ஹேமாஸ் மருத்துவமனை 3D Laparoscopic சிறுநீரக மாற்று சிகிச்சை தொழில்நுட்பத்துடன் புதிய இலக்கை எட்டியுள்ளது

12

இலங்கையில் மிகவும் அபிமானம் பெற்ற சுகாதாரப் பராமரிப்பு வர்த்தகநாமமான ஹேமாஸ் மருத்துவமனை, சிறுநீரக மாற்று சிகிச்சைகளுக்கு 3D laparoscopic donor nephrectomies தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, அதிநவீன மருத்துவ சிகிச்சை முறைகளில் புதிய சாதனை மைல்கல் ஒன்றை நிலைநாட்டியுள்ளமை குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது. நீடித்த சிறுநீரக வியாதி அதிகரிக்கும் அபாய நிலையுடன், சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகளுக்கான தேவையும் நாட்டில் அதிகரித்துச் செல்லும் நிலையில், இந்த தொழில்நுட்ப மேம்பாடு இலங்கைக்கு மிகவும் பயனளிக்கும்.       

சிறுநீரகத்தை தானமாக வழங்குவதில் 3D laparoscopic வழிமுறையானது மாற்று அறுவைச் சிகிச்சையில் பாரியதொரு முன்னேற்றமாகக் காணப்படுகின்றது.

பாரம்பரிய சிறுநீரக அறுவைச் சிகிச்சை பொதுவாக,

  • திறந்த முறை அறுவைச்சிகிச்சையாக காணப்படுவதுடன்
  • அடிவயிற்றுப் பகுதியில் கீறியே அந்த வெட்டினூடாக இதனை மேற்கொள்ள வேண்டி உள்ளதுடன்,
  • சிகிச்சையின் பின்னர் குணமடைவதற்கு நீண்ட காலம் எடுக்கின்ற நிலையில், சிக்கல் நிலைமைகளின் கீழ் கூடுதலான ஆபத்துக்களையும் கொண்டுள்ளது. 

அதற்கு மாறாக, 3D laparoscopic தொழில்நுட்பமானது குறைந்தபட்ச ஊடுருவலுடன் அதிநவீன அறுவைச்சிகிச்சை நடைமுறைக்கு வழிகாட்டுகின்ற நவீன 3D படவாக்கத்தைப் பயன்படுத்துகின்றது. 

  • சிறு அளவிலான தளம்புகள்
  • குறைந்த வலி
  • விரைவாக குணமடைதல்
  • அறுவைச்சிகிச்சையின் பின்னர் ஏற்படும் சிக்கல்களைக் குறைத்தல் 
  • குடலிறக்க நோய் ஏற்படும் ஆபத்துக்கள் குறைவடைதல்
  • குறைந்த அளவிலான தளும்புகளுடன் சிகிச்சை நிறைவடைந்து வைத்தியசாலையை விட்டு விரைவாக வெளியேறும் அனுபவத்தை நோயாளர்களுக்கு வழங்குவதுடன்,
  • சிறுநீரகத்தை நன்கொடையளிப்பவருக்கு வியாதிகள் ஏற்படல் மற்றும் மரணம் சம்பவித்தல் ஆகியவற்றையும் ஒட்டுமொத்தமாக குறைக்கின்றது.           

ஹேமாஸ் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் மற்றும் தரம் ஆகியவற்றுக்கான பணிப்பாளரான வைத்தியர் மலித் அத்தபத்து அவர்கள் விளக்குகையில், “3D laparoscopic donor nephrectomies இன் அறிமுகம், எமக்கும், இலங்கையின் சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கும் ஒரு முக்கியமான சாதனையாக மாறியுள்ளது. சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சைகளுக்கு ரோபோ donor nephrectomies தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மேற்கொள்ளும் வகையில் அறுவைச்சிகிச்சை தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது. மேம்பட்ட நடைமுறை, சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சைகளின் துல்லியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது மாத்திரமன்றி, அதிலிருந்து விரைவாக குணமடைவதையும் கணிசமாக மேம்படுத்துகின்றது. இரத்த இழப்பைக் குறைத்தல் மற்றும் மாற்று இரத்தத்தை ஏற்றுதல் ஆகியவற்றையும் இது குறைப்பதுடன், சில வகை சிறுநீரக புற்றுநோய்கள் (renal carcinomas) போன்ற ஏனைய சிறுநீரக வியாதி நிலைமைகளுக்கு எதிர்காலத்தில் சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது எழக்கூடிய சிக்கல்களையும் போக்க அல்லது குறைக்க உதவுகின்றது. இந்த நன்மைகளின் பலனாக, அறுவைச்சிகிச்சைக்கு ஏற்படக்கூடிய ஒட்டுமொத்த செலவுகளை குறைக்க 3D laparoscopic தொழில்நுட்பத்தால் உதவ முடியும் என்பதுடன், இது நோயாளர்களுக்கு கூடுதல் நன்மையாக உள்ளது. அந்த வகையில் இலங்கைக்கு இந்த புத்தாக்கமான சிகிச்சை முறையை கொண்டு வருவதில் முன்னிலை வகிப்பதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், நோயாளரை மையமாகக் கொண்ட பராமரிப்பு மற்றும் மருத்துவ முன்னேற்றம் ஆகியவற்றின் மகத்துவத்தில் எமது ஓயாத அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகின்றது,” என்று குறிப்பிட்டார்.             

