‘தேசத்தை வளப்படுத்துவோம்’ என்ற நோக்கத்தில் உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்படும் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம், முதியோருக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ‘உத்தரம தலதா’ நிகழ்ச்சித்திட்டத்தை மூன்றாவது வருடமாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதை பெருமையுடன் அறிவிக்கின்றது.
இந்த வருடம் தெரிவுசெய்யப்பட்ட நான்கு முதியோர் இல்லங்களிலிருந்து அதாவது கேகாலையில் இரு இல்லங்கள், கடுகஸ்தோட்டையில் (கண்டி) இரண்டு இல்லங்களிலிருந்து 100 முதியோருக்கு இந்நிகழ்வு முன்னெடுக்கப்படும். இந்த விசேட விருந்தினர்கள் தலதா மாளிகைக்கு மறக்க முடியாத பயணத்தை மேற்கொண்டு, வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும், ஆசீர்வாதத்தைப் பெறுவதற்குமான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வர்.
முந்தைய நிகழ்வுகளைப் போன்று முதியோர் மீண்டும் எசல பெரஹரவின் சிறப்பையும் கண்டுகளிப்பார்கள். அவர்கள் இந்தப் பெரஹரவைப் பார்ப்பதற்கு வசதியான முன்வரிசை ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், உணவுகள் மற்றும் சிற்றுண்டிங்களும் அவர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் அற்புதமான கலாசாரத்தை மகிழ்ச்சியுடன் கண்டுகளிக்க முடியும். செரண்டிப் ஆலை நிறுவனம் இந்த முதியவர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், இவர்களின் நலனை உறுதிசெய்ய வைத்தியர்கள் மற்றும் மருத்துவக் குழுவை எந்நேரமும் தயாராக வைத்திருக்கும்.
‘உத்தம தலதா’ செயற்திட்டத்தின் ஊடாக செரண்டிப் கோதுமை மா ஆலை, இந்த சமூகத்திற்கு விசேடமாக முதியோருக்கும், ஓய்வுபெற்ற குடிமக்களுக்கும் அர்ப்பணிப்புடன் இருப்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த முயற்சியானது, அன்பை வெளிப்படுத்துவதற்கும், அடுத்த தலைமுறையுடன் ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கையாக அமைகின்றது.
உலக முதியோர் தினத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாடு கொண்டாடவிருக்கும் நிலையில், வளர்ச்சி என்பது உணவுடன் மாத்திரம் முடிவுறாமல் நல்ல எண்ணங்கள் மற்றும் செயல்களைக் கொண்டாடுதல் என்பதன் முக்கியத்துத்தை உள்ளடக்கியுள்ளது என்பதையும், இது ‘தேசத்தை வளப்படுத்துவோம்’ என்ற நிறுவனத்தின் இலக்குடன் இணைந்து என்பதையும் செரண்டிப் கோதுமை ஆலை சுட்டிக்காட்டுகின்றது.