தெற்காசிய விவசாய மன்றத்தின் (South Asia Agri Forum) மூன்றாவது அமர்வு ஜனவரி மாதம் 15 தொடக்கம் 17 ஆம் திகதி வரை கொழும்பு Shangri –La ஹோட்டலில் நடைபெறுகிறது. தெற்காசிய மற்றும் இதர பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள், நிபுணர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்கும் இந்நிகழ்வில் விவசாய – உணவுத் துறையுடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்படும். Bharat Subcontinent Agri Foundation இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யும் இந்த அமர்வில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தல், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், விவசாய வர்த்தகத்தை முன்னேற்றுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும். “Global South for Global South (GS2)” எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இந்த அமர்வில் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவித்தல் மற்றும் தானியங்கள், அரிசி, சீனி, பயறு வகைகள், வாசனைப் பொருட்கள், பூங்கா அழகுபடுத்தல், கடற்றொழில் மற்றும் பெருந்தோட்டம் போன்ற துறைகளுடன் தொடர்புடைய பிராந்தியங்குளுயிடையிலான வர்த்தக நடவடிக்கைகளை விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பாக கலந்துரையாடப்படும்.கைத்தொழில் துறை நிபுணர்கள், உயர் அரச அதிகாரிகள், வர்த்தகர்களுடன் ஐக்கிய அறபு இராச்சியம், சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, கனடா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இந் நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். அதன் ஒழுங்குப்பத்திரத்தில் உயர் மட்ட கலந்துரையாடல்கள், அரசுகளுக்கிடையிலான மூலோபாய உடன்படிக்கைகளுடன் ஆரம்ப மட்டத்தில் காணப்படும் பிராந்திய விவசாய – உணவுத் தொழில்நுட்ப கருத்திட்டங்களை ஊக்குவிப்பதற்கான மாநாடுவொன்றும் நடைபெறவுள்ளது. இந்த அமர்வு மூலம் விவசாய – உணவுத் துறையில் இலங்கைக்குரிய இடத்தின் முக்கியத்துவம் பிரதிபலிப்பதோடு புதிய தொழில் முயற்சி வாய்ப்புகளை ஏற்படுத்தல், முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் நிலைபேறான விவசாய – வர்த்தக கொள்கைகளை ஏற்படுத்துவதற்கான இலங்கையின் நோக்கை அடைவதற்கும் உந்துசக்தியாக அமையவுள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்த அமர்வு நேபாளத்திலும் 2024 ஆம் ஆண்டு தாய்லாந்திலும் நடைபெற்றது. 20 இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 1,000 இற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் அதில் பங்கேற்றனர். இந்த அமர்வு தொடர்பான கூடுதல் விபரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் Bharat Subcontinent Agri Foundation இன் உள்நாட்டு பிரதிநிதி கலாநிதி அப்துல் காதர் அவர்களி்டமிருந்தும் பெற முடியும்.
Popular
தெங்குச் செய்கையில் அதிக விளைச்சலுக்காக DIMO Agribusinesses இடமிருந்து வெற்றிகரமான தீர்வுகள்
உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், நாட்டின் கேள்வியை பூர்த்தி செய்யும் அளவுக்கு சந்தையில் தேங்காய் விநியோகம் இல்லாததால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை என்பது தெளிவாகிறது. இதற்குத் தீர்வாக, தென்னங் காணிகளின்...
அதிநவீன Gastroenterology & Endoscopy சேவையை அறிமுகப்படுத்தும் நைன்வெல்ஸ் மருத்துவமனை
பெண்கள் மற்றும் சிறுவர்களின் சுகாதாரப் பராமரிப்பில் இலங்கையின் முன்னணி நிறுவனமாக புகழ்பெற்று விளங்கும் நைன்வெல்ஸ் மருத்துவமனை, அதிநவீன எண்டோஸ்கோபி வசதியுடனான சமிபாட்டுத்தொகுதி பிரச்சினைகள் தொடர்பான gastroenterology & endoscopy சேவையை அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறது....
AESL ~ $3 பில்லியன் மின்பரிமாற்றத் திட்டத்தை வென்றது;
இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய திட்ட வெற்றி
Editor’s Synopsis
இந்த திட்டம் 6 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வெளியேற்றும்
AESL இன் orderbook இப்போது ~$6.5 பில்லியனாக உள்ளது
AESL இந்த திட்டத்தை 4.5 ஆண்டுகளில் BOOT...
Richwin Investment and Credit நிறுவனத்துக்கு Pinnacle Sri Lanka மற்றும் People’s Excellency இரட்டை விருதுகள்
Richwin Investment and Credit நிறுவனம் Pinnacle Sri Lanka 2024 விருது விழாவில் நிதிச் சேவை உயர் விருதை வென்றுள்ளது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற மேற்படி விருது விழாவில்...
Datatech Lanka நிறுவனத்துக்கு இரண்டு தேசிய மட்டத்திலான உயர் விருதுகள்
இலங்கையின் ஜப்பான் மொழி பாடசாலைகளில் முதன்மை நிறுவனமான Datatech Lanka குழுமத்துக்குச் சொந்தமான Institute of Datatech Lanka தனியார் நிறுவனத்துக்கு இலங்கை இளம் தொழில்முயற்சியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த 2024 ஆம்...