உலகின் மிகப்பெரிய பீட்ஸா சங்கிலியான Domino’s இலங்கையில் 50 சேவை மையங்களை வேகமாக எட்டிய விரைவு சேவை உணவமாக மாறியுள்ளதுடன், Kids of Child Action Lanka க்கு 5,000 இலவச உணவுகள் நன்கொடையளிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது

38

இலங்கையில் Domino’s Pizza ஆனது, நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் விரைவான சேவை உணவகங்களின் சங்கிலியாக (QSR) தனது ஸ்தானத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இது உலகின் மிகப்பெரிய பீட்ஸா வர்த்தகநாமமாக Domino’s Pizza இன் உலகளாவிய நற்பெயரைக் கட்டிக்காத்துள்ளது. இம்மாதம், பாணந்துறையில் தனது புதிய சேவை மையத்தை திறந்து வைத்து, இலங்கை முழுவதும் 50 சேவை மையங்களை அதிவேகமாக எட்டிய QSR என்ற சாதனை இலக்கினை மகிழ்ச்சியுடன் நினைவுகூருகிறது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்கும், இலங்கை மீதான அதன் அர்ப்பணிப்பை மேலும் முன்னிலைப்படுத்துவதற்கும், Domino’s Pizza தனது வெற்றிக்கு ஆதரவளித்த சமூகங்களுக்கு பிரதியுபகாரம் ஆற்றுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது. இதயத்தை நெகிழ வைக்கும் வகையில், நாட்டின் முன்னணி பீட்ஸா சங்கிலியான Domino’s Sri Lanka, நலிவுற்ற சிறுவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, Child Action Lanka (CAL) க்கு 5,000 உணவுகளை நன்கொடையாக வழங்குகிறது. இந்த நன்கொடையானது சமூகத்திற்கு பிரதியுபகாரம் செய்வதற்கும், மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியைப் பரப்புவதற்கும் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது. சிறுவர்கள் பீட்ஸா மீது வைத்திருக்கும் நேசத்தை உணர்ந்து, CAL இன் கொழும்பு மையத்தில் சிறுவர்களுக்கான உணவுக்கு அனுசரணை வழங்க Domino’s தீர்மானித்துள்ளது. Domino’s Pizza மற்றும் CAL இடையே ஆகஸ்ட் 3 ஆம் திகதியன்று ஒரு விசேட நிகழ்வின் போது உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது.

CAL இன் ஸ்தாபகரும், பணிப்பாளருமான டெபி எதிரிசிங்க தனது நன்றியைத் தெரிவிக்கையில், “Domino’s Pizza Sri Lanka இடமிருந்து இத்தகைய மனமுவந்த ஆதரவைப் பெறுவது மிகவும் ஊக்கமளிக்கிறது. இந்த உணவுகள் எங்கள் பராமரிப்பில் உள்ள சிறுவர்களுக்கு நம்பிக்கையின் கீற்றுக்களை வழங்க உதவும்,” என்று குறிப்பிட்டார். 

Child Action Lanka ஆனது பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்து, அவர்களின் எதிர்காலத்தை பிரகாசமானதாக மாற்றும் இலக்குடன் செயல்பட்டு வருகின்ற அர்ப்பணிப்புள்ள ஒரு தொண்டு நிறுவனமாகும். வறுமையின் கலக்கத்தை தகர்ப்பதில் சிறுவர்கள் முக்கியம் என்பதை உணர்ந்து, அனைவருக்கும் சுபீட்சமான எதிர்காலத்திற்கான இலக்கினை நனவாக்குவதில் CAL முக்கிய பங்கு வகித்து வருகிறது.

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் Domino’s இன் முதன்மை உரிமையாளரான Jubilant FoodWorks Limited இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமீர் கெதர்பால் அவர்கள், Domino’s 50 வது சேவை மையத்தை திறக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் எமது 50 வது சேவை மையத்தின் சாதனை இலக்கினைக் கொண்டாடுவதில் நாம் பெரும் மகிழ்ச்சியடைவதுடன், எம்மைத் திறந்த கரங்களுடன் அரவணைத்த சமூகங்களுக்கு பிரதியுபகாரம் ஆற்றுவதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். Child Action Lanka உடனான எமது கூட்டாண்மை மூலம், சிறுவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு அவர்களின் நல்வாழ்வுக்கும் பங்களிக்க முடியும் என்று நம்புகிறோம்,”என்று குறிப்பிட்டார். 

