நிலைபேற்றியலை வலுவூட்டும் முயற்சியில், DFCC வங்கியின் “அனைவருக்கும் ஆங்கிலம்” (Samata English) கல்வி நிகழ்ச்சித் திட்டம்

48

இலங்கையில் இளைஞர்,யுவதிகளுக்கு அத்தியாவசியமான ஆங்கில மொழி மற்றும் மென் திறன்களை வலுவூட்டுவதற்கான உறுதியான அர்ப்பணிப்புடன், DFCC வங்கி தனது அனைவருக்கும் ஆங்கிலம் என்ற நிகழ்ச்சித்திட்டத்தை 5வது ஆண்டிலும் நிறைவு செய்துள்ளது. அந்தந்த DFCC வங்கிக் கிளைகளால் நடத்தப்பட்ட விசேட விருது வழங்கும் நிகழ்வுகளில் மாணவர்கள் தமது சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டதன் மூலம் நிகழ்ச்சியானது குறிப்பிடத்தக்க வகையில் வெற்றிகரமான முடிவை எட்டியது, இதன் மூலம் 2022 தொகுதியிலிருந்து, 81 மாணவர்கள் அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பிற்காக கௌரவிக்கப்பட்டனர். கற்கைநெறியை வழங்குகின்ற ஒரு கல்விச்சேவை கூட்டாளரான Gateway Educational Services Pvt Ltd இன் துணையுடன் DFCC அனைவருக்கும் ஆங்கிலம் நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

க.பொ.த உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்த 18-25 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்,யுவதிகளுக்கு DFCC அனைவருக்கும் ஆங்கிலத் திட்டம் நம்பிக்கைக் கீற்றாக அமைந்துள்ளது. இது கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையிலான இடைவெளியை திறம்படக் குறைத்துள்ளதுடன், தொழில் வல்லுநர்களாக மாறவேண்டும் என்ற அபிலாஷைகளைக் கொண்டுள்ளவர்களுக்கு போட்டித்திறன் மிக்க தொழில் சந்தையில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான மொழி மற்றும் மென் திறன்களைக் கொண்டுள்ளது. திட்டத்தை வெற்றிகரமாக முடித்த நபர்களுக்கு உள்ளகப் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளையும் வங்கி வழங்கும் அதே நேரத்தில், எதிர்வரவிருக்கும் ஆண்டுகளில், வேலை வாய்ப்புக்கான திட்டமொன்றும் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த முயற்சியின் மூலம், நெகிழ்திறன் கொண்ட சமூகங்களை வளர்ப்பதில் DFCC வங்கியின் ஓயாத உறுதிப்பாடு வெளிப்படுத்தியுள்ளதுடன், வங்கியின் நீண்ட கால நிலைபேற்றியல் இலக்கான “6 Es” இல் ஒன்றான கல்வியானது, அதன் முக்கிய நிலைபேற்றியல் தூண்களில் ஒன்றாக இந்த முயற்சியின் மூலம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. மேலும், DFCC அனைவருக்கும் ஆங்கிலம் எனும் திட்டமானது ஐக்கிய நாடுகளின் நிலைபேற்றியல் அபிவிருத்தி இலக்கு 17 உடன் சிறப்பாக இணைந்துள்ளதுடன், Gateway Educational Services உடனான அதன் ஒத்துழைப்பின் மூலம் நிலைபேற்றியல் அபிவிருத்திக்கான கூட்டாண்மைகளின் அனுகூலத்தால் மேம்படுத்தப்படுகிறது.

கடந்த ஐந்து வருடங்களில், கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், காலி, அம்பாறை, இரத்தினபுரி, பொலன்னறுவை, யாழ்ப்பாணம், பதுளை, அனுராதபுரம், வவுனியா, திருகோணமலை, நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் சுமார் 800 இளைஞர்,யுவதிகளின் வாழ்வில் இந்த வேலைத்திட்டம் நேரடியாக சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சித் திட்டத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு வங்கியில் உள்ளக பயிற்சி வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் முக்கியத்துவம் வெறும் மொழித் திறமைக்கு அப்பாற்பட்டது என்று DFCC வங்கியின் துணைத்தலைவரும், சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேற்றியலுக்கான தலைவருமான நில்மினி குணரத்ன அவர்கள் விளக்கினார். “இளைஞர்,யுவதிகள் மத்தியில் ஆங்கில மொழித் திறனை வளர்ப்பது அவர்களுக்கு மேன்மைக்கான வாய்ப்பளிக்கும் உலகத்திற்கு வழிகோல உதவுகிறது. ஆங்கிலத்தில் சரளமாக இருப்பது அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துகிறது. இணையம் மூலம் வரையறையற்ற தகவல் மற்றும் உலகளாவிய கண்ணோட்டத்திற்கான அணுகலை வழங்குகிறது. இந்த திறன்களைக் கற்றுக்கொள்வது நமது இளைஞர்,யுவதிகள் உலகளாவிய பிரஜைகளாக ஈடுபாட்டை வளர்க்கவும், அவர்களின் எல்லைகளை விரிவுபடுத்தவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் உதவும்,” என்று தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் ஆங்கிலம், நிலைபேற்றியலுடனான அபிவிருத்திக்கான DFCC வங்கியின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இலங்கையின் பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்திற்கு பங்களிக்கும், ஆற்றல்மிக்க மற்றும் போட்டித்திறன் நிறைந்த உலகிற்கு வழிகாட்டுவவதற்கான அறிவு மற்றும் கருவிகளுடன் இளைய தலைமுறைக்கு இது வலுவூட்டுகிறது.

3 மாத ஆங்கிலப் பேச்சு பாடநெறியில் தகவல் தொடர்பாடல் திறன்கள், இலக்கணம், கேட்டல், வாசித்தல் மற்றும் எழுதுதல் போன்ற அத்தியாவசிய அம்சங்கள் உள்ளடங்கியுள்ளது. நடைமுறை அனுபவங்களுக்கான செயல்பாடு அடிப்படையிலான கற்றலும் இதில் அடங்கும். மேலும், ஒரு மாத மென் திறன்கள் பிரிவில் குழுப்பணி, நேர முகாமைத்துவம், விளக்கக்காட்சி திறன்கள் மற்றும் நேர்காணலுக்கு தயார்படுத்தல் ஆகியவை அடங்கும். DFCC அனைவருக்கும் ஆங்கிலத்தின் ஊடாக, DFCC வங்கியானது மொழித் தடைகளை அகற்றி, இலங்கையில் இளைஞர்,யுவதிகளுக்கு கல்வியின் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, நிதிக்கு அப்பால் நாட்டின் எதிர்காலத்திற்கு பங்களிப்பதற்கு ஆதரவளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here