வோக் ஜுவல்லர்ஸ் வழங்கும் மகத்தான சலுகைகள் மூலமாக, உங்களுடைய புத்தாண்டில் பளபளப்பையும், கவர்ச்சியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

35

வோக் ஜுவல்லர்ஸ் இப்புத்தாண்டில் வழங்கும் பல்வகைப்பட்ட பிரத்தியேக சலுகைகள் மூலமாக, உங்களுடைய பழைய நகைகளுக்கு பதிலாக, காலத்தால் அழியாது, உங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளைத் தோற்றுவிக்கும் நகைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

2024 மார்ச் 18 முதல் ஏப்ரல் 11 வரை இடம்பெறுகின்ற கொள்வனவு = விற்பனை (Buying = Selling Promotion) என்ற ஊக்குவிப்புச் சலுகையின் மூலமாக, எவ்விதமான செய்கூலியும் இல்லாமல், தங்கத்தின் விலைக்கே 22 கரட் காப்பு மற்றும் சங்கிலி அடங்கிய தொகுப்பை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். இச்சலுகை இடம்பெறும் காலப்பகுதியில் வைரங்கள் மற்றும் விலைமதிப்பற்ற கற்களுக்கு 50% என்ற நேரடி விலைத்தள்ளுபடியையும் நீங்கள் பெற்றுப் பயனடைய முடியும். உங்களுடைய பழைய வைர நகைகள் சலித்துப்போய் விட்டால், நவீன வடிவமைப்புக்கள் மற்றும் போக்குகளுக்கு ஏற்ப, வோக் ஜுவல்லர்ஸ் வழங்கும் புதிய மற்றும் கவர்ச்சியான நகைகளாக அவற்றை இலகுவாக மாற்றிக்கொள்ளுங்கள்.      

இவற்றுக்குப் புறம்பாக, 2024 ஏப்ரல் 15 முதல் 30 வரை ரூபா 500,000/- க்கு மேற்பட்ட தொகைக்கு கொள்வனவை மேற்கொள்கின்ற வோக் ஜுவல்லர்ஸ் வாடிக்கையாளர்கள் அனைவரும் 1 கிராம் தங்க நாணயத்தை முற்றிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்வர். இந்த ஒப்பற்ற புத்தாண்டுச் சலுகைகளின் பயன்களை அனுபவிக்க எந்தவொரு வோக் ஜுவல்லர்ஸ் காட்சியறைக்கும் விஜயம் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here