கலா பொல 2024 – ஓவியக் கலைகளினூடாக கலையின் பன்மைத்துவம் மற்றும் படைப்பாற்றலின் வெளிப்பாட்டை முன்னிறுத்தும் முயற்சி

46

இலங்கையில் வருடாந்தம் இடம்பெறுகின்ற திறந்தவெளி ஓவியச் சந்தையான கலா பொல, 2024 பெப்ரவரி 18 ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளதுடன், தற்போது 31 ஆவது ஆண்டை எட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கை ஓவியக் கலைஞர்களின் வாழ்வாதாரங்களை வளர்ப்பதில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டாடுகின்ற கலா பொல, பாரிஸ் நகரின் Montmartre மற்றும் ஒக்ஸ்போர்ட் Turl Street கலைத் திருவிழா ஆகிய உலகப்புகழ்பெற்ற வெளிப்புற கலைச் சந்தைகளின் ஈர்ப்புடன் முன்னெடுக்கப்படுவதுடன், இலங்கையில் கலை மற்றும் கலாச்சார நாட்காட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு நிகழ்வாகவும் வளர்ச்சி கண்டுள்ளது.

1993 ஆம் ஆண்டில் கலா பொல என்ற எண்ணக்கருவுக்கு, செயல் வடிவம் கொடுத்திருந்த ஜோர்ஜ் கீற் நிதியம் (George Keyt Foundation), 1994 ஆம் ஆண்டு முதல் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் வர்த்தக சமூக நலன்புரி முயற்சிகளின் அங்கமாக, அந்த நிறுவனத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தொகுக்கப்படாத, அனைத்து கலைஞர்களுக்கும் சம வாய்ப்பளிக்கின்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த ஓவியக் கலைச் சந்தையானது பார்வையிட வருகை தருகின்றவர்களுக்கான அனுபவங்களை தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகின்றது. இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் ஓவியக் கலைஞர்களை உள்ளடக்கி, உள்நாட்டு மற்றும் சர்வதேச கலை ஆர்வலர்களைக் கொண்ட விசாலமான வருகையாளர்களை ஈர்த்து, அதன் விளைவாக கலைஞர்களுக்கு அதிகரித்த அளவிலான பங்கேற்புடன், வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு வழிவகுத்து வருகின்றது. ஏனையவர்களுடன் தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளுதல் மற்றும் ஏனையவர்களிடமிருந்து அறிவையும், அனுபவத்தையும் கற்றுக்கொள்ளுதல் ஆகியனவே இந்த நிகழ்வின் வெற்றியின் அத்திவாரமாக உள்ளன. இலங்கையின் அனைத்து பிராந்தியங்களையும் உள்ளடக்கி, சிரேஷ்ட கலைஞரா இல்லையா என்று பேதமின்றி அனைத்து மட்டங்களிலுமுள்ள கலைஞர்களை வரவேற்கும் ஒரு நிகழ்வாக கலா பொல அமைந்துள்ளதுடன், ஒத்துழைப்பிற்கான ஒரு சூழலையும் வளர்த்து வருகின்றது.

ஜோர்ஜ் கீற் நிதியத்தின் தலைவரான மாலக தல்வத்த அவர்கள் கருத்து வெளியிடுகையில், “குறிப்பாக உள்நாட்டு கலைஞர்களுக்கு ‘கலையின் மூலமாக வாய்ப்பு’ என்பதற்கு வழிகாட்டுவதே ஜோர்ஜ் கீற் நிதியத்தின் பிரதான குறிக்கோளாக எப்போதும் காணப்படுகின்றது. அந்த வகையில் கலா பொல என்பது அதன் பிரதான முயற்சியாக உள்ளது. கலா பொல இந்த அளவிற்கு நிலைபெற்று, பரிணாம வளர்ச்சி காண்பதற்கு இடமளித்தமைக்காக, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எம்முடன் தொடர்ந்து கைகோர்த்துள்ள ஜோன் கீல்ஸ் குழுமத்திற்கு நாம் நன்றிக்கடன்பட்டுள்ளோம். கலா பொல தற்போது பிரதான சுற்றுலா ஈர்ப்புமையமாக மாறியுள்ளதுடன், கொழும்பில் இடம்பெறுகின்ற புகழ்பூத்த தனித்துவ நிகழ்வுகளில் ஒன்றாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.   

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சட்டத்துறை, செயலகம் மற்றும் வர்த்தக சமூக நலன்புரி துறை தலைவரான நதீஜா தம்பையா அவர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “கலா பொல கலை கண்காட்சியின் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பயணத்தில், இலங்கை கலைஞர்களுக்கு, தொகுக்கப்படாத, அனைத்து கலைஞர்களுக்கும் சம வாய்ப்பளிக்கின்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு வலுவான மேடையாக சீராக வளர்ச்சி கண்டுள்ளதுடன், இலங்கையில் கலைகள் மற்றும் கலாச்சாரத்தை வளர்ப்பதில் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் அர்ப்பணிப்பின் ஒரு உள்ளார்ந்த அங்கமாகவும் மாறியுள்ளது. நாட்டில் படைப்பாற்றல் மூலமான பொருளாதாரத்தின் வளர்ச்சி வாய்ப்புக்களைச் சுட்டிக்காட்டி, படைப்பாற்றலை வளர்க்கின்ற ஒரு சூழலை விருத்தி செய்வதற்கு உதவும் முயற்சிகளை எமது குழுமம் முன்னெடுத்து வருகின்றது. கருத்துக்களை படைப்புக்களாக வெளிக்கொண்டு வருவதற்கான மேடைகளை அமைத்துக்கொடுப்பது, எமது தேசத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கான களத்தைப் பகிர்ந்து, அதன் மூலமாக எமது சமூக கூட்டுறவை மேம்படுத்த எம்மால் பங்களிக்க முடியுமென நாம் நம்புகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.      

7 பல்வேறுபட்ட தொழில் துறைகளில், 70 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன், கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப் பாரிய கூட்டு நிறுவனங்கள் குழுமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் வர்த்தக சமூக நலன்புரி அங்கமான ஜோன் கீல்ஸ் பவுண்டேஷனின் ஆறு முக்கியமான இலக்குகளில் ஒன்றாக கலைகள் மற்றும் கலாச்சாரம் காணப்படுகின்றது. 150 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுடன், 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பளித்துள்ள ஜோன் கீல்ஸ் குழுமம், கடந்த 18 ஆண்டுகளாக LMD சஞ்சிகையால் இலங்கையில் ‘மிகவும் நன்மதிப்புடைய நிறுவனமாக’ (Most Respected Entity) தரப்படுத்தப்பட்டுள்ளது. Transparency International Sri Lanka இன் ‘Transparency in Corporate Reporting Assessment’ இல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி முதல் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதார மன்றத்தின் பூரண அங்கத்துவ நிறுவனமாக உள்ளதுடன், ஐநா சர்வதேச உடன்படிக்கையிலும் பங்காளராகவுள்ள ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ஜோன் கீல்ஸ் பவுண்டேஷன் ஊடாக “எதிர்காலத்திற்காக தேசத்தை வலுவூட்டுதல்” (Empowering the Nation for Tomorrow) என்ற தனது வர்த்தக சமூக நலன்புரி குறிக்கோளை முன்னெடுத்து வருகின்றது. அதன் சமூக தொழில்முயற்சியாண்மை முன்னெடுப்பான ‘Plasticcycle’ என்பது இலங்கையில் பிளாஸ்திக் மாசுபாட்டை கணிசமாக குறைப்பதற்கு ஒரு உந்துசக்தியாக காணப்படுகின்றது.                  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here