சிறுநீரக தானம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் உயிரைக் காக்கும் இந்த மனிதாபிமான முயற்சியை கருத்தில் கொள்வதற்கு இன்னும் கூடுதலான அளவில் மக்களை ஊக்குவித்தலில்  ஹேமாஸ் மருத்துவமனை முன்னின்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. 3D laparoscopic வழிமுறையுடன் தொடர்புபட்ட, சிகிச்சையின் பின்னர் விரைவாக குணமடைவதற்கு வாய்ப்பு மற்றும் சிக்கல்கள் தொடர்பான ஆபத்துக்கள் குறைவடைதல் போன்ற சிறுநீரகத்தை தானமாக வழங்கக்கூடியவர்கள் கருத்தில் கொள்ளக்கூடிய பல அக்கறைகளைப் போக்க உதவி, அதன் மூலமான தானம் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையின் தேவையை எதிர்நோக்கியுள்ள பலரின் உயிர்களைக் காக்க முடியும். சிறுநீரகத்தை தானமாக வழங்குபவர் வழக்கமாக ஆரோக்கியமான நபராக உள்ளதுடன், பாரிய அறுவைச்சிகிச்சை நடைமுறைகளுக்கு உள்ளாக வேண்டி ஏற்படுவதுடன், பாரம்பரியமாக இதற்கு அடிவயிற்றுப் பகுதியில் பாரிய வெட்டுத் தளும்புடன் சிறுநீரகத்தை தானமாகப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை தொடர்பில் ஏற்படுகின்ற அச்சங்களையும், கவலைகளையும் 3D laparoscopic சிகிச்சை முறை போக்குகின்றது.      

தொடர்ந்தும் அதிநவீன மருத்துவ சிகிச்சைமுறைகளை அறிமுகம் செய்து வருகின்ற ஹேமாஸ் மருத்துவமனை, நோயாளர்களுக்கு கிட்டும் பலன்களை மேம்படுத்தி, ஒட்டுமொத்த சுகாதாரப் பராமரிப்பு அனுபவத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. 3D laparoscopic nephrectomies சிகிச்சை முறையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளமை, நோயாளர்கள் சாத்தியமான அளவுக்கு மிகச் சிறந்த சிகிச்சையையும், பலன்களையும் பெறுவதை உறுதி செய்து, அதிநவீன தொழில்நுட்பத்தை கருணை மிக்க பராமரிப்புடன் இணைக்கும் ஹேமாஸ் மருத்துவமனையின் குறிக்கோளை பிரதிபலிக்கின்றது. இந்த அறிமுகத்துடன், இலங்கையில் நோயாளர் அனுபவம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பின் மகத்துவம் ஆகியவற்றில் புதிய தர ஒப்பீட்டு நியமங்களை நிலைநாட்டுவதில் தனது அர்ப்பணிப்பை மீளவும் உறுதிப்படுத்தி, சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான புத்தாக்கத்தில் முன்னோடி என்ற தனது ஸ்தானத்தை ஹேமாஸ் மருத்துவமனை மேலும் வலுப்படுத்தியுள்ளது.    இந்த அதிநவீன சிகிச்சை முறை குறித்த கூடுதல் விபரங்களை அறிந்துகொள்ள, அல்லது சிகிச்சையை மேற்கொள்வதற்கு திட்டமிட, அல்லது ஹேமாஸ் மருத்துவமனை வழங்குகின்ற ஏனைய சேவைகள் குறித்து அறிந்து கொள்ள தயவு செய்து [email protected] என்ற இணையத்தளத்தைப் பாருங்கள் அல்லது 077 362 7866 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here