இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஏற்ற வாகனமான, பாதுகாப்பான மற்றும் விசாலமான 2024 Nissan Urvan NV350 ஐ அறிமுகப்படுத்தும் AMW

25

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) கீழ் பயணிகள் போக்குவரத்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவையின் அண்மைய தீர்மானமானது, சுற்றுலாத் துறை தொடர்பான முக்கியமான முன்னேற்றமாக அடையாளம் காணப்படுகிறது. அந்த வகையில், Associated Motorways (Private) Limited நிறுவனமானது, 2024 NISSAN Urvan NV350 எனும் 16 ஆசனங்களைக் கொண்ட, அகலமான இட வசதியைக் கொண்ட, High roof Micro bus வாகனத்தை இறக்குமதி செய்து வழங்குகிறது. குறிப்பாக 16 – 30 ஆசனங்களைக் கொண்ட இது mini-coach வகையைச் சேர்ந்ததாகும். 2024 Nissan Urvan NV350 ஆனது, இலங்கைக்கான சிறந்த தெரிவாகவும், இலங்கை சுற்றுலாவிற்கு ஏற்ற தெரிவாகவும் அடையாளம் காணப்படுகின்றது. இந்த வாகனமானது, ஆசனங்களின் திறன் மற்றும் தரநிலைகள், அரசாங்கத்தின் அனுமதிப்பத்திரத்திற்கு அவசியமான அம்சங்களை பூர்த்தி செய்வதோடு, Nissan Motor Corp நிறுவனம் வழங்கும் உற்பத்தி நிறுவனத்தின் உத்தரவாதத்தையும் கொண்டுள்ளது.

2024 Nissan Urvan NV350 வாகனம், கால்களை வைக்க போதுமான வசதியையும், தலைக்கும் கூரைக்கும் இடையிலான இடவசதியையும் கொண்டுள்ளதன் மூலம், ஒவ்வொரு பயணத்தையும் பயணிகளுக்கு வசதியானதாக ஆக்குகின்றது. அதன் மாற்றியமைக்கூடிய கட்டமைப்பு மூலம், பயணிகளுக்கு வசதி மற்றும் சொகுசு ஆகிய இரண்டையும் உறுதி செய்யும் வகையில், பயணப் பொதிகளை வைப்பதற்கான இடத்தை தடையின்றி வழங்குகிறது. Airbags, ABS, EBD (Electronic Brakeforce Distribution) வசதிகளைக் கொண்டுள்ள 2024 Nissan Urvan NV350 வாகனமானது, ஒவ்வொரு பயணத்திலும் மன நிம்மதியை வழங்குவதோடு, பயணிகளின் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிக்கிறது.

2.5L வகை டீசல் எஞ்சினைக் கொண்டுள்ள இந்த வாகனமானது, சிறந்த செயல்திறனை கொண்டதாகவும், சாரதிக்கும் பயணிகளுக்கும் அதிக வசதியை வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2024 Nissan Urvan NV350 வாகனமானது, சிறந்த வலுவைக் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாது, சிறந்த எரிபொருள் செயற்றிறனையும் கொண்டுள்ளது. குறைந்த காபனிரொட்சைட்டு வெளியேற்றம், குறைந்த சத்தம் மற்றும் அதிர்வு ஆகிய தன்மைகளைக் கொண்ட இந்த வாகனம், சூழலுக்கு மிகவும் உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த பராமரிப்பு கொண்ட எஞ்சின் காரணமாக, இது செலவிலும் செயல்திறனை கொண்டுள்ளது.

இலங்கையிலுள்ள வீதிகளின் நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள 2024 Nissan Urvan NV350 வாகனமானது, இதன் மூலம் அதன் நம்பகத்தன்மையை மேலும் நிரூபித்துள்ளது. சுற்றுலாத் துறையில் உள்ள அதிகமான வாகனங்கள் 400,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமாக பயணிக்கின்ற நிலையில், ஒப்பிட முடியாத விற்பனைக்குப் பின்னரான பராமரிப்பைக் கொண்டுள்ள 2024 Nissan Urvan NV350 வாகனமானது, இலங்கை சுற்றுலாவிற்கு ஏற்ற சிறந்த வாகனமாக திகழ்கிறது.

2024 Nissan Urvan NV350 வாகனத்தை AMW நிறுவனம் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விலையான ரூ. 14.7 மில்லியனிலிருந்து ஆரம்பிக்கும் வகையில் வழங்குகிறது. இது போட்டியாளர்களின் விலையிலும் மிக அதிக வித்தியசாத்தை காட்டுகிறது. இந்த வாகனம் பல்வேறு போக்குவரத்துத் தேவைகளுக்கு ஏற்ப பல்துறைத் திறனை வழங்குவதோடு, சுற்றுலாத் துறையில் உள்ள வணிகங்களுக்கு ஏற்ற தெரிவாக அமைகிறது. சுற்றுலாத் தொழில்துறையின் அனுமதிப்பத்திரத் திட்டத்தின் கீழ் அறிமுகமாகும் 2024 Nissan Urvan NV350 வாகனமானது, சுற்றுலா உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் நம்பகமான, வசதியான, பாதுகாப்பான போக்குவரத்துத் தீர்வுகளை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here