மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட் கதுருவெலையில் புதிய கிளையைத் திறந்து, தனது அடிச்சுவட்டை மேலும் விரிவுபடுத்தியுள்ளது

31

இலங்கையில் வங்கிச்சேவை அல்லாத நிதிச் சேவைகள் துறையில் முன்னணி செயல்பாட்டாளராகத் திகழ்ந்து வருகின்ற மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட், தனது வளர்ச்சிப்பயணத்தை முடுக்கி விட்டுள்ள நிலையில், மற்றுமொரு கிளையை அண்மையில் கருதுவெலையில் திறந்து வைத்துள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் உயர் வளர்ச்சி வாய்ப்புக்கள் கொண்ட முக்கியமான வர்த்தக மையங்களை எட்டுவதற்கு MIFL முற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இத்தருணத்தில், இலக்கம் 766/A, சொமியல் சந்தி, மட்டக்களப்பு வீதி, கதுருவெலை என்ற முகவரியில் அமைந்துள்ள இப்புதிய கிளை ஒரு முக்கியமான சாதனையாக மாறியுள்ளது.   

மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட்டின் வளர்ச்சிகண்டு வருகின்ற வலையமையில், தற்போது அதன் 32 வது கிளையாக, கதுருவெலை கிளை மாறியுள்ளதுடன் தான் சேவைகளை வழங்குகின்ற பல்வகைப்பட்ட சமூகங்கள் மத்தியில் இலகுவாக அணுகக்கூடிய நிதித் தீர்வுகள் மற்றும் வளர்ச்சியை தூண்டுதல் ஆகியவற்றில் நிறுவனம் கொண்டுள்ள ஓயாத அர்ப்பணிப்பை இது காண்பிக்கின்றது. மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட்டின் ஏனைய கிளைகளைப் போலவே, கதுருவெலையில் அமைந்துள்ள கிளையும் தனது சேவைகளை வழங்குகின்ற மக்களுக்கு நெருக்கமாகச் சென்று சேவைகளை வழங்கி, இப்பிராந்தியத்தில் பொருளாதார எழுச்சிக்கு உதவுகின்றது.   

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த விரிவாக்கம் குறித்து, மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்த வீரசேகர அவர்கள் கருத்து வெளியிடுகையில், “வலுவூட்டல் மற்றும் பகிரப்பட்ட சுபீட்சம் ஆகியவற்றை நோக்கிய எமது பயணம், கதுருவெலை கிளையை திறந்து வைத்துள்ளதன் மூலமாக மற்றுமொரு முக்கியமான படியை எட்டியுள்ளது. இலங்கை மக்கள் அனைவருக்கும் பிரகாசமான நிதியியல் எதிர்காலத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற எமது இலக்குடன் இந்த விரிவாக்கம் ஒத்திசைகின்றது. வர்த்தகரீதியாக முக்கியத்துவம் கொண்ட கதுருவெலை, நாட்டின் பல்வேறு பாகங்களை இணைக்கும் முக்கியமான வீதிகளின் மையமாக உள்ளது. ஆகவே இப்புதிய கிளையானது, இங்குள்ள சமூகத்திற்கு எமது சேவைகளை வழங்குவதற்கு எமக்கு வாய்ப்பளிப்பதுடன், இப்பிராந்தியத்திலுள்ள வளர்ந்து வரும் திறமைசாலிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வாய்ப்புக்களையும் தோற்றுவிக்கும்,” என்று குறிப்பிட்டார்.

கிராம மற்றும் அரை நகர்ப்புறங்கள் மீது மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட் செலுத்தி வருகின்ற கவனம், மோட்டார் வாகனங்கள், தங்கக் கடன்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அதன் பல்வகைப்பட்ட கடன் வழங்கல் மூலமாக தொடர்ந்தும் நிரூபணமாக உள்ளது. இந்தியாவைத் தளமாகக் கொண்ட உலகளாவிய நிதியியல் சேவைகள் பெருநிறுவனமான மஹிந்ரா அன்ட் மஹிந்ரா ஃபினான்சியல் சேர்விசஸ் லிமிட்டெட்டின் ஒரு துணை நிறுவனமான மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட், இலங்கையில் நிதியியல் ரீதியாக அனைவரையும் அரவணைப்பதை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.  

நாட்டில் முக்கியமான நகரங்கள் மற்றும் வர்த்தக மையங்களில் ஒரு வலுவான கிளை வலையமைப்பினை ஸ்தாபிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், நிலைபேணத்தகு வளர்ச்சிக்கான மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட்டின் உறுதியான திட்டங்களுடன், கதுருவெலையில் திறந்து வைக்கப்பட்டுள்ள இப்புதிய கிளை ஒத்திசைகின்றது. வங்கிச்சேவை, நிதி மற்றும் காப்புறுதித் துறையில் தனித்துவமான அங்கீகாரமாக, தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக Great Place to Work என்ற அங்கீகாரம் அடங்கலாக, நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளின் மீது கட்டியெழுப்பபட்ட மூலோபாயம்மிக்க நகர்வாக புதிய கிளை அமைந்துள்ளது.       

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here