DFCC வங்கி பொசன் பக்தி கீதம் மற்றும் அன்னதான நிகழ்வுகள் கொழும்பிலும், கண்டியிலும் இடம்பெற்றுள்ளன

22

DFCC வங்கி, கொழும்பிலும், கண்டியிலும் பக்தி கீதம் மற்றும் அன்னதான நிகழ்வுகளுடன் பொசன் பௌர்ணமி தினத்தை அண்மையில் அனுட்டித்துள்ளது. கொழும்பில் அதன் நிகழ்வானது 2024 ஜுன் 20 அன்று DFCC வங்கி பொரளை கிளையில் இடம்பெற்றதுடன், கண்டியில் அதன் நிகழ்வானது 2024 ஜுன் 21 (பொசன் பௌர்ணமி தினம்) அன்று ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதான மண்டபத்திற்கு  முன்னால் இடம்பெற்றது. டிஜிட்டல் இடமளிப்பில் வங்கி கவனம் செலுத்தியுள்ளமைக்கு அமைவாக, இந்நிகழ்வுகள் DFCC வங்கியின் முகநூல் மற்றும் யூடியூப் அலைவரிசை ஆகியவற்றினூடாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த இரு நிகழ்வுகளில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்துகொண்டதுடன், வங்கியின் அணிகள் அவர்களை இன்முகத்துடன் வரவேற்று, உபசரித்திருந்தனர்.

DFCC வங்கியின் தலைவர் ஜெ. துரைரட்ணம், பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா மற்றும் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அணி, விசேட விருந்தினர்கள், மதிப்புமிக்க வாடிக்கையாளர் என பலரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டமை இவற்றின் முக்கியத்துவத்தைக் காண்பித்துள்ளது. கண்டியில் இடம்பெற்ற DFCC பக்தி கீதம் நிகழ்வில் ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதனே நிலமே பிரதீப் நிலங்க தெல, ஸ்ரீ நாத தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே ஷானக பண்டாரநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, சப்பிரகமுவா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னக்கோன், கண்டி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் மகிந்த திசாநாயக்க, கண்டி சிட்டி சென்டரின் தலைவர் துசித விஜயசேன மற்றும் கண்டி வர்த்தக சங்கங்களின் தலைவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.   

DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் சமூகத்தின் மீது வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீளவும் உறுதிப்படுத்தினார். அவர் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “பொசன் பௌர்ணமி தினம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை அனுட்டிக்கும் வகையில் இந்த நிகழ்வுகளை நடாத்தியுள்ளமை எமக்கு கிடைக்கப்பெற்ற ஒரு கௌரவமாகும். இலங்கைக்கு பௌத்தத்தின் வருகையை பொசன் பௌர்ணமி கொண்டாடும் அதேசமயம், ஐக்கியம், கருணை மற்றும் பெருந்தன்மை போன்ற கோட்பாடுகளை பிரதிபலிப்பதற்கான ஒரு தருணமாகவும் அமைந்துள்ளது. ஆகவே, கொழும்பிலும், கண்டியிலும் எமது நிகழ்வுகளின் மூலமாக பங்களிக்க முடிந்துள்ளமை எமக்கு உண்மையில் மகிழ்ச்சியளிக்கின்றது. எமது சமூகங்கள் மீது நாம் கொண்டுள்ள ஓயாத அர்ப்பணிப்பை இச்சந்தர்ப்பத்தில் மீளவும் உறுதிப்படுத்துவதுடன், இலங்கையில் அனைவருக்கும் ஏற்ற வங்கியாக தொடர்ந்தும் வழங்கவுள்ள சேவையையிட்டு மிகுந்த ஆவலுடன் உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here