சமய நல்லிணக்கத்தின் புதிய சகாப்தத்தை குறிக்கும்முகமாக 11,500 சர்வதேச சுயாதீன சபைகள்  பேராயர் கிர்பி டி லான்ரோல் அவரகலின் மேற்பார்வையின் கீழ் வருகின்றன.

56

இலங்கையின் அப்போஸ்தலிக்க பேராயமானது, (ADC), இந்திய தேசிய அப்போஸ்தலிக்க பேராயத்துடன் (INA) இணைந்து, உலகளாவிய ரீதியில் தனது பணியின் விரிவாக்கத்தை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது. சர்வதேச சுதந்திர அப்போஸ்தலிக்க மறைமாவட்டமானது, (IIADS) அதன் பொதுச் செயலாளராக பேராயர் கர்பி சின்கிளேயர் டி லனரோல் அவர்களை நியமித்து, அவரின் கீழ் இலங்கையில் உள்ள 670 தேவாலயங்களையும் தாண்டி இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவிலுள்ள 11,000 தேவாலயங்களுகான ஆணையையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

சுமார் 10 ஆண்டுகளாக, ADC இலங்கையில் சுதந்திரமான மற்றும் சுயாதீன தேவாலயங்களுக்கு சேவை மற்றும் பாதுகாப்பு வழங்கிவருவதோடு, இந்த சபைகளுக்காக துணை நின்றும் வருகின்றது. ADC பாடசாலையாலைனது, தற்போது நாடு முழுவதிலுள்ள 400 போதகர்கள் மற்றும் கிறிஸ்தவ தலைவர்களுக்கு பயிற்சியளித்து வருகின்றது.   

பேராயர் கர்பி டி லனரோல் மற்றும் அவரது மனைவி ஃபியோனாவுடன் இணைந்து, இலங்கையின் மத சமூகத்தில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மிக பெரிய சக்தியாக இருந்து வருகிறனர். அத்தோடு, சமய நல்லிணக்கம் மற்றும் நீதியையும் மதங்களுக்கிடையிலான உரையாடல்களால் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் அவரது தலைமை செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமன்றி சிறுபான்மையினரின் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக அவர் தனது வாதங்களை முன்நிறுத்தி வருகின்றார். காலஞ்சென்ற மதிப்புக்குரிய காலநிதி ஒபேசேகர அவர்களால் வழிநடத்தப்பட்ட இவர்கள், இப்போது Dave Hodgson of Kingdom Initiatives Ministries ஐ தங்கள் ஆன்மீக தந்தையாகவும், வழிகாட்டியாக கருதுகின்றனர். பி~ப் கர்பி டி லனரோல் அவர்கள், பி~ப் பால் டி.மாறனின் அப்போஸ்தலிக்க மறைவின் கீழ் உள்ளார், அவர் மதச்சார்பற்ற இலவச தேவாலயங்களுக்கு பேராயத்தின் ஆளுகை மாதிரியை முன்னோடியாகக் கொண்டிருந்தவர். உள்ளூர் கலாச்சார நடைமுறைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் நடைமுறை தீர்வுகளுடன் சமூக பிரச்சனைகளை நிவர்த்தி செய்து வந்தவர்.   

இந்த முன்மாதிரியானது, சமரசம், நீதி மற்றும் ‘தீர்வு அடிப்படையிலான நற்செய்தி” ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் சூழலை ஊக்குவிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

அவரது விரிவாக்கப்பட்ட பொறுப்புகளை பிரதிபலிக்கும் வகையில், பி~ப் கர்பி டி லனரோல் அவர்கள் ‘இயேசுவின் ஊழியத்தின் முக்கிய நுண்ணறிவுகளில் ஒன்று, மனமாற்றத்தில் அல்ல, மாறாக தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று தனது கருத்தை இவ்வாறு முன்வைத்துள்ளார். அத்தோடு பசித்தவர்களுக்கு உணவளித்தார். நோயுற்றவர்களைக் குணப்படுத்தினார். மேலும் அது குறித்து கருத்து தெரிவித்த அவர், கிறிஸ்தவர்கள் தங்கள் பகுதியில் ஒரு தீர்வாக இருக்க வேண்டும்-அது ஒரு கிராமமாகவோ, நகரமாகவோ அல்லது தேசமாகவோ இருக்க வேண்டும்.   

670 இலவச தேவாலயங்களைக் கொண்ட ADC இன் தலைவராக, எனது நோக்கம், நமது கிறிஸ்தவ போதகர்கள் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட வேண்டிய முன்னுரிமைகளை, அனைத்து மதங்களுக்கும் நிபந்தனையின்றி, பாகுபாடு இல்லாமல் சேவை செய்வதன் மூலம் அவர்களைக் கௌரவப்படுத்தே ஆகும்.  

பி~ப் கர்பி டி லனரோலின் எதிர்காலத்திற்கான தொலைநோக்கு பார்வை மிக தெளிவாக உள்ளது: அனைத்து மதங்களுக்கிடையில் ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் கூட்டு இலக்கை நோக்கி IIADS-இணைந்த சபைகளின் விரிவான வலையமைப்பை வழிநடத்துவதை அவர் நோக்கமாகக் கொண்டுள்ளார். இந்த முன்முயற்சியானது, சபைகளின் கலாச்சாரத்தின் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி எடுத்து செல்வதோடு,, இது பன்முகத்தன்மையையும் உள்ளடக்கியதுதோடு மட்டுமல்லாது, சமூகங்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தும் பாலமாகவும் காணப்படுகின்றது.

பேராயர் கர்பி டி லனரொல் அவர்களின் நியமனத்தை வரவேற்ற INA மறைமாவட்டத்தின் தலைவரான பேராயர் கலாநிதி போல் ரீ. மாறன் அவர்கள், தலைமைத்துவத்தைப் போற்றி கருத்து வெளியிடுகையில், ‘பேராயர் கர்பி அவர்கள் ஒரு வாழும் மேதை – மனு~ன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்,” என்று குறிப்பிட்டுள்ளார். 

பி~ப் கர்பி டி லனரோல் அவர்கள் தனது பராமரிப்பில் கீழுள்ள சுயாதீன  சபைகளின் மாற்றத்திற்கான வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ‘எங்கள் சுயாதீன சபைகளின் மூலம் இந்த நாட்டிற்கு ஒரு தீர்வை வழங்க முடியும் என்று நான் நம்புகிறேன். அத்தோடு அவர்களுக்கு சரியான முன்மாதிரி முறைமை தேவை.” என்று குறிப்பிட்டுள்ளார்.  கிறிஸ்துவின் போதனைகள் மற்றும் முன்மாதிரிக்கு இணங்க, ஒற்றுமை, சேவை மற்றும் வல்லமை நிறைந்த ஊழியத்தின் எதிர்காலத்தை வளர்க்கும், ADC மற்றும் மதச்சார்பற்ற சுயாதீன சபைகளின் உலகளாவிய வலையமைப்பிற்கான இந்த வரலாற்ற சிறப்புமிக்க சந்திப்பு, ஒரு புதிய அத்தியாயத்தைக் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here