ஹட்ச் வழங்கும் ஒப்பற்ற Data Roaming சலுகைகள் உடன் வெளிநாட்டில் இருந்தும் கூட தொடர்ந்தும் இணைப்பில் இருங்கள்

12

இலங்கையில் முன்னணி மொபைல் வலையமைப்பு சேவை வழங்குனர்களில் ஒன்றான ஹட்ச், வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது data roaming சேவைகளுக்கு மிகவும் விரும்பப்படுகின்ற மற்றும் மிகவும் குறைந்த கட்டணங்கள் கொண்ட தெரிவாக மாறி, தனது ஸ்தானத்தை தொடர்ந்தும் வலுப்படுத்தி வருகின்றது. நயமான பல திட்டங்களுடன், பொழுதுபோக்கு, வர்த்தகம், யாத்திரை அல்லது கல்வி போன்ற தேவைகளுக்காக குறுகிய அல்லது நீண்ட காலத்திற்கு வெளிநாடுகளுக்கு பிரயாணம் செல்கின்றவர்களுக்கு ஹட்ச் data roaming சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.   

வெளிநாடுகளுக்கு பிரயாணம் செல்கின்றவர்கள் வெறும் 5 அமெரிக்க டொலருக்கு 10GB கொண்ட வாராந்த data திட்டத்தை அல்லது வெறும் 15 அமெரிக்க டொலருக்கு 30GB கொண்ட மாதாந்த data திட்டத்தை தற்போது அனுபவிக்க முடியும். பயனர்கள் எவ்விதமான தயக்கங்களுமின்றி, மன நிம்மதியுடன் தமது நிதி நிலைமைக்கேற்ப தங்குதடையின்றி இணைப்பைக் கொண்டிருப்பதை உறுதி செய்யும் வகையில் இத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எந்த நாட்டிலும் தரமான இணைப்பினை வழங்குவதற்காக உலகெங்கிலுமுள்ள உச்ச மொபைல் வலையமைப்புக்களுடன் ஹட்ச் ஸ்ரீலங்கா கைகோர்த்துள்ளது.             

ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரியான ஹம்தி ஹசன் அவர்கள் இது குறித்து மேலும் விளக்குகையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த Data திட்டங்களை வழங்குவதே எப்போதும் எமது இலக்காகக் காணப்படுகின்றது. எமது roaming திட்டங்களுடன், அனைத்து வகைப்பட்ட பிரயாணங்களை மேற்கொள்கின்றவர்களும் வியத்தகு அளவில் சிக்கனமான கட்டணங்களுடன் தொடர்ந்தும் இணைப்பில் இருப்பதை நாம் உறுதி செய்கின்றோம். வர்த்தக நோக்கமானாலும் சரி, பொழுதுபோக்கு நோக்கமாக இருந்தாலும் சரி, பெருந் தொகையுடன் கட்டணப் பட்டியல் வந்து விடுமோ என்ற கவலையை விடுத்து, தமது data திட்டங்களை இலகுவாக செயல்படுத்தி, நிர்வகிக்க முடியும் என்பதை அறிந்து மன நிம்மதியுடன் எமது வாடிக்கையாளர்கள் தமது பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது விருப்பம். இலங்கை மக்கள் அனைவருக்கும் சௌகரியமான வழிமுறையில் 1ஆம் தர சர்வதேச இணைப்பிற்கான அணுகலை வழங்குவதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.         

வாடிக்கையாளர்கள் HUTCH Selfcare app மூலமாக சௌகரியமாக தாம் விரும்பும் roaming திட்டங்களைச் செயற்படுத்திக் கொள்ள முடிவதுடன், தமது பாவனையை நிகழ்நேரத்தில் கண்காணித்து, தமது data பயன்பாட்டை முழுமையாக தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கச் செய்கின்றது. வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமையளிக்கின்ற 24 மணி நேர டிஜிட்டல் மார்க்க உதவி சேவை வழிமுறைகள், வாடிக்கையாளர்கள் உலகில் எங்கிருந்தாலும், அவர்களுக்கு தேவையான எந்தவொரு உதவியும் வெகு வேகமாக கவனித்து, தீர்த்து வைக்கப்படுவது உறுதி செய்யப்படுகின்றது.        

