கலாநிதி ஹயேஷிக்கா பிரனாந்துவுக்கு ஆண்டின் ஜனரஞ்சகமான புலமைப்பரிசில் பரீட்சை ஆசிரியருக்கான BWIO மற்றும் APLA விருதுகள் வழங்கி கௌரவிப்பு

32

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இணைய வழி ஊடாக மேலதிக வகுப்புகளை (ரியூசன்) நடாத்தும் இலங்கையின் முதல் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆசிரியையான கலாநிதி (திருமதி) ஹயேஷிக்கா பிரனாந்து, Business World International Organization ஏற்பாடு செய்த  BWIO விருது விழாவில் ஆண்டின் ஜனரஞ்சகமான ஆசிரியை எனும் விருதை வென்றுள்ளார். மேலும், அகில இலங்கை தொழில்முறை ஆசிரியர்களின் சங்கத்தின் 10 ஆவது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாநாட்டிலும் அவர் துறை சார்ந்த வளர்ச்சிக்காக ஆற்றி வரும் பணியை பாராட்டி அதன் பிரதம விருந்தினரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடமிருந்து அவருக்கு கௌரவ விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.புலமைப்பரிசில் பரீடசையில் சித்தியடையும் அதிக மாணவர் சதவிகிதத்தை கொண்டுள்ள ஆசிரியையான திருமதி ஹயேஷிக்கா பிரனாந்து தனக்கே உரிய தனித்துவமானதொரு செயன்முறை ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு பரீட்சைக்கு சிறப்பாக எதிர்கொள்வதற்கு மாணவர்களை தயார்படுத்துகிறார். சகல வகுப்புகளையும் தனியாக வழிநடாத்துகின்ற அவரிடம் கற்ற மாணவர்களின் எண்ணிக்கை 10,000 இற்கும் அதிகமாகும். பிரதான ஐந்து பிரிவுகளாக வடிவமைக்கப்பட்டுள்ள அவருடைய வகுப்புகள் மாணவர்களுக்கு பரீட்சையில் 190 புள்ளிகளுக்கு மேல் பெறுவதற்கு வழியேற்படுத்தி கொடுக்கிறது. இணைய வழி முறையில் நடைபெறும் வகுப்புகளினால் போக்குவரத்து தேவைகள் ஏற்படாமை, தவறவிடப்பட்ட பாடங்களை மீள பரிசீலிக்க கூடியதாக உள்ளமை மற்றும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆராய்வதற்கு பெற்றோருக்கு வாய்ப்பு அளிக்கின்றமை என பல்வேறு நன்மைகளை பெற முடியும். 2023 ஆம் ஆண்டில் கூடுதல் மதிப்பெண்களை பெற்ற முதல் 10 மாணவர்களில் 08 பேர் திருமதி ஹயேஷிக்கா பிரனாந்துவிடம்  கற்றவர்கள் என்ற சாதனை அவருக்கு உண்டு. அதுவே அவருடைய கற்பித்தல் திறனை பறைசாற்றுவதாக உள்ளது. Facebook, YouTube போன்ற சகல சமூக வலைத்தளங்களிலும் பிரபல்யமானதும் அன்பானதுமான ஆளுமையாக விளங்கும் திருமதி ஹயேஷிக்கா தனது வகுப்பில் கல்வி கற்கும் சகல மாணவர்கள் மீதும் பிரத்தியேக கவனத்தை செலுத்துகிறார். அனைத்து மாணவர்கள் மற்றும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய மாணவர்கள் தொடர்பாகவும் சிறப்பு கவனம் செலுத்தும் அவர் மாணவர்கள், பெற்றோர் என்ற இரு தரப்பினரதும் அன்பை பெற்றுள்ளார். இவருடைய வகுப்புகளில் காணப்படும் கவனிக்கத்தக்க அம்சம் யாதெனில், ஒவ்வொரு ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவிலும் கோலாகலமான வைபவமொன்றை கொழும்பில் நடாத்தி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here