500 மாணவர்களுக்கு பட்டப்படிப்புக்கான புலமைப்பரிசில் திட்டம் Amazon Campus இனால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது

26

15 வருடங்களாக கல்வித்துறையில் பல சாதனைகளையும் பல புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வெற்றிநடைபோடும் Amazon College & Campus 27.07.2024 ஆம் அன்று தனது புதிய சந்தைப்படுத்தல் பிரிவினை ஆரம்பிக்கும் நிகழ்வில் 500 மாணவர்களுக்கான பட்டப்படிப்புக்களை கற்கக் கூடிய வகையில் இந்த திட்டத்தினை அறிமுகம் செய்தது. இன்று எத்தனையோ மாணவர்களின் பட்டதாரி ஆவதற்கான கனவு நிறைவேறாமல் காணப்படுகின்றது. காரணம் பல கல்வி நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட பாடநெறி கட்டணம் ஆகும்! இதனைக் கருத்தில் கொண்டு Amazon College & Campus UGC இனால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் உதவியோடு மிகக் குறைந்த கட்டணத்தில் BA in Political Science மற்றும் Bachelor of Education ஆகிய பாடநெறிகளுக்கான புலமைப்பரிசில்களை மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.Amazon College & Campus இனால் ஒரு போட்டிப்பரீட்சை வைக்கப்பட்டு மாணவர்கள் பெறும் புள்ளியின் அடிப்படையில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படும் என Amazon College & Campus இன் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் தெரிவித்தார். இது மும்மொழிகளிலும் வழங்கப்படவுள்ளது. இந்த புலமைப்பரிசில் திட்டத்தினை Amazon College & Campus பணிப்பாளர் திரு. இல்ஹாம் மரிக்கார் அவர்களுக்கு கல்வி அமைச்சரின் தமிழ் பிரிவு பணிப்பாளர் திரு. சேதுரத்னம் அவர்களும், பம்பலபிட்டி பொலிஸ் பிரிவு அதிகாரியுடன் இணைந்து வழங்கினார்கள்.  இந்த திட்டத்தில் இணைய விரும்புகின்றவர்கள் +94741 969 918 / +94765 204 605 / +94770 822 218 இந்த இலக்கத்தினூடாக அல்லது WhatsApp மூலமாக தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். www.amazoncollege.lk

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here