சஞ்சீவனீ ஆயுர்வேத நிறுவனத்தின் புதிய சிகிச்சை நிலையம் Luxyana Wellness பெயரில் Crescat Boulevard இல் திறந்து வைப்பு

8

இலங்கையின் ஆயுர்வேதத் துறையின் புகழ்மிகு வர்த்தகநாமமான சஞ்சீவனீ ஆயுர்வேத நிறுவனத்தின் புதிய சிகிச்சை நிலையம் ‘Luxyana Wellness’ எனும் பெயரில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. L17, Crescat Boulevard, கொழும்பு என்ற முகவரியில் அமைந்துள்ள அந் நிலையம் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. ரம்மியமானதும் அமைதியானதுமான சூழலில் அமைந்துள்ள இந் நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பண்டைய ஆயுர்வேதமும் நவீன கண்டுபிடிப்புகளும் கலந்த சிகிச்சையினை பெற முடியும். அதனுடன் இணைந்ததாக தனித்துவமான ஊக்குவிப்புத் திட்டங்களை செயற்படுத்துவதற்கும் விஷேட விலைக் கழிவுகளை அறிமுகப்படுத்துவதற்கும் மேற்படி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அங்கீகாரம் பெற்ற ஆயுர்வேத வல்லுநர்களிடமிருந்து இலவசமாக ஆலோசனை சேவையினை பெறவும் வசதி செய்துக்கொடுக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் நேரம் ஒதுக்கிக்கொள்ளுதல் மற்றும் யோகா நிகழ்ச்சிகள் போன்ற வசதிகளை கொண்ட VIP அங்கத்துவத் திட்டமொன்றும் முன்னெடுக்கப்படுகின்றது. 0702224433 தொலைபேசி / வாட்ஸ்அப் இலக்கம் மற்றும் [email protected] மின்னஞ்சல் முகவரி, www.luxyanawellness.com இணையத்தளம் ஆகியவற்றின் ஊடாகவும் Luxyana Wellness தொடர்பாக கூடுதல் விபரங்களை பெற முடியும்.Luxyana Wellness மூலம் பல்வேறு எண்ணெய் வகைகளை கொண்ட உடம்பை பிடித்துவிடல் (Massage) மற்றும் ஆவி குளியல் போன்ற செயற்பாடுகளை உள்ளடக்கிய உடம்புக்கு புத்துயிர் அளிக்கும் ஆயுள் வளர்ச்சி சிகிச்சைகள், ஒஸ்டியோ ஆத்தரைட்டீஸ் மற்றும் சையினசைட்ஸ் போன்ற விஷேட சுகாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வியாதிஹரணீ பக்கேஜ், Manicure மற்றும் Pedicure உள்ளடக்கிய மணமகள்களுக்கான பக்கேஜ் போன்ற சிசிக்சைகள் மற்றும் சேவைகளையும் பெற முடியும். ஹெலஉட மணன்னலாகே அந்திரிஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட சஞ்சீவனீ ஆயுர்வேத நிறுவனத்தின் உரிமையை பின்னாளில் பெற்ற திரு ஹெலஉட மணன்னலாகே குணரத்ன  அதனை நாடறிந்த வர்த்தகநாமமாக பிரபல்யபப்படுத்தியதோடு 1992 ஆம் ஆண்டில் அது ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதொரு நிறுவனமாக வளர்ச்சி கண்டது. அதன் தற்போதைய உரிமையாளரான திரு எச்.எம்.டீ.எஸ் சந்தகெலும் பாரம்பரிய அறிவை நவீன தேடல்களுடன் கலந்து நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். பொறியியல் மற்றும் ஆயுர்வேதம் ஆகிய இரண்டு துறைகளினதும் அறிவு மற்றும் அனுபவத்தை கொண்டுள்ள அவர் Pinnacle Sri Lanka விருது விழாவில் ஆண்டின் சிறந்த தொழில்முயற்சியாளருக்கான விருதையும் வென்றுள்ளார். மேலும், சஞ்சீவனீ ஆயுர்வேத நிறுவனம் Business World International விருது விழாவிலும் ஆண்டின் சிறந்த உள்நாட்டு மருந்து உற்பத்தியாளருக்கான விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here