இலங்கையின் அழகுப் பராமரிப்பு வர்த்தக நாமமான ராணி சந்தனத்திடமிருந்து அதன் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு தங்கப் பவுண்கள்

28

சுதேசி நிறுவனமானது, அதன் விசுவாசமான ராணி சந்தன சவர்க்காரத்தை பயன்படுத்தும் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு, 6 வாரங்களுக்கு வாராந்தம் தலா 3 தங்க நாணயங்கள் வீதம் 22 கரட்டில் அமைந்த தங்கத்தை வழங்குகிறது.

WhatsApp (077 0089716) ஊடாக அல்லது Rani Sandalwood பேஸ்புக் பக்கத்தின் Inbox இற்கு ராணி சந்தன சவர்க்காரத்தின் இரண்டு வெற்று பெட்டிகளுடன் வாடிக்கையாளரின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கத்தை அனுப்புவதன் மூலம் அல்லது “ராணி சந்தன தங்க ராணிகள்”, தபால் பெட்டி இல 04, கந்தானை எனும் முகவரிக்கு அனுப்புவதன் மூலம், ரூ. 3 மில்லியன் பெறுமதியான  22 கரட் கொண்ட 18 தங்க நாணயங்களை, ஆறு வார காலப்பகுதியில் வெல்லும் வாய்ப்பை பெற வாடிக்கையாளர்கள் தகுதி பெறுவார்கள் என நிறுவனம் அறிவித்துள்ளது.

2024 மே மாதம் முதல் 2024 ஜூன் 30 ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த ஊக்குவிப்பு பிரசாரம் மூலம், வாராந்தம் குலுக்கல் மூலம் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். வாடிக்கையாளர்கள் Rani Sandalwood பேஸ்புக் பக்கத்தை பின்தொடர்வதன் மூலம் மேலதிக தகவல்களையும் எதிர்கால அறிவிப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.

மிகவும் நம்பகமான மற்றும் தூய்மையான சந்தனத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் அழகு சவர்க்காரமான ராணி சந்தன சவர்க்காரமானது, சந்தையில் 80 வருட மிகவும் நம்பகமான தயாரிப்பாக திகழ்கின்றது. நீண்ட காலமாக ராணி சந்தனத்துடன் இணைந்துள்ள விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி வழங்குவதை இந்த ஊக்குவிப்புத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக, சுதேசி நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ராணி சந்தன சவர்க்காரத்தில் காணப்படும் முக்கிய மூலிகை மூலப்பொருளான சந்தனம், சருமத்தை தூய்மைப்படுத்தும் அதன் சிறந்த பண்புகளுக்கு பெயர் பெற்றது. ராணி சந்தன சவர்க்காரம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்ற அதே நேரத்தில், சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்க உதவுகின்றது. ராணி சந்தன சவர்க்காரத்தின் இந்த பண்புகள் குறித்து, இந்த ஊக்குவிப்பு பிரசாரத் திட்டத்தின் மூலம் நுகர்வோருக்கு சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் சுதேசி எதிர்பார்ப்பதாக நிறுவனத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சந்தனத்தின் தனித்துவமான நன்மைகள் மற்றும் குணப்படுத்தும் பண்புகளை அறிந்த உண்மையான அழகான பெண்களுடன் ராணி சந்தன சவர்க்காரம் தொடர்ந்தும் தொடர்புபட்டதாக இருந்து வருகின்றது.

80 வருடங்களுக்கும் மேலான பாரம்பரியத்துடன், சந்தையில் சிறந்த தரம் வாய்ந்த மற்றும் உண்மையான சந்தன சவர்க்காரம் எனும் நம்பிக்கை பெற்றுத் திகழும் ராணி சந்தனம், இலங்கைப் பெண்களை ராணி போல் ஜொலிக்க வலுவூட்டுகிறது.

1941 ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ராணி சந்தன சவர்க்கார வர்த்தகநாமம், அன்று முதல் இன்று வரை சந்தன சவர்க்கார பிரிவில் அசைக்க முடியாத தலைமைத்துவத்தை பெற்றிருப்பது தனித்துவமானது என்பதோடு, வெளிநாட்டுச் சந்தைகளிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இலங்கையின் தனியார் மூலிகை பராமரிப்பு தயாரிப்புகளின் முன்னணி உற்பத்தி நிறுவனம் எனும் வகையில் சுதேசியாகிய நாம், எமது அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படும் மூலிகைப் பொருட்களின் செயற்பாட்டு நன்மைகள் தொடர்பில் நுகர்வோர் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். நாம் இலங்கையின் சிறந்த மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்பதுடன், பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் விரிவாக ஆய்வுக்குள்ளாக்கப்படுகின்றன. தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்காக அவை முழுமையாக சோதனைக்கு உள்ளாக்கப்படுவதுடன், எமது தயாரிப்புகள் யாவும் 100% சைவத்தை அடிப்படையாகக் கொண்டது. விலங்குகள் மீது அவை சோதிக்கப்படவில்லை என்பதுடன் விலங்குகளின் கொடுமைகளிலிருந்து விலக்கற்றவை. சுதேசி கொஹொம்ப மற்றும் ராணி சந்தனம், கொஹொம்ப பேபி ஆகியன இங்கிலாந்தின் Vegetarian Society, UK யின் அங்கீகாரம் பெற்றவையாகும். இந்த உறுதிமொழியானது, நிறுவனத்தின் முன்னோக்கிய சிந்தனை நடைமுறைகளுக்கும், நுகர்வோருக்கு நெறிமுறை ரீதியானதும் சூழல் நட்பு ரீதியானதுமான தெரிவுகளை மேற்கொள்ளவும் உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். சுதேசி எப்போதும் தனது தயாரிப்புகளின் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தொடர்ந்தும் அவற்றிற்கு முன்னுரிமையளித்து, அதன் உற்பத்திகளை தயாரித்து வருகின்றது. 

இலங்கையிலுள்ள மூலிகையுடனான தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடியும் சந்தையின் முன்னணி நிறுவனமுமான Swadeshi Industrial Works PLC நிறுவனம் 1941 இல் ஒரு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. சுதேசியின் முன்னணி வர்த்தகநாமங்களில் சுதேசி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹொம்ப பேபி, பேர்ல்வைட், லக் பார், சேஃப்ப்ளஸ், பிளக் ஈகிள் பேர்ஃப்யூம், கொஹொம்ப ஹேண்ட் வொஷ், கொஹொம்ப பொடி வொஷ், ராணி ஷவர் கிறீம் ஆகியன உள்ளடங்குகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here