சஞ்சீவனி ஆயுர்வேத நிறுவனத்துக்கும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி எச்.எம்.டீ.எஸ் சந்தகெலும் அவர்களுக்கும்  BWIO விருதுகள்

22

ஆயுர்வேத மருத்துவ உற்பத்தித் துறையில் முன்னோடியாக திகழும் சஞ்சீவனி ஆயுர்வேத நிறுவனமும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி எச்.எம்.டீ.எஸ் சந்தகெலும் அவர்களும்  BWIO விருது விழாவில் விருதுகளை வென்றுள்ளனர். அதன் போது சஞ்சீவனி ஆயுர்வேத நிறுவனம் ஆண்டின் சிறந்த இலங்கை சுதேச மருத்துவ உற்பத்தியாளர் என்ற விருதையும் திரு சந்தகெலும் ஆண்டின் இளம் தொழில் முயற்சியாளர் என்ற விருதையும் வென்றுள்ளார். 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ள சஞ்சீவனி ஆயுர்வேத உற்பத்திகளை தென் மாகாணத்தின் ஹெலஉடகந்த கிராமத்தில் வசித்து வந்த ஹெலஉட மனன்னலாகே அந்திரிஸ் அவர்களும் அவரது பாரியாருமே முதன் முதலில் ஆரம்பித்துள்ளனர். 1960 ஆம் ஆண்டில் எச்.எம் சுவனேரிஸ் அவர்கள் அதனை ஒரு நிறுவனமாக நிறுவியதோடு எச்.எம் ஞானரத்ன அவர்களின் தலைமையில் 1992 ஆம் ஆண்டில் அது ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக மாறியது. தற்பொழுது பாரம்பரிய அறிவையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து  மருந்துகளை உற்பத்தி செய்து வரும் இந்நிறுவனத்தை நான்காவது தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் திரு சந்தகெலும் தலைமையேற்று வழிநடத்துகின்றார்.

ISO 9001:2015 மற்றும் GMP தரச் சான்றிதழ்களை வென்றுள்ள சஞ்சீவனி ஆயுர்வேத நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தர நியமங்களுடன் மருந்துகளை உற்பத்தி செய்கின்றது. ஆரோக்கியமான சமநிலையான வாழ்க்கை முறைக்கு வழிகாட்டும் ஏராளமான மருந்துகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆரோக்கிய சமநிலையான வாழ்க்கை முறைக்கு வழிகாட்டும் சஞ்சீவனி ஸ்ரீமத் மதன மோதக்கய, நீண்ட நேரத்துக்கு உறவு கொள்ளும் வகையிலான பாலியல் சக்தி, இன்பம், மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் காமேஸ்வரி இராசாயனய, பாலியல் ஆற்றலை மேம்படுத்தும் அஸ்வகந்த எண்ணெய் போன்றவை, இந் நிறுவனத்தின் உற்பத்திகளில் முக்கியத்துவம் வாய்ந்தனவையாகும். M23, சங்கரி-லா வன்கோல்பேஸ் வணிக வளாகம், கொழும்பு (M23, Shangri-La One Galle Face Mall, Colombo) எனும் முகவரியில் அமைந்துள்ள சஞ்சீவனி ஆயுர்வேத நிறுவனத்தின் தலைமை விற்பனை நிலையத்திலும் www.sanjeewanieayurveda.com இணையதளத்தின் ஊடாகவும் மேற்படி உற்பத்திகளை கொள்வனவு செய்ய முடியும். தற்கால தர நியமங்களுக்குட்பட்டு பண்டைய ஆயுர்வேதத்தை காப்பதற்கு சஞ்சீவனி ஆயுர்வேத நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பாராட்டி கௌரவிப்பதாக BWIO விருது விழாவில் பெற்ற இந்த விருதுகளை குறிப்பிட முடியும். இலங்கை சுதேச மருத்துவ உற்பத்தியின் மூலம் உலகளவில் ஆயிரக்கணக்கான மக்களை குணப்படுத்திய சஞ்சீவனி ஆயுர்வேத நிறுவனத்தின் உயர் தரத்தை இந்த வெற்றி மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here