பத்திரிகை வெளியீடு: Bollywood Boutique, மாபெரும் காட்சியறை திறப்புவிழாவுடன் நேர்த்தியில் தனது ஒரு தசாப்த கால நிறைவைக் கொண்டாடுகிறது 

17

கொழும்பு, செப்டெம்பர் 30, 2024 – சாறிகள், சல்வார்கள் மற்றும் குர்த்தாக்கள் மற்றும் லெஹெங்காக்கள் ஆகியவற்றின் நேர்த்தியான தெரிவுக்கு பிரசித்தி பெற்ற, பாரம்பரிய ஆடைத்தெரிவுகளை வழங்கும் காட்சியறையான Bollywood Boutique, இலக்கம் 17, ஹம்டன் வீதி, கொழும்பு 06 என்ற முகவரியில் 7,000 சதுர அடி கொண்ட தாராளமான இட வசதி கொண்ட புதிய காட்சியறையை விமரிசையாக திறந்து வைத்து, முக்கியமான சாதனை மைல்கல்லொன்றை நிலைநாட்டியுள்ளது. இந்நிகழ்வானது காட்சியறையின் 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இடம்பெற்றுள்ளது மாத்திரமன்றி, நகரத்திலுள்ள நவநாகரிக ஆர்வலர்களின் ஷொப்பிங் அனுபவத்தை மேம்படுத்தும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தான் வழங்கும் ஆடையணி வரிசைகளை விரிவுபடுத்தியுள்ளது.        

2014 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட Bollywood Boutique, மிகச் சிறந்த இந்திய மற்றும் பாகிஸ்தானிய நவநாகரிக ஆடைகளை நாடுவோரின் அபிமானம்பெற்ற தெரிவாக மாறியுள்ளது. நுணுக்கமாக நெசவு வேலைப்பாடு கொண்ட ஆடம்பரமான சாறிகள் முதல் எடுப்பான தோற்றத்தை வழங்கும் திருமண லெஹெங்காக்கள் வரை இரு நாடுகளிலிருந்தும் உச்ச ஆடை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட மிகச் சிறந்த தெரிவுகளை இக்காட்சியறை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. நீட்டிக்கப்பட்ட இட வசதியுடன் இப்புதிய காட்சியறை முன்னரை விடவும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் ஷொப்பிங் அனுபவத்திற்கு இடமளிப்பதுடன், வருவோரைக் கவர்ந்து, பூரிப்பில் ஆழ்த்துகின்ற வகையில் விசேட வடிவமைப்புடன் விசாலமான ஆடையணித் தெரிவுகளைக் கொண்டுள்ளது.     

Bollywood Boutique இன் முதன்முதலான சொந்த வர்த்தகநாமமான Zoraya வின் அறிமுகம் இந்நிகழ்வின் சிறப்பம்சமாக மாறியதுடன், பாரம்பரிய ஆடையணிகளின் சமகாலத்து திருப்புமுனையாக இந்த வர்த்தகநாமம் இணைந்துள்ளது. இப்புதிய ஆடையணி வரிசை நவீன ரசனைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதுடன், காலத்தால் அழியாத பாரம்பரியங்களைக் கட்டிக்காத்து, நேர்த்தியையும், அழகுநயத்தையும் நாடுகின்ற முற்போக்கான நவநாகரிக ஆர்வலர்கள் மத்தியில் ஏற்கனவே ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.   

Bollywood Boutique இன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஃபாரூக் அஷ்ரஃப் அவர்கள் இது குறித்து பேரார்வத்துடன் கருத்து வெளியிடுகையில், “மிக முக்கியமான ஒரு தருணத்தில் எமது புதிய காட்சியறையை மிகவும் மகிழ்ச்சியுடன் திறந்து வைக்கின்றோம். மிகவும் தாராளமான இட வசதியானது கடந்த தசாப்தத்தில் எமது பயணத்தின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளதுடன், மிகச் சிறந்த இந்திய மற்றும் பாகிஸ்தானிய நவநாகரிக ஆடையணிகளை கொழும்பிற்கு கொண்டுவரும் எமது அர்ப்பணிப்பையும் காண்பிக்கின்றது. எமது புதிய தெரிவுகள், குறிப்பாக திருமண லெஹெங்காக்கள் மற்றும் சாறிகள் குறித்து நாம் மிகவும் பெருமை கொள்வதுடன், இனியும் தாமதமின்றி எமது வாடிக்கையாளர்களுக்கு இவற்றின் அனுபவத்தை வழங்க ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.    

இந்த திறப்புவிழா நிகழ்வானது வண்ணம், கலாச்சாரம் மற்றும் கைவண்ணம் ஆகியவற்றின் கொண்டாட்டமாக அமையப்பெற்றதுடன், மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட திருமண அலங்கார ஆடையணிகள் அடங்கலாக, சமீபத்தைய ஆடைத்தெரிவுகளின் பிரத்தியேக முன்னோட்டத்தை விருந்தினர்கள் அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிட்டியது. நவீனமயமான, கலாச்சாரரீதியாக செழுமைமிக்க வடிவமைப்புடனான காட்சியறையின் சூழலானது ஷொப்பிங் அனுபவத்தை மேலும் மேம்படுத்தி, அடுத்த முறை முக்கியமான நிகழ்வொன்றில் கலந்துகொள்ளும் போது அனைவரும் தம்மை திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள் கட்டாயமாக வருகை தர வேண்டிய ஒரு இடமாக Bollywood Boutique இனை ஆக்கியுள்ளது.      

கொழும்பில் கலாச்சார ஆடையணிகள் அது Bollywood Boutique தான் என்ற தராதரத்தை அது தொடர்ந்தும் சிறப்பாக நிலைநாட்டி வருவதுடன், தனித்துவமான மற்றும் மறக்க முடியாத ஷொப்பிங் அனுபவத்தை வழங்குவதற்காக பாரம்பரியம் மற்றும் நவீனபாணி ஆகிய இரண்டையும் ஒருங்கிணைக்கின்றது. இப்புதிய காட்சியறையின் திறப்பு விழா மற்றும் சொந்த வர்த்தகநாமத்தின் அறிமுகம் ஆகியவற்றுடன், இன்னும் பல ஆண்டுகளுக்கு நேர்த்தி மற்றும் அழகுநயம் ஆகியவற்றின் மரபினை இந்த காட்சியறை தொடர்ந்தும் முன்னெடுக்கத் தலைப்பட்டுள்ளது.     

மேலதிக விபரங்களுக்கு இலக்கம் 17, ஹம்டன் வீதி, கொழும்பு 06 என்ற முகவரியில் அமைந்துள்ள Bollywood Boutique க்கு விஜயம் செய்யுங்கள் அல்லது உடனுக்குடனான தகவல் விபரங்கள் மற்றும் நவநாகரிக உத்வேகத்திற்கு சமூக ஊடகத்தைப் பின்பற்றுங்கள்.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here