வடக்கில் உள்ள சிறுவர்களுக்கு தனது நடமாடும் பல் மருத்துவ சிகிச்சை திட்டத்தை ஆரம்பித்துள்ள க்ளோகார்ட்

16

தேசத்தின் மிகவும் நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்றான, Hemas Consumer Brands நிறுவனத்தின் க்ளோகார்ட், சுகாதார மருத்துவ அதிகாரிகளுடன் (MOH) இணைந்து, பற் சூத்தைகள் அற்ற தேசத்தை உருவாக்குவதற்கான அதன் தொடர்ச்சியான திட்டமான, பாடசாலை மாணவர்களுக்கான சிறந்த வாய்ச் சுகாதாரம் தொடர்பான விழிப்பூட்டலை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டம் 10 வருடங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இலங்கை முழுவதிலும் உள்ள சிறுவர்களுக்கு சிறந்த வாய்ச் சுகாதார பராமரிப்புக்கான வாய்ப்பினை வழங்குகின்றது. அவர்கள் அனைவரும் ஆரோக்கியமான புன்னகையை கொண்டிருப்பதற்கான வாய்ப்பை வழங்குவதில் க்ளோகார்ட் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும்.

MOH மருத்துவர்களால் நடத்தப்படும், சிறந்த வாய்ச் சுகாதார நடைமுறைகள் தொடர்பான வலுவான அறிவூட்டல் நிகழ்வுகளை இந்த திட்டம் கொண்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான பழக்கங்களை குழந்தைகளிடம் ஏற்படுத்துவதற்கு, அறிவூட்டல் செயற்பாடு மிகவும் முக்கியமானதாகும். அது தவிர, இந்த திட்டமானது அனைத்து ஆரம்பப் பிரிவு பாடசாலை மாணவர்களுக்கும் இலவச பல் பரிசோதனைகளையும் முன்னெடுக்கின்றது. எந்தவொரு குழந்தையையும் விட்டுவிடாதிருப்பதை உறுதிப்படுத்த, இதில் மேலதிக பராமரிப்பு அவசியமான மாணவர்கள் உடனடியாக MOH இன் கவனிப்புக்காக பரிந்துரைக்கப்படுகிறார்கள். 

வாய்ச் சுகாதார பிரச்சினைகளை கண்டறிவது க்ளோகார்ட்டின் இத்திட்டத்தின் முக்கிய படியாகும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், குழந்தைகள் நீண்ட காலத்திற்கு சிறந்த வாய்ச் சுகாதார ஆரோக்கியத்தை பெறுவார்கள். இந்த திட்டமானது அவர்களது பிற்கால வாழ்க்கையில் கடுமையான பல் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு மிக முக்கியமானதாகும் என்பதோடு, ஒட்டுமொத்த சுகவாழ்வையும் அது மேம்படுத்துகிறது. இவ்வருடம், 5,000 இற்கும் மேற்பட்ட குழந்தைகளைச் சென்றடையும் நோக்கத்துடன், நாட்டின் வட பகுதியில் தனது முயற்சிகளை க்ளோகார்ட் விரிவுபடுத்தியுள்ளது. இந்த விரிவாக்கமானது, நாடு முழுவதும் உள்ள குழந்தைகளின் வாய்ச் சுகாதார ஆரோக்கியத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துவதில் க்ளோகார்ட் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு ஒரு காரணமாகும்.

நீண்ட காலமாக க்ளோகார்ட் கொண்டுள்ள நற்பெயர் மற்றும் வாய்ச் சுகாதாரத் துறையில் அதன் நம்பகத்தன்மை ஆகியன MOH போன்ற நிறுவனங்களுடனான கூட்டாண்மை மூலம் மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றது. சிறந்த வாய்ச் சுகாதாரத்தைப் பேணுவதற்கு அவசியமான அறிவு மற்றும் வளங்களை நாட்டிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் பெறுவதை உறுதி செய்ய இந்த இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றன.

வாய்ச் சுகாதார பராமரிப்பு மூலம் இலங்கையர்களை வலுவூட்டுவதில் க்ளோகார்ட் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான முயற்சிகள் யாவும், பற் சூத்தைகள் அற்ற தேசத்தை உருவாக்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை உண்மையாகப் பிரதிபலிக்கின்றன. விழிப்பூட்டல் திட்டங்கள், இலவச மருத்துவ சோதனைகள், முன்கூட்டிய தலையீடுகள் ஆகியவற்றின் மூலம், ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்யத் தேவையான கருவிகள் மூலம் அடுத்த தலைமுறையை நிறுவனம் வலுவூட்டி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here