புத்தாக்கமான தீர்வுகள் மூலம் குடும்பங்களின் சிறந்த எதிர்காலத்திற்காக வலுவூட்டும் Hemas Consumer Brands

23

சவாலான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் 2023/24 நிதியாண்டில் Hemas Consumer Brands (HCB) சிறந்த வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அதே நேரத்தில், அதன் உற்பத்திகள் அதன் சமூகப் பொறுப்புகளை தவறாமல் நிறைவேற்றியுள்ளது. 60 வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணியில் திகழும், புத்தாக்கமான தீர்வுகளை வழங்குவதன் மூலம், குடும்பங்களை சிறந்த நாளைய தினத்தை நோக்கி வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகின்றது. இதன் காரணமாக, நோக்கத்தை கொண்ட அதன் வர்த்தக நாமங்களை இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர்களாக நிலைநிறுத்த உதவியுள்ளது.

HCB இன் ஒவ்வொரு வர்த்தகநாமமும் அதன் நோக்கம் சார்ந்த திட்டங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள அதன் நுகர்வோர் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துகிறது மற்றும் அதன் மூலம் நூற்றுக்கணக்கான குடும்பங்களை வலுவூட்டுகிறது என்பதில் அதன் பயணம் அமைகிறது. நாட்டின் நம்பர் 1 குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான பேபி செரமி, குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதற்கான பயணத்தில் ஈடுபட்டுள்ளதோடு, பெற்றோரை இலக்காகக் கொண்டு விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் உள்ளீர்க்கப்பட்ட பெற்றோருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான அறிவூட்டல்கள் மூலம் 6,980 பெற்றோர்களை நேரடியாகவும், 20,000 பேரை மறைமுகமாகவும் வெற்றிகரமாகச் சென்றடைந்துள்ளது. குழந்தை தனது வாழ்க்கையில் பயணத்தைத் ஆரம்பிக்கும்போது பாதுகாப்பான தனிநபர் பராமரிப்பு மற்றும் தனிநபர் கழுவும் உற்பத்திகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் உள்ள புதிதாக தாய்மை அடைந்தவர்களின், பிறந்த குழந்தைகளுக்காக பேபி செரமியின் 11,313 பரிசுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. மிகவும் விரும்பப்படும் இந்த வர்த்தக நாமமானது, இலங்கை சமூக மருத்துவர் கல்லூரி மற்றும் இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் கைகோர்த்து, குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பை மேலும் முன்னெடுத்துச் செல்வதன் மூலம், ‘சிறுவர்களுக்கு வீட்டில் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பது தொடர்பான, கைநூலை கூட்டாக உருவாக்கி விநியோகித்ததோடு, இலவசமாக பதிவிறக்கம் செய்ய பேபி செரமி இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. அது ஏற்கனவே 1,680 பெற்றோர்களை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன் குழந்தைப் பாதுகாப்பு திட்டத்தின் சிறந்த தாக்கத்தை விரிவுபடுத்தும் வகையில், முன்பிள்ளை பராய பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு (ECCD) அதிகாரிகள் 50 பேர் உள்ளிட்ட 1,000 அதிகாரிகள் பயிற்சி பெற்றனர். அது மாத்திரமன்றி பேபி செரமி Safety Institute Co-Creation Centre உடன் இணைந்து, ‘Safety Institute Expert Live’ எனும் ஒன்லைன் மூலமான பெற்றோர் விழிப்புணர்வுத் திட்டத்தையும் ஆரம்பித்தது.

Hemas Consumer Brands நிறுவனத்தின் இலங்கையின் அசல் கூந்தல் பராமரிப்பு வர்த்தக நாமமான குமாரிகா, கீமோதெரபிக்கு உட்படுத்தப்படும் பெண்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், இயற்கையான கூந்தல் சிகைகளுக்கான அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்வதற்கான ஒரு தேசிய பிரசாரமான ‘சொந்துரு திரியவந்தி’ எனும் நோக்கத்துடன் கூடிய அதன் திட்டத்தை ஆரம்பித்தது. கீமோதெரபியின் விளைவாக தங்கள் கூந்தலை இழந்த பெண்களை தைரியமூட்டும் வகையில், தற்போது காணப்படும் கேள்வியில் அரைவாசிக்கும் மேற்பட்டதை பூர்த்தி செய்வதற்காக இந்த திட்டமானது, இயற்கையான கூந்தலால் செய்யப்பட்ட 1,800 இற்கும் அதிக சிகைகளை கடந்த வருடம் வழங்கியிருந்தது. இப்பெண்களை வலுவாக இருப்பதை இந்தத் திட்டம் ஊக்குவிப்பதோடு, அவர்கள் தங்கள் உடல்நலத்துடன் முன்னெடுக்கும் போராட்டத்தில் அவர்களின் உள வலிமையை அதிகரிப்பதையும் நோக்காகக் கொண்டுள்ளது.

