DFCC வங்கி சிறு தொழில் பால் உற்பத்தியாளர்களுக்கு உதவ, ரூபா 500 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது

29

இலங்கையின் பாலுற்பத்தித் தொழில்துறையை வலுப்படுத்துவதில் சாதனைமிக்க ஒரு முயற்சியாக, நிலைபேணத்தக்க அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதில் தனது அர்ப்பணிப்புக்கு அமைவாக, சிறு தொழில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக ரூபா 500 மில்லியன் தொகையை DFCC வங்கி ஒதுக்கியுள்ளது. DFCC வங்கியின் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிப் பிரிவின் சிந்தனையில் உதித்த இந்த அர்ப்பணிப்புடனான முயற்சி, அமெரிக்க விவசாய திணைக்களத்தின் (United States Department of Agriculture -USDA) உதவியுடனான Market-Oriented Dairy (MOD) செயற்திட்டத்தின் பயனாளிகளான பாலுற்பத்தியாளர்களுக்கு கடன் வழங்கிய வெற்றிகரமான அனுபவத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக DFCC வங்கியால் வழங்கப்படுகின்ற இந்த விசேட கடன் திட்டமானது, சலுகை அடிப்படையிலான வட்டி வீதங்களுடன் இத்துறைக்கு முக்கியமான ஆதரவை வழங்கி, குறிப்பாக இலங்கையின் பாலுற்பத்தித் துறையில் முக்கிய அங்கம் வகிக்கின்ற சிறு தொழில் பால் உற்பத்தியாளர்களுக்கு, அடிமட்டத்தில் வளர்ச்சியை ஊக்குவிப்பதே அதன் நோக்கமாகும்.         

DFCC வங்கியின் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிப் பிரிவின் உப தலைவர் சந்தன வணிகசேகர அவர்கள் Market-Oriented Dairy (MOD) செயற்திட்டம் தொடர்பான நிறைவு வைபவத்தின் போது இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். “Sri Lanka Dairy-The Art of the Possible” (இலங்கை பால் உற்பத்தி – சாத்தியங்களின் கலை) என்ற நிகழ்வானது 2024 மே 17 அன்று கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இலங்கையில் சிறு தொழில் பாலுற்பத்தியாளர்களுக்கு உதவுவதில் MOD செயற்திட்டத்தின் சாதனைகள் இந்நிகழ்வில் கொண்டாடப்பட்டன.     

பாலுற்பத்தியாளர்களை தொழில்முயற்சியாளர்களாக மாற்றும் MOD இன் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கின்ற மதிப்புச்சங்கிலி கடன் கட்டமைப்பொன்றினூடாக 2,500 க்கும் மேற்பட்ட பாலுற்பத்தியாளர்களுக்கு கடன் வசதிகளை வெற்றிகரமாக வழங்கியுள்ள DFCC வங்கியின் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிப் பிரிவின் மகத்தான வளர்ச்சியை நிகழ்வில் சந்தன அவர்கள் சுட்டிக்காட்டினார். இக்கட்டமைப்பானது தொழில்துறையின் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், விவசாய கடன் வழங்கலுக்கு திறன்மிக்க மற்றும் விஸ்தரிக்கப்படக்கூடிய அணுகுமுறையையும் வெளிக்காண்பித்துள்ளது.

சந்தன அவர்கள் மேலும் விளக்கமளிக்கையில், “இந்த அளவில் கணிசமான தொகையை DFCC வங்கி ஒதுக்கீடு செய்துள்ளமை பாலுற்பத்தித் துறை மீது வங்கி கொண்டுள்ள ஓயாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. முன்மொழியப்பட்டுள்ள DFCC-MOD பாலுற்பத்தியாளர்கள் நம்பிக்கை நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆதரவளிப்பதனாலும், தினசரி 100 லீட்டர் பாலை உற்பத்தி செய்கின்ற பாலுற்பத்தி தொழில்முயற்சியாளர்களைக் கொண்ட குழாமொன்றைத் தோற்றுவிப்பதில் திறன்மிக்கதென நிரூபிக்கப்பட்டுள்ள MOD இன் கட்டமைப்புடனும், சிறு தொழில் பாலுற்பத்தியாளர்களின் நிதியியல் நிலைபேற்றியல் மற்றும் வளர்ச்சி வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கு தேவையான ஆணித்தரமான வழிமுறைகளை நாம் முன்னெடுக்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.    

பாலுற்பத்தித் துறைக்கு கணிசமான அளவிலான நிதி முதலீட்டை இம்முயற்சி காண்பிப்பதுடன், இலங்கையில் கணிசமான அளவில் பொருளாதார மற்றும் சமூக விளைவை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ள முக்கியமான தொழில்துறைகள் மீது வங்கியின் மூலோபாயரீதியான கவனத்தையும் சுட்டிக்காட்டுகின்றது. சலுகை வட்டி வீதங்களில் கடனை வழங்குவது, இம்முயற்சியை மீது பெருமளவில் ஈர்ப்பினை ஏற்படுத்தி, சிறுதொழில் பாலுற்பத்தியாளர்களுக்கு நற்பயனளிக்கின்றது. மதிப்புச்சங்கிலி மேம்பாட்டின் மீதான கவனம், 10 முக்கிய பெறுபேற்றுத்திறன் குறிகாட்டிகளை (KPI) உள்வாங்கிக் கொள்ளல் மற்றும் MOD இன் Climate-Smart Dairy (CSD) முயற்சிக்கான ஆதரவு ஆகியன நிலைபேற்றியல் கொண்ட விவசாய நடைமுறைகள் மீது வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் வலியுறுத்துவதாக உள்ளது.  

இலங்கையை தளமாகக் கொண்ட Market-Oriented Dairy (MOD) செயற்திட்டத்திற்கு United States Department of Agriculture (USDA) ‘Food for Progress’ முயற்சி நிதியுதவியை அளித்துள்ளதுடன், வோஷிங்டன் மாநகரத்தை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பான Improving Economies for Stronger Communities (IESC) ஆல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. பாலுற்பத்தியாளர்கள் தாம் உற்பத்தி செய்கின்ற பாலின் அளவை இரட்டிப்பாக்கிக் கொள்வதற்கு தேவையான தொழில்நுட்ப அறிவை அவர்களுக்கு வழங்கி, தொழில் முயற்சி மற்றும் வணிகம் சார்ந்த சிந்தனையைத் தோற்றுக்கின்றமை, பாலுற்பத்தியாளர்கள் சாமர்த்தியமான முதலீடுகளை மேற்கொள்வதற்கு உதவி, வங்கியும் நம்பிக்கையுடன் மதிப்பீடு செய்து கடனை வழங்குவதற்கு வழிவகுத்துள்ளது.       

இலங்கையில் முக்கியமான தொழில்துறைகள் மத்தியில் நிலைபேணத்தக்க அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு குறிப்பிட்ட இலக்குடனான உதவி மற்றும் மதிப்புச்சங்கிலிக்கான கடன் வழங்கலுக்கான வலுவான முக்கியத்துவம் ஆகியவற்றுடன், பாலுற்பத்தித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, அதன் நீண்டகால நிலைபேற்றியல் மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை உறுதி செய்வதில் DFCC வங்கி முக்கிய பங்காற்றி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here