நாட்டின் முன்னணி உருக்குக் கம்பி உற்பத்தியாளரான மெல்வா நிறுவனத்தின் அனுசரணையை பெற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தய வீரர்களான குஷான் சமோத் மற்றும் ஜனீத் சமீர ஆகியோர் அண்மையில் நடைபெற்ற இரண்டு முன்னணி மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் பல வெற்றிகளை பெற்றுள்ளனர். இலங்கை ரேசிங் சாரதிகள் மற்றும் ஓட்டப் பந்தயச் சங்கத்தின் (SLARDAR) ஏற்பாட்டில் நடைபெற்ற கட்டுக்குருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் குஷான் சமோத் 600 CC பிரிவில் முதலிடத்தையும் 1000 CC பிரிவில் இரண்டாமிடத்தையும் வென்றுள்ளார். மற்றைய வீரரான ஜனீத் சமீர அதே தொடரில் Tracker பிரிவில் முதலாமிடத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இலங்கை ஒட்டோஸ்போர்ட் சாரதிகளின் சங்கம் ஏற்பாடு செய்த ரொதர்ஹேம் – கட்டுக்கருந்த டர்மேக் பந்தயத்தில் 1000 CC Grand Prix (22 Laps) பிரிவில் முதலாமிடத்தை தமது Honda CBR1000 வகை மோட்டார் சைக்கிளை ஓட்டிய குஷான் சமோத் வென்றுள்ளார். அதே பந்தயத்தில் தமது Honda CBR600 வகை மோட்டார் சைக்கிளில் பங்கெடுத்த ஜனீத் சமீர ஏராளமான சைக்கிள் ஓட்டப் பந்தய வீரர்களுடன் போட்டியிட்டு 04 ஆம் இடத்தை வென்றுள்ளார். கடந்த காலம் முழுவதும் நாட்டின் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத் துறையின் அபிவிருத்திக்கு மெல்வா நிறுவனம் பெரும் பங்காற்றியுள்ளது. அதன் கீழ், நீர்கொழும்பு பகுதியை பிறப்பிடமாக கொண்ட திறமையான மோட்டார் சைக்கிள் வீரர்களான குஷான் சமோத் மற்றும் ஜனீத் சமீரவுக்கு இரண்டு அதிவேக மோட்டார் சைக்கிள்களை மெல்வா நிறுவனம் அன்பளிப்புச் செய்துள்ளது. இதன் மூலம் நாட்டின் இளம் தலைமுறையினரிடையே மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயங்களை பிரபல்யப்படுத்துவதற்கும், அதன் ஊடாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்கக்கூடிய இலங்கை மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தய வீரர்களை உருவாக்குவதற்கும் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. வர்த்தக நோக்கங்களுக்கு அப்பால் சென்று எப்பொழுதும் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற மக்களுக்கு பெரிதும் முக்கியத்துவமிக்க துறைகளின் வளர்ச்சி கருதி மெல்வா நிறுவனம் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிறது.
Popular
தெங்குச் செய்கையில் அதிக விளைச்சலுக்காக DIMO Agribusinesses இடமிருந்து வெற்றிகரமான தீர்வுகள்
உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், நாட்டின் கேள்வியை பூர்த்தி செய்யும் அளவுக்கு சந்தையில் தேங்காய் விநியோகம் இல்லாததால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை என்பது தெளிவாகிறது. இதற்குத் தீர்வாக, தென்னங் காணிகளின்...
அதிநவீன Gastroenterology & Endoscopy சேவையை அறிமுகப்படுத்தும் நைன்வெல்ஸ் மருத்துவமனை
பெண்கள் மற்றும் சிறுவர்களின் சுகாதாரப் பராமரிப்பில் இலங்கையின் முன்னணி நிறுவனமாக புகழ்பெற்று விளங்கும் நைன்வெல்ஸ் மருத்துவமனை, அதிநவீன எண்டோஸ்கோபி வசதியுடனான சமிபாட்டுத்தொகுதி பிரச்சினைகள் தொடர்பான gastroenterology & endoscopy சேவையை அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறது....
AESL ~ $3 பில்லியன் மின்பரிமாற்றத் திட்டத்தை வென்றது;
இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய திட்ட வெற்றி
Editor’s Synopsis
இந்த திட்டம் 6 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வெளியேற்றும்
AESL இன் orderbook இப்போது ~$6.5 பில்லியனாக உள்ளது
AESL இந்த திட்டத்தை 4.5 ஆண்டுகளில் BOOT...
Richwin Investment and Credit நிறுவனத்துக்கு Pinnacle Sri Lanka மற்றும் People’s Excellency இரட்டை விருதுகள்
Richwin Investment and Credit நிறுவனம் Pinnacle Sri Lanka 2024 விருது விழாவில் நிதிச் சேவை உயர் விருதை வென்றுள்ளது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற மேற்படி விருது விழாவில்...
Datatech Lanka நிறுவனத்துக்கு இரண்டு தேசிய மட்டத்திலான உயர் விருதுகள்
இலங்கையின் ஜப்பான் மொழி பாடசாலைகளில் முதன்மை நிறுவனமான Datatech Lanka குழுமத்துக்குச் சொந்தமான Institute of Datatech Lanka தனியார் நிறுவனத்துக்கு இலங்கை இளம் தொழில்முயற்சியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த 2024 ஆம்...