ஜோன் கீல்ஸ்அறக்கட்டளை (ஜே.கே.எஃப்), ஸ்கேலிங் அப் நியூட்ரிஷன் பீப்பள்ஸ் போஃரம் (சன் பிஎஃப்) உடன் இணைந்து, ஜோன் கீல்ஸ் பிரஜா சக்தி இடங்களான கொழும்பு 02 மற்றும் ஜா-எலவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து பாடசாலைகளை இலக்கு வைத்து நடைபெற்று வரும் பாடசாலை ஊட்டச்சத்து திட்டத்தின் ஒரு பகுதியாக, ஊட்டச்சத்து விழிப்புணர்வு அமர்வுகளை வெற்றிகரமாக தொடங்கியது. இந்த திட்டம் ஊட்டச்சத்து விழிப்புணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் முன்னர் செயல்படுத்தப்பட்ட பாடசாலை உணவுத் திட்டத்தை முழுமையாக்கும் வகையில் பாடசாலை தோட்டக்கலை போன்ற நிலையான நடைமுறைகளை மேம்படுத்துகிறது.
2023 டிசம்பரில் கொழும்பு 2 இல் இரண்டு பாடசாலைகளில் இடம்பெற்ற அமர்வு பலதரப்பட்ட பயனாளிகள் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை கொழும்பு 2 இல் உள்ள இரண்டு பாடசாலைகளிலும், 2024 பெப்ரவரி 16 முதல் 27 வரையான காலப்பகுதியில் ஜா-எலவில் உள்ள ஐந்து பாடசாலைகளிலும், விழிப்புணர்வு அமர்வுகள் நடத்தப்பட்டன. இதுவரை 1,211 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பயனடைந்துள்ளனர்
குழுமத்தின் நெருக்கடி நிலைக்கான பதிலளிப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் வணிகங்களுடன் இணைந்து ஜேகேஎஃப் ஆல் நடைமுறைப்படுத்தப்பட்ட பாடசாலை உணவுத் திட்டம், நிலையான நடைமுறைகளின் அவசியத்தைக் கண்டது. கொழும்பு 12 இல் உள்ள ஏ.ஈ. குணசிங்க பாடசாலையில் பாடசாலை தோட்டக்கலைத் திட்டத்தை முன்னோடியாக கொழும்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து வழிநடத்திய இத் திட்டம் இன்றுவரை வெற்றிகரமாக தொடர்கிறது. ஜூலை 2023 இல், பாடசாலை ஊட்டச்சத்து திட்டத்தைத் தொடங்க ஜேகேஎஃப், சன் பிஎஃப் உடன் ஒரு மூலோபாய ஒத்துழைப்பில் இணைந்தது. இதற்கு முன்னும் பின்னும் மாகாண மற்றும் வலய மட்டங்களில் உள்ள முக்கிய கல்வி அதிகாரிகளுடனும், சுகாதார அமைச்சின் பிரதிநிதிகளுடனும் பல பங்குதாரர்களின் ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கு விரிவான ஈடுபாட்டுடன் செயல்பட்டது. கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, பாடசாலை அதிபர்கள், சுகாதார மேம்பாட்டுப் பணியகம், வேர்ல்ட் விஷன் லங்கா மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் அதிகாரிகளை உள்ளடக்கிய முக்கிய பங்குதாரர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி 2023 அக்டோபரில் நடத்தப்பட்டது.
“இன்று சமநிலையான உணவைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டோம். உப்பைக் குறைப்பது, பச்சைக் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது, உடனடி உணவுகள் மற்றும் சோடாக்களை தவிர்ப்பது போன்ற முக்கியமான விஷயங்கள் எங்களுக்கு கற்பிக்கப்பட்டது. இந்த அமர்வு எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது, மேலும் நான் கற்றுக்கொண்டதை வீட்டிற்கு சென்றவுடன் என் அம்மாவிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” – கொழும்பு 2, டி.பி ஜயா சாஹிரா கல்லூரியின் தரம் 9 மாணவி.
பாடசாலைகளில் இடவசதிக்கு ஏற்ப பாடசாலைத் தோட்டங்கள் அமைப்பதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தோட்டங்களில் நடவுகளை அமைப்பதற்கும் தொடங்குவதற்கும் ஜேகேஎஃப் மற்றும் சன் பிஎஃப் மூலம் நடைபெறும். பாடசாலை அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் செயல்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் ஆதரவு வழங்கப்படும். பாடசாலைத் தோட்டங்களில் கிடைக்கும் காய் கறிகள் பாடசாலை உணவுக்காகப் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊட்டச்சத்து விழிப்புணர்வு திட்டம் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை வலியுறுத்துவதுடன், உள்ளடக்கிய மற்றும் சமமான தரமான கல்வி மற்றும் ஐக்கிய நாடுகளின் 2030 நிகழ்ச்சி நிரலில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கூட்டாண்மைகளை வளர்ப்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் கவனம் செலுத்தும் ஆறு பகுதிகளில் ஆரோக்கியமும் ஒன்றாகும் – ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (ஜேகேஎச்), கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப் பெரிய கூட்டு நிறுவனமாகும். இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயங்குகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள ஜோன் கீல்ஸ் குழுமம் 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதோடு, எல்.எம்.டி இதழால் கடந்த 18 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்’ என்று தரப்படுத்தப்பட்டுள்ளது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் ‘நிறுவன அறிக்கையிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை’யில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு அங்கத்தவராக இருக்கும் அதே வேளை, ஐ.நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையும் கொண்ட ஜே.கே.எச், ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் ஊடாக அதன் கூட்டாண்மை சமூக பொறுப்பாக ‘எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்புதல்’ என்பதை நோக்கி பயணிக்கின்றதுடன் இலங்கையில் பிளாஸ்டிக் மாசினை குறைக்க ஒரு வினையூக்கியாக ‘பிளாஸ்டிக்சைக்கிள்’ ஊடாக செயற்படுகின்றது