டேர்டன்ஸ் வைத்தியசாலை, 3வது தடவையாகவும் Joint Commission International, USA (JCI) மீள்அங்கீகாரத்தைப் பெற்று சுகாதாரத் துறையில் முன்னிலையாளர் என்ற தனது ஸ்தானத்தை மறுபடியும் உறுதிப்படுத்தியுள்ளது. நோயாளர் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் மகத்துவத்தின் மீது டேர்டன்ஸ் வைத்தியசாலையின் ஓயாத அர்ப்பணிப்பின் அடையாளமாக மாறியுள்ள இச்சாதனையானது, மருத்துவ நோக்கத்திற்கான சுற்றுலாத்துறைக்கு உகந்த நாடாக இலங்கையை பிரபலப்படுத்துவதற்கு வழிவகுக்கும். இலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சி கண்டு வருகின்ற நிலையில், டேர்டன்ஸ் வைத்தியசாலை போன்ற ஸ்தாபனங்களின் வழிநடத்தலுடன் வலுவான, கட்டுபடியான மற்றும் நம்பகமான சுகாதாரப் பராமரிப்புத் துறை காரணமாக இந்நாடு மருத்துவ நோக்கத்திற்கான சுற்றுலாத்துறையில் வளர்ச்சி கண்டு வருகின்றது.
நோயாளர் கவனிப்பு, பாதுகாப்பு நெறிமுறைகள், வைத்தியசாலை செயல்பாடுகள் மற்றும் நிர்வாக ஆட்சி போன்ற அம்சங்களை உள்ளடக்கி, வைத்தியசாலையின் நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்புபட்ட 1,200 க்கும் மேற்பட்ட கூறுகளை மதிப்பீடு செய்வதில் வல்லுனர்களைக் கொண்ட அணியால் விரிவான மதிப்பீடு செய்யப்பட்டே JCI மீள்அங்கீகார செயல்பாடு இடம்பெறுகின்றது. அந்த வகையில், அதிநவீன நோயாளர் பாதுகாப்பு நெறிமுறைகளின் அமுலாக்கம், தொடர்ச்சியான தர மேம்பாட்டு முன்னெடுப்புக்கள், விரிவான பணியாளர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் நோயாளரை மையமாகக் கொண்ட கவனிப்பின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பலனாக, டேர்டன்ஸ் வைத்தியசாலைக்கு இந்த மீள்அங்கீகார கௌரவம் கிடைத்துள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் டேர்டன்ஸ் வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு தொடர்பான ஒவ்வொரு அம்சமும் சர்வதேச மிகச் சிறந்த நடைமுறைகளுடன் ஒன்றியுள்ளதை உறுதி செய்வதுடன், மிகச் சிறப்பான மருத்துவ பெறுபேறுகள், நோயாளர் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு திறன் ஆகியவற்றுக்கு பங்களிக்கின்றன.
டேர்டன்ஸ் வைத்தியசாலையின் பிரதம செயல்பாட்டு அதிகாரி மகானில் பெரேரா அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “JCI மீள்அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதில் எமது ஆற்றலானது எமது ஒட்டுமொத்த அணியின் திறன்மிக்க உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் பலனாகும். சுகாதாரப் பராமரிப்பில் மகத்துவம் மீதான அர்ப்பணிப்பு மற்றும் நோயாளர் பாதுகாப்பு, தரம் போன்றவற்றில் செலுத்தியுள்ள ஓயாத கவனம் ஆகியவற்றை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. சுகாதாரப் பராமரிப்பில் தங்க முத்திரையாகப் போற்றப்படுகின்ற Joint Commission International இடமிருந்து மீண்டும் ஒரு முறை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றமை எமக்கு மிகவும் கௌரவம் அளிக்கின்றது. மருத்துவ நோக்கத்திற்கான சுற்றுலாத்துறைக்கான நாடாக உலக வரைபடத்தில் இலங்கைக்கு அங்கீகாரம் கிடைப்பதற்கு இது வழிகோலுவதுடன், மருத்துவ சிகிச்சை நோக்கங்களுக்காக வெளிநாட்டுப் பிரஜைகள் இந்த நாட்டிற்கு வருகை தருவதையும் பெருமளவில் ஊக்குவிக்கும்,” என்று குறிப்பிட்டார்.
தர உத்தரவாதத் துறையின் சிரேஷ்ட முகாமையாளர் நிஷாதி விதானகே அவர்கள் கருத்து வெளியிடுகையில், “தர நடைமுறைகள் அனைத்தையும் சிறப்பாகப் பேணுவதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், அதன் பிரதிபலிப்பே தற்போது நிலைநாட்டியுள்ள சாதனை. உலகத்தரம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்கி, பரிணாம மாற்றம் கண்டு வருகின்ற எமது நோயாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு எமது நெறிமுறைகளை தொடர்ந்தும் மேம்படுத்துவதில் எமது கவனம் தங்கியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.
தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் கருணை மிக்க கவனிப்பை வழங்குவதில் கவனம் செலுத்தியவாறு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நோயாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு டேர்டன்ஸ் வைத்தியசாலை மிகவும் சிறப்பான ஸ்தானத்தில் உள்ளது. வைத்தியசாலையிலுள்ள அதிநவீன மருத்துவ வசதிகள், உயர் மட்டத்தில் தொழில்வல்லுனர்களாகவுள்ள பணியாளர்கள், கடுமையான தர நடைமுறைகளுக்கு கீழ்ப்படிதல் ஆகியன, நம்பகமான மற்றும் கட்டுபடியான மருத்துவ பராமரிப்பினை நாடுகின்றவர்களுக்கு கவர்ச்சியானதொரு தெரிவாகும். JCI மீள்அங்கீகாரத்தைப் பெற்றுள்ள டேர்டன்ஸ் வைத்தியசாலை, மருத்துவ நோக்கத்திற்கான சுற்றுலாத்துறைக்கான பிரதான நாடாக இலங்கையை நிலைநிறுத்தி, தேசிய பொருளாதாரத்திற்கு பங்களித்து, வெளிநாட்டு நாணய வருவாயை ஈட்டுவதற்கான புதிய வழிமுறைகளை ஏற்படுத்தும். டேர்டன்ஸ் வைத்தியசாலை மற்றும் அதன் சேவைகள் குறித்த கூடுதல் விபரங்களை அறிந்துகொள்ள www.durdans.com என்ற இணையத்தளத்தைப் பாருங்கள் அல்லது இலங்கையில் எந்தவொரு தொலைபேசி வலையமைப்பினூடாகவும் 1344 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.