ஹட்ச் (HUTCH) நிறுவனம், இலங்கையின் எதிர்கால இசை நட்சத்திரங்களைத் தேடும் முயற்சியில் சக்தி கிறவுண் (Shakthi Crown) நிகழ்ச்சியின் உத்தியோகபூர்வ தொலைதொடர்பாடல் பங்காளராக இணைந்து வலுவூட்டுகிறது

22

இலங்கையின் முன்னணி மொபைல் சேவை வழங்குநர்களில் ஒன்றான ஹட்ச் நிறுவனம், சக்தி கிறவுண் நிகழ்ச்சியின் உத்தியோகபூர்வ தொலைதொடர்பாடல்கள் பங்காளராக கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளமையை பெருமையுடன் அறிவித்துள்ளது. இளம் திறமைசாலிகள் தமது திறமைகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்வதற்கு அவர்களுக்கு உதவுவதில் ஹட்ச் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இந்த கூட்டாண்மை வெளிப்படுத்துகின்றது. சர்வதேச Fortune 500 கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக, 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பாடுகளைக் கொண்டுள்ளதுடன், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் 12 நாடுகளில் தொலைதொடர்பாடல்கள் தொழில்துறையில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகவும் திகழ்ந்து வருகின்ற அதன் தாய் நிறுவனமான CK Hutchison Holdings இன் பக்கபலத்துடன், உலகத்தரம் வாய்ந்த அனுபவங்களை நாட்டில் இளம் தலைமுறையினர் மத்தியில் உட்புகுத்துவதற்கு ஹட்ச் முயற்சி செய்து வருகின்றது.         

25 ஆண்டுகளாக ஊடக தொழில்துறையில் எத்தனையோ தனித்துவ அம்சங்களை முதன்முதலில் அறிமுகப்படுத்திய அலைவரிசை என்ற பெருமையைக் கொண்ட சக்தி தொலைக்காட்சி அலைவரிசையில் மார்ச் 8 ஆம் திகதி முதல் ஒளிபரப்பப்பட்டு வருகின்ற சக்தி கிறவுண் நிகழ்ச்சி, அடுத்த தலைமுறை அணுகுமுறை மற்றும் சர்வதேச போட்டித் தரங்களுடன் இலங்கை இசைத் துறையை மாற்றியமைப்பதற்கு தயாராகவுள்ளது. சாகித்யா கஜமுகன், சந்துரு ராஜசூரியர் மற்றும் ஸ்ரீராம் சச்சி போன்ற தொழில்துறை ஜாம்பவான்களின் வழிகாட்டலுடன், வாகீசன் சிவநாதன், பானு தீபன் மற்றும் மதுஸ்ரீ ஆதித்தன் போன்ற புகழ்பூத்த அனுபவம்மிக்க நடுவர்களின் முன்னிலையில், இப்போட்டியில் பங்குபற்றுகின்றவர்களுக்கு தீவிரமான பயிற்சி மற்றும் வழிகாட்டலுக்கான உத்தரவாதம் கிடைப்பதுடன், அவர்கள் தமது திறமைகளை முழுமையாக வெளிக்கொணர்வதை உறுதி செய்கின்றது. ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் கூட்டாண்மையுடன் இணைந்து, அடுத்த தலைமுறை இசை நட்சத்திரங்கள் வெளிவருவதற்கான மேடையை வழங்கி, இலங்கையின் இசைத் துறையின் உற்சாகம் மற்றும் செழுமையான பாரம்பரியம் ஆகியவற்றை மேம்படுத்துவதே சக்தி கிறவுண் நிகழ்ச்சியின் நோக்கமாகும்.       

சக்தி சுப்பர்ஸ்டார், சக்தி சுப்பர்ஸ்டார் ஜுனியர், மியூசிக் பிரின்சஸ் (Music Princes), குளோபல் சுப்பர்ஸ்டார் (Global Superstar), சக்தி சுப்பர்ஸ்டார் பிரிமீயர் லீக் மற்றும் இசை மகாயுத்தம் போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக எண்ணற்ற பாடகர்,பாடகிகள் பிரகாசிப்பதற்கான மேடையை சக்தி தொலைக்காட்சி அலைவரிசை அவர்களுக்கு வழங்கியுள்ளது. நாடளாவியரீதியில் பாடும் திறமையைக் கொண்டுள்ளவர்களை தேடிக் கண்டறிந்து, அவர்கள் தமது திறமைகளை காண்பிப்பதற்கான மேடையை வழங்கி, இலங்கையின் எதிர்கால இசை நட்சத்திரங்களைக் கண்டறிந்து, வளர்ப்பதற்கு தற்போது சக்தி கிறவுண் நிகழ்ச்சி தயாராகவுள்ளது. இம்மாதம் 8 ஆம் திகதியன்று உள்நாட்டிலும், சர்வதேசரீதியாகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள சக்தி கிறவுண் நிகழ்ச்சி இலங்கையில் இசைத் துறையில் புரட்சியை ஏற்படுத்தவுள்ளது.      

சக்தி கிறவுண் நிகழ்ச்சியுடனான கூட்டாண்மை தொடர்பில் ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ஹம்தி ஹசன் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “சக்தி கிறவுண் நிகழ்ச்சிக்கான உத்தியோகபூர்வ தொலைதொடர்பாடல் பங்காளர் என்ற வகையில், இலங்கையின் இசைத்துறையை உச்சங்களுக்கு இட்டுச்செல்லும் வல்லமை கொண்ட இசைத்திறமையை வெளிக்காண்பிப்பதற்கான வாய்ப்பினை வழங்கி, உலகின் மிகவும் பிரபலமான மற்றும் பொருளாதாரரீதியாக வாய்ப்புக்களைக் கொண்ட பொழுதுபோக்குத் துறைகளில் ஒன்றான இசைத்துறையில் அவர்கள் தமது அபிலாஷைகளை அடையப்பெறுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ள இந்த மேடைக்கு ஆதரவளிப்பதில் ஹட்ச் நிறுவனம் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றது. Statista வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இலங்கையில் 2024 ஆம் ஆண்டில் இசை நிகழ்வுகள் சந்தையானது 9.15 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 3% மட்டுமே சந்தை அடைவு மட்டமாகக் காணப்படுகின்ற நிலையில், இத்துறையில் வளர்ச்சிக்கு பாரிய வாய்ப்பு உள்ளதை இது தெளிவாக விளக்குகின்றது,” என்று குறிப்பிட்டார்.          

நாடெங்கிலும் இளைஞர்,யுவதிகளுக்கு அதிகாரமளித்து வருகின்ற ஹட்ச், அதனது வலையமைப்பு உள்ளடக்கத்தின் கீழ் நாட்டின் மொத்த சனத்தொகையில் 95% இற்கும் மேற்பட்டவர்களை எட்டியுள்ளது. கல்வி, பணி, பொழுதுபோக்கு மற்றும் சமூக உள்ளடக்கம் போன்றவற்றில் மிகவும் கட்டுபடியான வழியில் அவற்றில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு உதவ, மிகவும் முழுமையான, விரிவான சேவை மற்றும் தீர்வு வரிசையை ஹட்ச் வழங்கிவருகின்றது.    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here