2024, நவம்பரில் டுபாயில் நடைபெறவுள்ள இலங்கை வர்த்தக கண்காட்சி

27

துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – இலங்கைக்கும் வளைகுடா பிராந்தியத்துக்கும் இடையிலான வர்த்தக அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இலங்கை வர்த்தக கண்காட்சி டுபாய் 2024 –‘Sri Lanka Trade Fair Dubai 2024′ (www.srilankatradefair.org) கண்காட்சி 2024, நவம்பர் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம், துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிற வளைகுடா நாடுகளில் உள்ள வர்த்தக சபைகளின் முழு ஆதரவுடன் நடைபெறவுள்ளது. இலங்கை வர்த்தக கண்காட்சி துபாய் 2024 ஆனது இலங்கையின் சிறந்த தயாரிப்புகள், சேவைகள் மற்றும் புதுமைகளை காட்சிப்படுத்துகிறது, இது இலங்கை வியாபாரங்களை வளைகுடா பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள 15,000 இற்கும் மேற்பட்ட வாங்குவோர், முதலீட்டாளர்கள் மற்றும் பங்காளர்களுடன் இணைவதற்கு ஒரு முக்கிய தளத்தை வழங்குகிறது.

“இந்த தனித்துவமான நிகழ்வை டுபாயில் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது இலங்கை நிறுவனங்களுக்கு சர்வதேச அரங்கில் தங்கள் சிறப்பை வெளிப்படுத்துவதற்கான முக்கியமான வாய்ப்பை வழங்குகிறது” என நிகழ்வின் பிரதான அமைப்பாளரான பிக்ஸல் அட்வர்டைசிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சஞ்சய ரத்நாயக்க தெரிவித்தார். “இந்த நிகழ்வு இலங்கையில் உள்ள வியாபாரங்களின் திறன்களை முன்னிலைப்படுத்துவது மட்டுமன்றி அர்த்தமுள்ள வர்த்தக தொடர்புகளை வளர்க்கின்றது. இலங்கை வர்த்தக கண்காட்சி துபாய் 2024 இல் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து இலங்கை வர்த்தகர்களையும் அழைக்கிறோம். புதிய சந்தைகளை ஆராய்வதற்கும், நீடித்த கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும், இலங்கையின் ஏற்றுமதி துறையின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு பங்களிப்பதற்கும் துபாயில் நடைபெறும் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளுங்கள்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை வர்த்தக கண்காட்சி துபாய் 2024, பல்வேறு வகையான இலங்கை தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தும் 100 இற்கும் மேற்பட்ட அங்காடிகளை / நிலையங்களைக் கொண்டிருக்கும். தொழில்துறை வல்லுனர்கள், சாத்தியமான முதலீட்டாளர்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள்கள் உட்பட பலரினதும் பங்குபற்றுதலுடன் இலங்கைக்கும் வளைகுடாவிற்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான தலைப்புகளில் கருத்தரங்குகள் மற்றும் குழு விவாதங்கள் என்பவற்றையும் இந்நிகழ்வு உள்ளடக்கியுள்ளது. மேலும், இலங்கையின் செழுமையான பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் கலாச்சார நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட முன்னணி நிகழ்வு முகாமைத்துவ நிறுவனமான குளோபோ ஏசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கை தூதரகம், துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம், இலங்கை மற்றும் வளைகுடா நாடுகளில் இயங்கும் பல்வேறு வர்த்தக சபைகள் உள்ளிட்ட முக்கிய பங்காளர்களுடன் இணைந்து, பிக்ஸல் அட்வர்டைசிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம், (+94 77 400 6888) இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கைக்கும் வளைகுடா பிராந்தியத்துக்கும் இடையில் வர்த்தக அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவிக்கும் தளத்தை உருவாக்குவதே எமது நோக்கமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here