பசு மாடுகளை விற்பனைசெய்து உண்ணும் தேசமாக இல்லாமல், தொழில் முனைவோர் சாம்ராஜ்யத்தை உருவாக்குவோம்.

40

–  மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர பொலன்னறுவையில் தெரிவிப்பு

ஒரு கிராமத்தில் மிக மோசமான நபர் அல்லது தோல்வியுற்ற நபர் பற்றி பேசும்போது, அவர் தனது பசு மாட்டை விற்றவர் என்று கூறப்படுகிறது. அதுதான் இன்று நம் நாட்டில் நடக்கிறது.

நமது நாட்டை “எதற்குமே உதவாத நாடு இது” என்று ஒரு நாள் வரலாறு எழுதும். அவ்வாறு நடக்க அனுமதிக்க முடியாது. நாட்டிலுள்ள வளங்களை பாதுகாக்க வேண்டும் என்று சொன்னவர்கள் நீண்ட நாட்களாக நமது பால் வளத்தை எப்படி விற்பனை செய்வது என்று ஆலோசித்து வருகின்றன.

இந்த இரட்டை அரசியல் குறித்து அவர்களிடம் கேள்வி எழுப்புகிறோம். இந்த நோக்கத்திற்காக, பல்துறை அணுகுமுறையுடன் செயல்பட்டால் எங்களால் எந்த தடையும் இருக்காது. ஆனால் இந்த நாட்டில் ஊட்டச்சத்தின் அடையாளமாக விளங்கும் கறவை மாடுகளையும் விற்றால் அதிலிருந்து மீண்டெழ முறையான ஒரு திட்டம் வேண்டும். அவ்வாறு உங்கள் வாழ்க்கையை மாற்றும் பயனுள்ள திட்டங்களை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்  என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.

பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் நேற்று முன்தினம் (25) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத்  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கறவை மாடுகளை விற்று உண்ணும் தேசமாக அல்லாமல் புதிய தொழில் முனைவோர் அரசை உருவாக்க எங்களோடு அணி திரளுமாறு இளைஞர் சமூகம் மற்றும் இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் திறந்த அழைப்பு விடுக்கிறேன்.

 “எனது 30 வருட மறைமுக அரசியல் வாழ்க்கையில் பல்வேறு தலைவர்களுக்கு உதவியுள்ளேன். நான் பாடசாலையில் 8 ஆம் வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்தபோது, மக்கள் விடுதலை முன்னணியினரால் (ஜே.வி.) 5 வகுப்புகள் நடத்தப்பட்டன. அந்த 5 வகுப்புகளிலும் பங்குபற்றினேன்.  பின்னர் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் போதும் அந்த வகுப்புகளில் கலந்துகொண்டேன். அந்தக் கட்சியுடன் நான் நெருக்கமாகப் பணியாற்றினேன். 2004ஆம் ஆண்டு தேர்தலில் அவர்களுக்கு 42 ஆசனங்களைப் பெற்றுத் தர நான் அவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றினேன்.

அவர்கள் தங்களின் ஆயிரம் பெரிய குளங்கள் திட்டத்தை செயல்படுத்தும்போது, அந்த திட்டத்தை வெளிக்கொண்டு வர பெரும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டேன்.

பொலன்னறுவை மாவட்டம் விவசாயத்தில் முன்னோடியாக விளங்கும் மாவட்டமாகும். குறிப்பாக இந்த நாட்டிற்கு அரிசி வழங்கும் மாவட்டம் உங்களுடைய மாவட்டம். உங்கள் உழைப்பு மதிக்கப்பட வேண்டுமானால் அதற்கு தேசிய வேலைத்திட்டம் தேவை. அதில் ஆணி அடிக்க முடியாது. ஒரு நிலையான திட்டம் தேவை. எதிர்மறையான விஷயங்களில் இருந்து ஒரு தேசத்தை கட்டியெழுப்ப முடியாது. நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய மக்களை உருவாக்குவதற்கு எந்தவித இன பேதமுமின்றி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

எதிர்காலத்தில் பிறக்கப்போகும் குழந்தையின் எதிர்காலம் கூட நாம் கொண்டு வரும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. விவசாயம் மாத்திரமில்லாமல் அதற்கும் மேலதிகமாக அவரது வளர்ச்சி  தொடர்பாக நாம் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க புதுமையான முறைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது உட்பட, தினசரி வேலைத்திட்டத்துடன்,  இந்த புதிய தொழில்முனைவோர் சமூகத்தின் பொருளாதாரத்தை சுமார் 40000 ரூபாவால் அதிகரிக்கக் கூடிய அரசாங்கத்தை நாம் உருவாக்க விரும்புகிறோம்.

எப்பொழுதும் இருக்கும் அரசாங்கங்களில் இருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த திட்டங்களை நாங்கள் கையாண்டுள்ளோம். நம்மால் விரட்டியடிக்கப்படும் அரசாங்கத்திற்கு என்ன நடக்கும் என்று சிந்திக்க ஆரம்பிப்போம்.

திருடர்களைப் பிடிப்பதாக இன்றைய அரசியல் மேடைகளில் வாசிக்கப்படும் அறிக்கைகள் யாவும் முழுப் பொய். திருடர்களைப் பிடிக்கும் இந்த பொய் கதைகளால் அப்பாவி மக்களின் வாக்குகள் திருடப்படுவதை அனுமதிக்க முடியாது. அதை விடுத்து இளைஞர்களையும்  சிறந்த பெண் தொழில்முனைவோரையும் எவ்வாறு ஊக்கப்படுத்துவது என்பது பற்றி ஆலோசிப்போம். இந்த நாட்டின் வளங்கள் அனைத்தும் விற்கப்படும் இவ்வேளையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் – என்றார்.

இம்மாநாட்டில் கட்சியின் தலைவர் கலாநிதி சரத் அமுனுகம மற்றும் கட்சியின் உயர் அதிகாரிகள், இளம் தொழில் முயற்சியாளர்கள், பொலன்னறுவை மாவட்ட தொழில் முயற்சியாளர் சமூகம், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here