE Ecocycle பொறுப்பேற்றுள்ளதுடன், அனைவருக்கும் தூய்மையான மற்றும் பாதுகாப்பான சூழலுக்குப் பங்களிக்கின்றது.      

Green Industry Awards 2024 நிகழ்வில் தங்க விருதை வென்றுள்ளமை, INSEE Ecocycle இன் சாதனைகளைப் போற்றிக் கொண்டாடுவது மட்டுமல்லாது, கழிவு முகாமைத்துவத்தில் சூழல் நிலைபேற்றியல் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் மீது நிறுவனம் தொடர்ந்தும் காண்பித்து வருகின்ற அர்ப்பணிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here