‘தேசத்தை வளப்படுத்துவோம்’ திட்டத்தின் 15 ஆவது வருடத்தை மகிழ்ச்சியான மகிழ்வான நிகழ்வுகளுடன் கொண்டாடிய செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம்

12

இலங்கையின் உணவுத் தொழில்துறையின் அடிக்கல்லாகத் திகழும் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் (SFML) 15 வருடங்களுக்கும் மேலான தேசத்தை வளப்படுத்தல் எனும் நோக்கத்தை  2024 டிசம்பர் 05ஆம் திகதி தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற மகிழ்வான நிகழ்வில் கொண்டாடியது. 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இலங்கையின் பரந்துபட்ட உணவுப் பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றுவதில் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் அடைந்திருக்கும் சிறப்பை பறைசாற்றும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.

இந்த நிகழ்வில் முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜுன ஹேரத், UAE இன் Al Ghurair Foods நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ட்டேகட் ஜேனா (Turgut Yeğenağa) உள்ளிட்ட தொழில்துறையைச் சேர்ந்த விருந்தினர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர். செரண்டிப் விநியோக வலையமைப்பைச் சேர்ந்தவர்கள், நிதி உதவியாளர்கள், பிரதான வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் இதில் இணைந்துகொண்டனர்.

இலங்கையின் பேக்கரி மற்றும் உணவுத் தொழில்துறையின் முன்னேற்றத்தில் தரம் மற்றும் புத்தாக்கம் குறித்து தமது நிறுவனம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு, நிறுவனத்தின் வெற்றிகரமான பயணத்தை செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜய் ஷர்மா தனது உரையில் குறிப்பிட்டார்.

“இலங்கையின் உணவுத் துறையில் தரம் மற்றும் புதுமைகளை நோக்கிய எங்களின் முயற்சியில் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்தின் மரபு கடந்த 15 வருடங்களில் உறுதியாகியுள்ளது. எமது பயணத்தில் நாம் தொடர்ச்சியாக தரம்மிக்க தயாரிப்புக்கள், உணவுப் பாதுகாப்பை பலப்படுத்துவது, நாடு முழுவதிலும் உள்ள சமூகங்களை வளர்ப்பதற்கான போசாக்கு மிக்க தயாரிப்புக்களை வழங்குவதை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றோம். எமது பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எம்மீது வைத்திருக்கும் தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி கூறுகின்றோம்” என விஜய் ஷர்மா தெரிவித்தார்.

செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்தினால் மீள்வடிவமைக்கப்பட்ட சில்லறை பொதிப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டமை இந்நிகழ்வின் குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்தது. நவீனமயமாக்கப்பட்ட பொதியிடலானது நிறுவனத்தின் பிரபலமான ‘7 ஸ்டார்’ தயாரிப்புக்களின் புதிய அத்தியாயத்தைப் பிரதிபலிப்பதுடன், இது 2012 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அனைத்துக் குடும்பங்களினதும் முதல் தெரிவாக விளங்குகின்றது. புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்புகள், தரத்திற்கான வர்த்தக நாமத்தின் அர்ப்பணிப்பைப் பராமரிக்கும் அதேநேரம், சமகால சந்தைப் போக்குகளுடன் ஒத்துப் போகும் வகையில் அமைந்துள்ளன. 

செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்தின் வெற்றிக் கதையில் ஒருங்கிணைந்த எண்ணற்ற பேக்கிரி தொழில்துறையினர், சமையல்கலை நிபுணர்கள் மற்றும் உணவு உற்பத்தியாளர்களுக்கான அர்ப்பணிக்கப்பட்ட பாடலின் முதற்காட்சியும் இங்கு வெளியிடப்பட்டது. இலங்கையின் உணவுத்தொழில்துறையில் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்தின் பயணம் மற்றும் அதன் வகிபாகம், நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் நாளாந்தம் பாண் சென்றடைவதில் காணப்படும் அர்ப்பணிப்பு இந்த இசை அர்ப்பணிப்பின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம், மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் நிறுவனம் வழங்கிவரும் பங்களிப்பை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்த இந்த நிகழ்வு, நிறுவனத்தின் சிறப்பான பயணயத்தின் ஓர் அங்கமாக இருக்கும் பிரதான பங்காளர்களை ஒன்றிணைக்கும் இராப்போசனத்துடன் முடிவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here