தனது வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகங்களுக்களை நெஞ்சத்தில் வைத்திருப்பதில் புகழ்பெற்ற பீட்ஸா சங்கிலியான Domino’s Sri Lanka, இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதில் அதன் ஓயாத அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. கொவிட்-19 முடக்கம் மற்றும் தேசிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், வர்த்தகநாமத்தின் பாராட்டத்தக்க முயற்சிகள், Junior Pizza Maker நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் சிறுவர்களுடன் ஈடுபாட்டை வளர்ப்பதற்கான அதன் அர்ப்பணிப்பைத் தக்கவைத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கும், அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட பீட்ஸாக்களை தொடர்ந்து பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்கும் இடமளிக்கப்பட்டது.

நிறுவனத்தின் பயணம் மற்றும் எதிர்கால வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில், Jubilant FoodWorks Lanka Limited நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரியும், பணிப்பாளருமான இரங்க தர்மவர்தன அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் Domino’s இன் வளர்ச்சிப் பயணம் மற்றும் பிரகாசமான எதிர்காலம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையில் உள்ள உள்ளூர் பொருளாதாரம் மற்றும் சமூகங்களுக்கு ஆதரவாக எமது 55% சேர்க்கைப்பொருட்களை உள்நாட்டில் பெற்றுக்கொள்வதுடன், உண்மையான பீட்ஸா அனுபவத்திற்காக தனித்துவமான மேற்சேர்வைகளை (டொப்பிங்ஸ்) உருவாக்கியுள்ளோம். எமது 50 வது சேவை மையத்தை திறந்து வைப்பதன் மூலம், இலங்கை மக்களுக்கு சிறந்த பீட்ஸா அனுபவத்துடன் சேவையாற்றுவதற்கான எமது அர்ப்பணிப்பை நாம் மீண்டும் உறுதிப்படுத்துகின்ற அதே நேரத்தில், நாடு முழுவதும் எமது அடிச்சுவட்டை விரிவுபடுத்தி, இலங்கை மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்பு மற்றும் பிற மதிப்புக்கான வாய்ப்புகளை உருவாக்குகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

Domino’s Pizza தொடர்ந்து தொழில்துறைக்கான புதிய தர அளவுகோல்களை அமைத்து வருவதுடன், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து ருசிக்கக்கூடிய மற்றும் ஆபத்து இன்றிய உணவு மற்றும் விநியோக அனுபவத்தை உறுதி செய்கிறது. அதன் பீட்ஸா மாவு தயாரிப்பு, பாஸ்தா உற்பத்தி, மரக்கறி மீள்பொதியிடல் மற்றும் சொக்கிலேட் லாவா கேக் தயாரிப்பு செயல்முறைகளுக்கான அதன் களஞ்சியகளுக்கான HACCP சான்று அங்கீகாரமானது, உணவுப் பாதுகாப்பிற்கான Domino’s Pizza இன் அர்ப்பணிப்புக்கான சான்றாக உள்ளதுடன், மேலும் உற்பத்தி பயணத்தின் ஒவ்வொரு கட்டமும் தரக் கட்டுப்பாட்டின் அதிஉயர்ந்த தரத்தைக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்கிறது. உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம், Domino’s ஒவ்வொரு துண்டிலும் வாயூறச் செய்யும் சுவைகளை மட்டுமல்ல, உறுதியான பாதுகாப்பையும் வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.

உலகெங்கிலும் 20,000 க்கும் மேற்பட்ட சேவை மையங்களைக் கொண்ட பரந்த உலகளாவிய வலையமைப்பின் மூலம் 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் தினந்தோறும் 1 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு Domino’s Pizza சேவையாற்றி வருகிறது. 30 நிமிடத்தில் வாடிக்கையாளர் இருக்கின்ற இடத்திற்கான விநியோகம் என்ற தனித்துவமான உத்தரவாதத்துடன், மகத்தான சுவை கொண்ட பீட்ஸாக்களை வழங்குவதற்காக இந்த சங்கிலி உலகம் முழுவதிலும் புகழ்பெற்றது.

Domino’s இலிருந்து சுடச்சுட பீட்ஸாக்களை ஆர்டர் செய்ய, வாடிக்கையாளர்கள் m.dominoslk.com என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது Android மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கும் Domino’s எனப்படும் Domino’s Pizza Sri Lanka App மூலமாக பதிவிறக்கம் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here