கொழும்பின் உச்சத்தில் ஒரு விருந்து: Blue Orbit by Citrus இல் பண்டிகைக் கால கொண்டாட்டம் 

14

இலங்கையில் அதியுச்சத்தில் சுழலும் உணவகத்தில் 360 பாகை கோண காட்சிகளுடன் தனித்துவமான விருந்து அனுபவம்

விடுமுறைக் காலம் நெருங்கி வருகின்ற நிலையில், வேறு எங்கும் கிடைக்காத விருந்து அனுபவத்துடன், கொழும்பின் வான் உச்சியில் கொண்டாடுவதற்காக Blue Orbit by Citrus விருந்தினர்களை அழைக்கின்றது. கொழும்பு தாமரைத் தடாகத்தின் உச்சியில் அமைந்துள்ள இந்த சுழலும் உணவகம், இலங்கையிலும், தெற்காசியாவிலும் அதியுச்சத்தில் அமைந்துள்ள உணவகமாகத் திகழ்வதுடன், உணவின் இன்பத்துடன், 360 பாகை தோற்றத்தில் கீழேயுள்ள நகரத்தின் பிரமிக்கவைக்கும் தோற்றங்களுக்கும் உத்தரவாதமளிக்கின்றது.     

பண்டிகைக்கால வசீகரத்துடன், சிறந்த உணவு வகைகளை கலந்து வழங்கும் தனித்துவமான விருந்து அனுபவத்தை Blue Orbit வடிவமைத்துள்ளது. பல்வேறுபட்ட சர்வதேச உணவு வகைகள் முதல் புதிய வகையிலான பண்டிகைக்கால மது பானங்கள் வரை பண்டிகைக்காலத்திற்கேற்ற மிகச் சிறந்த சுவை வடிவங்களை வழங்குவதற்கு இந்த உணவகத்தின் பாண்டித்தியம் பெற்ற சமையல் கலைஞர்கள் அணி தயாராக உள்ளது. புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள மது பரிமாறும் பார், தனித்துவமான கொக்டெயில் பானங்கள் மற்றும் விசேடமாக தயாரிக்கப்பட்ட மது பான வகைகளை வழங்கி, விருந்துச் சூழலை மெருகேற்றி, குடும்பமாக நத்தார் பண்டிகையைக் கொண்டாடவோ, அல்லது புத்தாண்டு பிறப்பதற்கு முன்னர் நெருக்கமானவர்களுடன் இரவு விருந்தை சுவைத்து மகிழவோ என அனைத்து வகையான ஒன்றுகூடல்களுக்கும் நேர்த்தியான ஏற்பாட்டைக் கொண்டுள்ளது.          

300 க்கும் மேற்பட்ட இத்தாலிய, ஜப்பானிய, சீன, மத்திய கிழக்கு, இந்திய, இலங்கை மற்றும் மேற்கத்தைய உணவு வகைகளைக் கொண்ட மதிய உணவு மற்றும் இரவு உணவுத் தெரிவுகளை விருந்தினர்கள் சுவைத்து மகிழ முடியும். பான்கேக் தெரிவுகள் (Pancake), சிக்கன் தெரிவுகள், நீங்களே உங்களுக்கு வேண்டிய பாஸ்தா உணவை தயாரிக்கும் தெரிவுகள், வறுத்த உணவு பகுதி (roast), மங்கலான வெளிச்சத்தில் உணவு ஏற்பாடுகள் (dim sum corner), சீஸ் தெரிவுகள் (cheese corner), பீட்சா தெரிவுகள் (pizza station), சலாட் தெரிவுகள் (salad), கடலுணவுப் பகுதி (seafood corner), இனிப்பு உணவு வகை (desserts), கொத்துப் பகுதி (kottu station), சிறுவர்களுக்கான இனிப்புப் பகுதி (sweet corner) ஆகியன இங்கே கிடைக்கின்ற உணவு வகைகளில் குறிப்பிடத்தக்கவை. இந்த உணவு வகைகள் ஒவ்வொன்றும் Blue Orbit இலுள்ள திறமைமிக்க சமையல் கலைஞர்களால் மிகவும் கவனமாக தயாரிக்கப்படுவதுடன், விருந்து உண்ணும் அனுபவமானது கொழும்பு வான்பரப்பின் பிரமிக்கவைக்கும் அழகிய காட்சிகளுடன் இணைந்ததாக மாறுகின்றது.            

டிசம்பர் 24ஆம் திகதி நத்தார் பிறப்பதற்கு முன்பதான இரவு உணவு, 25ஆம் திகதியன்று நத்தார் மதிய உணவு மற்றும் புத்தாண்டு பிறப்பதற்கு முன்பாக 31ஆம் திகதி இரவு உணவு என பண்டிகைக்கால சிறப்பு விருந்துகள் இங்கே கிடைக்கப்பெறுகின்றன. பண்டிகைக்கால ஒன்றுகூடல்கள், காதலை பரிமாறிக்கொள்ளும் மாலைப்பொழுது, அல்லது வேறு எந்த வகையான கொண்டாட்டமாக இருப்பினும், அனைத்து தருணங்களுக்கும் மறக்க முடியாத நினைவுகளை Blue Orbit வழங்குகின்றது. 225 பேர் அமர்ந்து உணவருந்தக்கூடிய இட வசதியுடன், தாராளமான வாகனத் தரிப்பிட வசதியையும் கொண்டுள்ள இந்த உணவகத்தில் கொண்டாட்டங்கள் மற்றும் விசேட வைபவங்களுக்கான முற்பதிவை மேற்கொள்ளும் வசதி உள்ளதுடன், பிறந்த நாள் கொண்டாட்டங்கள், வர்த்தக நிகழ்வுகள், வர்த்தக தயாரிப்பு அறிமுக நிகழ்வுகள் மற்றும் பல நிகழ்வுகளுக்கான நேர்த்தியான ஏற்பாட்டை வழங்குகின்றது.   

“இப்பண்டிகைக் காலத்தை விசேடமான ஒன்றாக மாற்றுவது எமக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது,” என்று Blue Orbit by Citrus இன் தொழிற்பாடுகளுக்கான முகாமையாளரான சுப்புன் குணவர்த்தன அவர்கள் குறிப்பிட்டார். “எமது பண்டிகைக்கால உணவு வகைகளுடனும், பிரமிக்கச் செய்யும் காட்சிகளுடனும், இலங்கையில் அதியுச்சியிலுள்ள சுழலும் உணவகத்தின் தனித்துவமான சூழலுடனும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்குவதற்காக விருந்தினர்களை வரவேற்க தயாராக உள்ளோம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.     

மேலதிக தகவல் விபரங்களுக்கு 0765 444 111 அல்லது 0765 443 333 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here