மேற்குறிப்பிட்ட வசதிகளுடன் கூடிய சிக்கனமான திட்டங்கள், வெளிநாடுகளுக்கு பிரயாணம் செய்கின்ற சமயங்களில், அனேகமாக அங்குள்ள உள்நாட்டு சேவை வழங்குனர்களை விடவும் குறைந்த கட்டணங்களில் data roaming சேவையை வழங்கும் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக ஹட்ச் தனது பெயரை நிலைநாட்டியுள்ளது.      

………………………………………………………………………………….

ஹட்ச் ஸ்ரீலங்கா தொடர்பான விபரங்கள்  

ஹொங்கொங் நாட்டைத் தளமாகக் கொண்ட Fortune 500 நிறுவனங்கள் குழுமமான CK Hutchison Holdings (CKHH) இன் துணை நிறுவனமான ஹட்ச் ஸ்ரீலங்கா, இலங்கையில் தொலைதொடர்பாடல் துறையில் முக்கியமான செயல்பாட்டாளராக தன்னை வலுவாக நிலைநிறுத்தியுள்ளது. 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரசன்னத்துடன், 300,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள CK Hutchison Holdings, துறைமுகங்கள் மற்றும் தொடர்புபட்ட சேவைகள், சில்லறை வர்த்தகம், உட்கட்டமைப்பு, எரிசக்தி, நிதி மற்றும் முதலீடுகள், தொலைதொடர்பாடல்கள் ஆகிய ஆறு பாரிய துறைகளில் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.  2022 ஆம் ஆண்டில் 30 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை CKHH பதிவாக்கியுள்ளது.         

1997 ஆம் ஆண்டில் இலங்கை சந்தையில் காலடியெடுத்து வைத்த ஹட்ச், அனலொக் (analogue) சேவைகளுடன் தனது பயணத்தை ஆரம்பித்ததுடன், அதன் பின்ன நாட்டின் முன்னணி மொபைல் தொழிற்பாட்டாளர்களில் ஒன்றாக பரிமாண வளர்ச்சி கண்டுள்ளது. 2004ஆம் ஆண்டில் GSM சேவையின் அறிமுகத்தைத் தொடர்ந்து, 2011 இல் 3G மற்றும் 2018 இல் 4G என தனது சேவைகளை படிப்படியாக விஸ்தரித்தது. 2019 இல் எடிசலாட் ஸ்ரீலங்கா (Etisalat Sri Lanka) நிறுவனத்தை கொள்முதல் செய்தமை ஹட்ச்சின் சந்தை ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், 078 மற்றும் 072 என ஆரம்பிக்கும் தொலைபேசி இணைப்பு இலக்கங்களுக்கு சிக்கனமான கட்டணங்களுடன், நம்பகமான சேவைகளை வழங்குவதற்கு இடமளித்துள்ளது. 2023ஆம் ஆண்டின் படி ஹட்ச்சின் 4G வலையமைப்பு இலங்கை சனத்தொகையில் 95% ஐ உள்ளடக்கியுள்ளதுடன், 5G சேவைகளை முன்னெடுப்பதற்கு இந்நிறுவனம் தயாராக உள்ளமை தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற அதன் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது.                    

இலங்கையில் மூன்றாவது பாரிய தொலைதொடர்பாடல்கள் சேவை வழங்குனர் என்ற ரீதியில், தேசத்தின் டிஜிட்டல் பரிமாண வளர்ச்சியில் ஹட்ச் தொடர்ந்தும் முக்கிய செயல்பாட்டாளராக விளங்குகின்றது. அதன் விசாலமான 4G வலையமைப்பு உள்ளடக்கம் மற்றும் சிக்கனமான கட்டணங்களுடன், நாட்டில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்கள் கூட நம்பகமான மொபைல் இணைப்பாடலைக் கொண்டிருப்பதை இந்நிறுவனம் உறுதி செய்கின்றது. 5G சேவைகளை வழங்குவதற்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்வது அடங்கலாக, தனது தொழில்நுட்பவியல் ஆற்றல்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது மாத்திரமன்றி, அன்றாட தொடர்பாடல், வணிக செயல்திறன் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை மேம்படுத்துகின்ற புத்தாக்கமான சேவைகளை வழங்கி, இலங்கை மக்களின் டிஜிட்டல் அபிலாஷைகளுக்கும் ஹட்ச் ஆதரவளித்து வருகின்றது. சிக்கனம், தரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன், எதிர்வரும் காலங்களில் இலங்கையின் தொலைதொடர்பாடல் வளர்ச்சிக்கான உந்துசக்தியாகத் திகழ்வதே ஹட்ச்சின் நோக்கமாகும்.    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here