இலங்கையில் தனது செயற்பாடுகளை பலப்படுத்தும் Socomec

41

மூன்று வருடங்களில் அதன் இருப்பை மூன்று மடங்காக்க திட்டம்

ஒரு நூற்றாண்டு பழமையான பிரான்ஸ் பன்னாட்டு நிறுவனமும், குறைந்த மின்னழுத்த மின்சார முகாமைத்துவ தொகுதிகளில் உலகளாவிய முன்னோடியுமான Socomec, இந்தியாவுக்கான அதன் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் தனது செயற்பாடுகளின் பாரிய விரிவாக்கத்தை பெருமையுடன் அறிவித்துள்ளது. எதிர்வரும் மூன்று வருடங்களில் இலங்கையில் தனது பிரசன்னத்தை மும்மடங்காக அதிகரிப்பதற்கான அர்ப்பணிப்புடன், அதன் பொது முகாமையாளராக Suhard Amit அவர்களை நிறுவனம் நியமித்துள்ளது. 25 ஆண்டுகளுக்கும் மேலான பல்வேறு துறைசார் அனுபவங்களைக் கொண்ட அனுபவமிக்க நிபுணரான Suhard Amit, இலங்கையை தளமாகக் கொண்டு பங்களாதேஷ், மாலைதீவு, பூட்டான், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள சந்தைகளுக்கான நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பணியை,  மேற்கொள்வார்.

மின்சக்தி மாற்றீடு தொடர்பான (power conversion) அதிநவீன தீர்வுகளை வழங்குவதில் Socomec அர்ப்பணிப்புடன் திகழ்கின்றது. முக்கிய பயன்பாடுகளுக்கான Power Switching மற்றும் Monitoring சாதனங்களை வழங்குவதோடு, வாடிக்கையாளர் திருப்திக்கு முன்னுரிமை அளிக்கின்றமையானது, தொழில்துறை தரத்திற்கும் அப்பாற் செல்வதற்கான அதன் நோக்கத்தை கோடிட்டுக் காட்டுகிறது. புத்தாக்கமான பிரான்ஸை தழுவிய உற்பத்தி முறைகள் மற்றும் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறை மூலம், தனது வாடிக்கையாளர்கள் மற்றும் சந்தைகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் மின்சக்தி தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்வதை Socomec உறுதி செய்கிறது.

இந்த மூலோபாய விரிவாக்கம் தொடர்பான தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய, Socomec இன் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO), O’Niel Dissanayake, “புத்தாக்கம் மூலம் அனைத்து சந்தைகளிலும் நிலைபேறான வளர்ச்சியை செலுத்துவதே எமது முக்கியமான இலக்காகும். இலங்கை, அதன் வலுசக்தி மாற்றீடு மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகியவற்றிற்கு மத்தியில் உள்ள நிலையில், நாமும் அதில் பாரிய பங்களிப்பை வழங்கவுள்ளோம். தனது பங்குதாரர்கள் ஊடாக நாட்டில் நீண்ட காலமாக Socomec அதன் பிரசன்னத்தைக் கொண்டுள்ள போதிலும், எமது மதிப்புமிக்க பங்காளிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எமது ஆதரவு வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இந்த தருணத்தை நாம் கருதுகிறோம். எமது உலகளாவிய உற்பத்தித் திறனை மேம்படுத்துவதன் மூலம், எமது ஆசிய பசிபிக் மற்றும் இந்திய நிறுவனங்களின் ஊடாக ஐரோப்பிய உற்பத்திகள் மற்றும் தீர்வுகளை இலங்கைக்கு வழங்குவதற்கு நாம் அர்பணிப்புடன் உள்ளோம்” என்றார்.

இலங்கைச் சந்தையின் வளர்ந்து வரும் மின்சக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய, Socomec Greater India முகாமைத்துவப் பணிப்பாளர் Meenu Singhal தெரிவிக்கையில் மீனு சிங்கால், “எமது உறவுகளை வலுப்படுத்துவதற்கும், நிறுவனங்களுக்கு நம்பகமான, திறனான மின்சக்தி தீர்வுகளை வழங்குவதற்கும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். இதன் மூலம், இலங்கையில் ஒரு கௌரவத்திற்குரிய முன்னணி நிறுவனமாக Socomec இனை நிலைநிறுத்துவோம். சந்தைக்கான எமது தொடர்பு மற்றும் பதிலளிப்பு நேரத்தை கணிசமாக மேம்படுத்தும் வகையில், ஆசியா பசுபிக் மற்றும் இந்தியாவிலிருந்து எமது தொழில்நுட்ப வல்லுநர்கள், விநியோகச் சங்கிலி, சேவைக் குழுக்கள் தற்போது எமது வாடிக்கையாளர் தேவைகளை ஈடுசெய்யும் சிறப்பான சேவையை வழங்குகின்றன.” என்றார்.

நிறுவனத்தின் விரிவாக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் உற்சாகத்தை வெளிப்படுத்திய, வளர்ந்து வரும் சந்தைகளுக்கான பொது முகாமையாளர் Suhard Amit தெரிவிக்கையில், “தொழில்துறை தரம் மற்றும் செயற்றிறனுடன், மின்சக்தி தீர்வுகளுக்கான முக்கிய நிபுணர் எனும் புகழ் பெற்ற Socomec உடன் இணைவதற்கான வாய்ப்பானது உண்மையிலேயே ஒரு பாக்கியமாகும். எமது வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தீர்வுகள் மற்றும் சிறந்த சேவைகளை வழங்குவதில் நாம் வலுவான நிலையில் உள்ளோம். எமது விநியோக பங்காளிகள், சந்தைக்கான எமது வாயில்களாக தொடர்ந்தும் இருப்பார்கள். உற்பத்திகள் மற்றும் சந்தைப் பிரிவுகள் ஆகியவற்றில் எமது தயாரிப்புகளை விரிவுபடுத்துவதற்கான நெருக்கமான ஒத்துழைப்பை அவர்கள் தொடர்ச்சியாக வழங்குவார்கள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here