வோக் ஜூவல்லர்ஸ் – கைவினைத்திறனும், நேர்த்தியும் சங்கமிக்கும் இடம்

126

வோக் ஜூவல்லர்ஸ் சிறந்த நகைகளின் உலகில் மேன்மையுடன் சிறந்து விளங்கும் தனிச்சின்னமாக விளங்குகிறது. இது நகைகளை மட்டுமல்லாது, என்றென்றும் போற்றும் ஒரு நேர்த்தியான அனுபவத்தை வழங்குகிறது. 1962 ஆம் ஆண்டு என்ற பழமையான பாரம்பரியத்துடன், வோக் ஜூவல்லர்ஸ் ஆனது தரம், கைவினைத்திறன் மற்றும் நிகரற்ற வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றுக்கு பெயர்பெற்றதாக மாறியுள்ளது. வோக் ஜூவல்லர்ஸின் வளமான வரலாறு ஆறு தசாப்தங்களுக்கும் மேலானதாக உள்ளதுடன், இது இலங்கையில் அனைத்து இல்லங்களிலும் நம்பகமானதொரு நாமமாக திகழ்ந்து வருகிறது.

நகைத் துறையில் தங்கத் தரத்தை நிலைநாட்டுவதில் பெயர் பெற்ற வோக் ஜூவல்லர்ஸ், 2023 ஒக்டோபர் 16 முதல் 22 வரை, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டைதாரர்களுக்கு வைரங்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் மீது 45% என்ற பிரத்தியேகமான சேமிப்பை வழங்குகிறது.

வோக் ஜூவல்லர்ஸின் தனித்துவமான பண்புகளில் ஒன்று, கைவினைத்திறனுக்கான அதன் ஓயாத அர்ப்பணிப்பாகும். வழங்கப்படும் நகைகளின் ஒவ்வொரு அம்சமும், சிறந்த தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்தி, சர்வதேச-விருது பெற்ற நிபுணர்கள் அணியால் வடிவமைக்கப்பட்ட, கைவினைப்பொருளாக உள்ளது. மேன்மைக்கான இந்த அர்ப்பணிப்பு ஒவ்வொரு நகையும் ஒரு தலைசிறந்த படைப்பாக இருப்பதை உறுதி செய்கிறது.

வாடிக்கையாளர் திருப்தி என்பது வோக் ஜூவல்லர்ஸ் அனுபவத்தின் மற்றொரு தனிச்சிறப்பாகும். தலைமுறை தலைமுறையாக நீடிக்கும் அதன் விசுவாசமான வாடிக்கையாளர் தளம், தனித்துவமான வாடிக்கையாளர் மைய கோட்பாட்டிற்கு ஒரு சான்றாகும். வோக் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தில் நீங்கள் காலடியெடுத்து வைத்தவுடன், வடிவமைப்பு, உலோகம், கல் அல்லது உங்கள் கையிலுள்ள தொகை ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கான நகைகளின் சரியான பொருளைக் கண்டுபிடிப்பதில், தொழில்முறை நிபுணத்துவமும், அறிவும் கொண்ட வாடிக்கையாளர் சேவை அணி உதவுவதற்குத் தயாராக உள்ளது. வாடிக்கையாளர் மீதான அக்கறை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை மீதான வோக் இன் அர்ப்பணிப்பு ஒவ்வொரு வருகையையும் மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகிறது.

“எமது செயல்பாடுகள் அனைத்தினதும் மையமாக எமது வாடிக்கையாளர்களே உள்ளனர். காலத்தால் அழியாத நகைகள் மட்டுமல்ல, தரம், நம்பிக்கை மற்றும் பணத்திற்கான மதிப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் நிரந்தர அனுபவங்களையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த வெற்றிகரமான மூலோபாயத்தை அத்திவாரமாகக் கொண்டு, ஆழமான வாடிக்கையாளர் உறவுகளை கட்டியெழுப்பி, தலைமுறை தலைமுறையாக இலங்கை மக்களுக்கு நாம் சேவை ஆற்றியுள்ளோம். வாழ்நாளில் ஒரு முறையோ அல்லது வாழ்க்கையின் இனிமையான தருணங்களில் ஒன்றோ, எதுவானாலும் எமது வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை பிரகாசிக்கச் செய்துள்ளோம்.”

வோக் ஜூவல்லர்ஸ் “எப்போதும் உங்களுடன்” (with you forever) என்ற தனது அர்ப்பணிப்பை மிகவும் தீவிரமாக கடைப்பிடிக்கிறது. அதன்படி, அதன் புகழ்பெற்ற திருமண அலங்கார நகைகள் உட்பட அனைத்து வோக் ஜூவல்லரி நகைகளும், ஆயுள்கால உத்தரவாதத்துடன் கிடைக்கின்றன. சிறந்த மூலப்பொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்களை மட்டுமே பயன்படுத்தும் தொழில் வல்லுநர்களால் ஒவ்வொரு நகையும் உன்னிப்பாக வடிவமைக்கப்படுவதால், தரம் என்ற சொல்லுக்கு எவ்விதமான குறைவும் கிடையாது. ஒவ்வொரு நகையும் அனுபவம்மிக்க தொழில் வல்லுநர்கள் அணியால் கடுமையான தரச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. தரத்தின் மீதான இந்த மாசுமறுவற்ற அர்ப்பணிப்பு, வோக் ஜூவல்லர்ஸ் வழங்கும் நகைகள் உண்மையிலேயே தலைமுறை தலைமுறைகளாகப் போற்றப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்கிறது.

அதன் நகைகளின் தரத்திற்கு மேலும் உத்தரவாதம் அளிக்கவும், தங்கத்தின் தரத்தைச் சோதிக்கவும், XRF என்ற அதிநவீன இத்தாலிய தொழில்நுட்பத்தை வோக் ஜூவல்லர்ஸ்; பயன்படுத்துகிறது. இந்த மேம்பட்ட முறை ஒவ்வொரு நகையின் விலைமதிப்பற்ற உலோக கலவையை மதிப்பிடுவதுடன், இது அதியுயர் தர தர ஒப்பீடுகளை கடைபிடிப்பதை உறுதி செய்கிறது.

வோக் ஜூவல்லர்ஸ் தொடர்ந்து தொழில்துறை போக்குகளை நிலைநாட்டி, விலை பற்றிய தவறான கருத்துக்களை முற்றிலும் போக்கி, தரத்திற்கான அதன் நற்பெயரை நிலைநிறுத்தி வருவதால், வாடிக்கையாளர்கள் தங்களுடைய நகைகளும் அனுபவமும் அதிவிசேடமாகவே அமையும் என்பதில் உறுதியாக இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here