வருடாந்த IT Gallery Partner Summit 2024 மாநாட்டில் சிறந்த HIKSEMI பங்களிப்பாளர்கள் கௌரவிப்பு

19

2018 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் வருடாந்த IT Gallery Partner Summit மாநாடானது, தொழில்துறையில் புத்தாக்கம் மற்றும் தொடர்புகளை மேம்படுத்துவதில் இடம்பெறும் முக்கிய நிகழ்வாக காணப்படுகின்றது. இவ்வருடம் தமது கூட்டாண்மையைக் கொண்டாடும் வகையில் இலங்கையிலுள்ள HIKSEMI முகவர்களை பாராட்டி கௌரவிக்கும் HIKSEMI Sri Lanka Dealer Appreciation Conference 2024 மாநாட்டை அறிமுகப்படுத்துவதில் IT Gallery பெருமிதம் கொள்கிறது. 4 வருடங்களுக்கு முன்னர் HIKSEMI வர்த்தக நாமத்தை தமது சேமிப்பக தீர்வுகள் மற்றும் தயாரிப்புகளின் பிரதான விநியோகஸ்தராக IT Gallery Computer (Pvt) Ltd இலங்கைக்கு அறிமுகப்படுத்தியிருந்தது.

2023 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ITG மற்றும் HIKSEMI வணிகத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய முதலிடத்திலுள்ள மூன்று பங்குதாரர்களை கௌரவிக்கும் நோக்கில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. விநியோகஸ்தர் வலையமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் ஒரு வாய்ப்பை இது ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில் PCIe 4.0 NVMe SSD Future Pro and Future Lite, Future DDR5, Gaming Solution, Surveillance SSD V300X, High-Speed ​​Micro SD NEO LUX, Professional Camera, SD Portable E Sd Portable, NVMe SSD Elite series மற்றும் SSD USB Ultra உள்ளிட்ட பல்வேறு புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டமை விசேட அம்சமாகும். 

தெற்காசிய HIKSEMI விற்பனை முகாமையாளர் பிரையன் இங்கு தெரிவிக்கையில், “இந்த பிரத்தியேக நிகழ்வில் எமது முக்கியமான மூன்று பங்குதாரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகளை கொண்டாடுவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். அவர்களது முக்கிய பங்களிப்புகள் இலங்கையில் ITG – HIKSEMI இடையேயான வணிகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த நிகழ்வு வெறுமனே ஒரு கௌரவிப்பு மாத்திரம் அல்லாது, வலுவான தொடர்புகளை உருவாக்குவதற்கும், புதிய தொடர்புகளை ஒன்றிணைந்து ஆராய்கின்றதுமான ஒரு நிகழ்வுமாகும்.” என்றார்.

IT Gallery Computers (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டிலந்த பெரேரா இது பற்றித் தெரிவிக்கையில், “2011 முதல் IT விநியோகச் சந்தையில் நாம் பிரவேசித்ததில் இருந்து, Hikvision, Lenovo, Ezviz, Pantum, EAST உள்ளிட்ட வர்த்தகநாமங்களின் பரந்த அளவிலான பெறுமதி சேர்க்கப்பட்ட விநியோக சேவைகளை வழங்குவதன் மூலம் நாம் ஒரு முக்கிய பங்காளராக வளர்ந்துள்ளோம். எமது கூட்டாளர்கள் எம்முடன் இணைந்து சிறந்து விளங்க எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சந்தையில் எமது இருப்பை விரிவுபடுத்துவதற்குமான எமது அர்ப்பணிப்பை இந்நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here