சிறந்த வாய்ச் சுகாதாரம் என்பது தனிநபர்களின் ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வின் ஒரு முக்கிய பகுதியாகும். Hemas Consumer Brands இன் தனிநபர் பராமரிப்பு பிரிவில், இலங்கையின் மிகவும் நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமமான க்ளோகார்ட், 5,820 பேருக்கு பல் பரிசோதனைகள் மற்றும் 2,152 பேருக்கு பல் சிகிச்சைகள் உள்ளிட்ட 16 பல் கிளினிக்குகள் மற்றும் 5,993 பேருக்கு விழிப்புணர்வு அமர்வுகளையும் முன்னெடுத்திருந்தது.

நவீன பெண்ணின் புத்திசாலித்தனமான தெரிவு தீவா என்பதோடு, வேலைப்பளு மிக்க அவர்களது வாழ்க்கையை எளிதாக்கும் அதே நேரத்தில், தனது குடும்பத்தின் சுகவாழ்வைப் பேணுவதில் பெருமையுடனும் நம்பிக்கையுடனும் அது திகழ்கிறது. 2023/2024 இல் சலவைப் பிரிவில், வசதியான சலவைத் தீர்வு தயாரிப்பான தீவா, ‘தீவா கரத்திற்கு வலிமை’ பயிற்சி அமர்வு மற்றும் விருது வழங்கும் விழாவை காலியில் முன்னெடுத்திருந்தது; அது போன்று தங்கொட்டுவையிலும் யாழ்ப்பாணத்திலும், வெலிமடையிலும் முன்னெடுத்திருந்தது. Women In Management (WIM) உடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த அமர்வுகள், 175 தொழில்முனைவோர் பயனடைந்தனர். அத்துடன். ‘வலிமை தொழிலாளர்’ புத்தாண்டு சந்தை திட்டத்தின் கீழ், கொழும்பு மற்றும் தங்கொட்டுவையில் தொழில்முயற்சியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும், வாய்ப்பு வழங்கப்பட்டது.

பெண்களுக்கான சுகாதார பராமரிப்பு வர்த்தகநாமமான Fems, 20 வருடங்களுக்கும் மேலான தனது பயணம் முழுவதும், பல்வேறு சமூக ஆதரவு நடவடிக்கைகள் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கான முன்னோடியான முயற்சித் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. ‘H.E.R அறக்கட்டளை’ (உதவியளித்தல், வலுவூட்டுதல், எழுச்சியூட்டுதல்) மூலம் பெண்களின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதில் Fems முன்னணியில் திகழ்கின்றது. H.E.R அறக்கட்டளையானது, சுகாதார நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வு முதல் சுகாதார நப்கின்களுக்கான அணுகலை மேம்படுத்துதல் மற்றும் அவர்களின் தடுக்க முடியாத பயணத்தைத் தூண்டுதல் வரையிலான முயற்சிகள் மூலம் இலங்கைப் பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள தன்னை அர்ப்பணித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள 7 பாடசாலைகளில் ஒட்டுமொத்த சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஆடை உற்பத்தியாளரான Teejay Lanka உடன் முக்கிய பங்காளித்துவத்தின் ஆரம்பத்துடன் Fems இற்கு இந்த வருடம் அமைந்தது.

வெற்றிகரமான 2023/24 வருடத்துடன், SLIM Brand Excellence விருது விழாவில், Global Professional & Career Women Awards 2023, சிறந்த சமூக திட்டமான வருடத்தின் பெண்கள் தலைமையிலான சிறந்த திட்டத்திற்கான விருது உள்ளிட்ட பல முக்கிய பாராட்டுகளை Fems Aya வென்றுள்ளது; SLIM Brand Excellence Awards 2023 இல் வருடத்தின் சிறந்த பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) வர்த்தக நாமத்திற்கான தங்க விருது மற்றும் Hemas Value Awards 2023 இல் ESG சமூக விருது ஆகியவற்றையும் அது வென்றுள்ளது.

“புத்தாக்கமான தீர்வுகள் மூலம் குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை வாழ வலுவூட்டும்” அதன் நோக்கத்துடன் Hemas Consumer Brands எவ்வாறு உண்மையாக இருக்கின்றது என்பதை, இலங்கையிலுள்ள சிறந்த வர்த்தக நாமங்களுக்கு மத்தியில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரமும் பாராட்டும் எடுத்துக் காட்டுகிறது. நோக்கத்துடன் பயணிக்கும் Hemas Group அதன் நோக்கம் சார்ந்த இலக்குகள் மற்றும் விழுமியங்களுக்கான அர்ப்பணிப்பில் உறுதியாக இருந்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here