பம்பலப்பிட்டி துப்பாக்கிச் சூடு – சிசிரிவி காணொளி வௌியானது!

69

பம்பலப்பிட்டி மெரைன் ட்ரைவ் பகுதியில் இன்று (07) பிற்பகல் வேனில் வந்தவர்கள் சிலர் கார் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பின்னர், இரு வாகனங்களும் தப்பிச் சென்றதுடன், சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸாரால் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல், பம்பலப்பிட்டி மெரின் டிரைவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள வாகனத்தை குறிவைத்து, வேனில் வந்த இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

துப்பாக்கிச் சூட்டின் பின்னர், இரண்டு வாகனங்களும் தப்பிச் சென்றன.

அதன்படி, அப்பகுதியில் பல இடங்களில் பொலிஸ் வீதித் தடைகளை ஏற்படுத்தியிருந்த பொலிஸார், வெள்ளவத்தை வீதித் தடையில் துப்பாக்கிச் சூடு நடத்திய குழுவினர் பயணித்த வேனை பிடித்தனர்.

இதன்போது, அந்த வாகனத்தில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் நான்கு பேர் சிவில் உடையில் பயணித்தமை தெரியவந்தது..

போதைப்பொருள் வியாபாரிகள் குழுவொன்றை கைது செய்வதற்கான நடவடிக்கைக்காக தமது குழுவினர் குறித்த இடத்திற்குச் சென்றதாகவும், தப்பிச் செல்ல முற்பட்ட சந்தேக நபரின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் மதுவரி அதிகாரிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் வியாபாரிகளிடம் பணம் கொடுத்து போதைப்பொருள் கொள்வனவு செய்ய திட்டமிட்டிருந்ததாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்த போதிலும் அவர்களிடம் பணம் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான காரை, வெள்ளவத்தை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here