நன்மதிப்பைச் சம்பாதித்துள்ள சூரிய மின்வலு உற்பத்தித் தீர்வுகள் வழங்குனரான CodeGen Sustainable Solutions (Private) Limited உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை DFCC வங்கி அண்மையில் ஏற்படுத்தியுள்ளது. புத்தாக்கமான சூரிய மின்வலு தீர்வுகள் ஊடாக, இலங்கையில் அதிகரித்து வருகின்ற மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் ஒரு முக்கியமான படியாக இக்கூட்டாண்மை மாறியுள்ளதுடன், தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் சூழல் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் நன்மையளிக்கின்ற வகையில், நடைமுறைச் சாத்தியமான நிதி மற்றும் எரிசக்தி தீர்வுகளினூடாக, நிலைபேணத்தக்க அபிவிருத்திக்கு உதவுவதில் இந்த இரு நிறுவனங்களினதும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பிற்கு அமைவாகவும் உள்ளது. இதற்கு அமைவாக, CodeGen வழங்கும் சூரிய மின்வலு தீர்வுகளை தெரிவு செய்கின்ற வாடிக்கையாளர்களுக்கு பாரம்பரிய எரிசக்தி தீர்வுகளில் தங்கியிருக்கும் நிலைமையைக் குறைத்து, மின்சார செலவுகளை குறைப்பதற்கு கவர்ச்சியான வழியை நிதியியல் ரீதியாக அணுகக்கூடிய வகையில் DFCC வங்கி தற்போது அவர்களுக்கு வழங்குகின்றது.
CodeGen வாடிக்கையாளர்களுக்கு DFCC வங்கி வழங்குகின்ற நயமான சூரிய மின்வலு கடன் திட்டங்கள், ஐந்து ஆண்டுகளுக்கு 11.50% என்ற நிலையான வட்டி வீதத்தைக் கொண்டுள்ளன. அத்துடன், கடன் காலப்பகுதியை 10 ஆண்டுகளாக நீட்டித்துக்கொள்ளும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்கள் கொண்டுள்ளதுடன், மின்சார செலவுகளைக் குறைப்பதற்கு நம்பகமான, நீண்ட கால நிதித் தீர்வை வழங்கும் அதேசமயம், இலங்கையில் நிலைபேணத்தக்க எரிசக்தியின் வளர்ச்சிக்கும் பங்களிக்கின்றது. 20 ஆண்டு கால வணிக அனுபவத்தின் பக்கபலத்துடன், உச்ச செயற்திறன் கொண்டதாக, CodeGen வழங்கும் உலகத்தரம் வாய்ந்த, தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட பல்வகை சூரிய மின்வலு தீர்வுகளுடன் இது மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
DFCC வங்கியின் தனிநபர் மற்றும், சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான சிரேஷ்ட உப தலைவரான ஆசிரி இத்தமல்கொட அவர்கள் கருத்து வெளியிடுகையில், “Codegen Sustainable Solutions உடனான எமது ஒத்துழைப்பானது மூலோபாயரீதியான கூட்டாண்மைகளின் அனுகூலத்துடன், நிலைபேணத்தக்க எரிசக்தி நடைமுறையை கைக்கொள்வதற்கு உதவுவதில் எமது அர்ப்பணிப்பை வெளிக்காண்பிக்கின்றது. நயமான சூரிய மின்வலு கடன்களை வழங்கி, தனிநபர்களும், வணிகங்களும் தமது எரிசக்தி நுகர்வைக் கட்டுப்படுத்தி, பாரம்பரியமான மின்சார வழிமுறைகளில் தாங்கள் தங்கியிருப்பதைக் குறைப்பதற்கு அவர்களுக்கு வலுவூட்டுவதே எமது நோக்கம்,” என்று குறிப்பிட்டார்.
அதிகரித்துச் செல்லும் எரிசக்தி நுகர்வு மற்றும் மின்சார செலவுகள் குறித்த சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்கின்ற நிலைமை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையில், நிலைபேணத்தக்க எரிசக்தியை நோக்கிய உலக மாற்றத்திற்கு அமைவாக, எதிர்காலத்திற்கு முகங்கொடுக்க வல்ல, சூழல் மீது பொறுப்புணர்வு கொண்ட தீர்வொன்றை DFCC சூரிய மின்வலு கடன்கள் வழங்குகின்றன. DFCC வங்கியின் புத்தாக்கமான நிதிச் சேவைகள் மற்றும் CodeGen நிறுவனம் சூரியமின் வலு உற்பத்தித் தொழில்நுட்பத்தில் கொண்டுள்ள நிபுணத்துவம் ஆகியவற்றின் இணைப்புடன், இலங்கை மக்களின் தற்போதைய மற்றும் எதிர்கால மின்சார தேவைகளை தீர்த்து வைக்கின்ற, தங்குதடையற்ற, முழுமையான தீர்வுகளை இக்கூட்டாண்மை வழங்குகின்றது. DFCC சூரிய மின்வலு கடன்கள் குறித்த கூடுதல் விபரங்களை அறிந்துகொள்ள 0112350000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தயவு செய்து அழைப்பினை மேற்கொள்ளுங்கள்.