உலகின் மிகப்பெரிய ஆயுர்வேத வர்த்தக நாமமான Spa Ceylon, இலங்கையின் உயிர்ப்பல்வகைமை ‘Life to Our Coral Reefs’ முன்முயற்சியுடன் இணைந்து, எமது தீவை சுற்றியுள்ள பெறுமதியான கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்து மீட்டெடுப்பதற்கான தனது அர்ப்பணிப்பை அறிவித்தது. ஸ்பா சிலோன் தனது 2024 ஆம் ஆண்டிற்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பண்டிகைத் தொகுப்பை, ‘Undersea Paradise’ என்ற தலைப்பில், கொழும்பு One Galle Face Mall இல் வெளியிடவுள்ளது, ‘Undersea Paradise பண்டிகை நவம்பர் 1 முதல் 3 வரை நடைபெறும். இது கடலுக்கடியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு பல்வேறு அனுபவங்களை கொடுக்கிறது.
ஸ்பா சிலோனின் ‘Undersea Paradise’ மட்டுப்படுத்தப்பட்ட பண்டிகை தொகுப்பானது, எங்கள் தீவைச் சுற்றியுள்ள கடலின் இயற்கை அழகால் ஈர்க்கப்படகூடிய, கடலுக்கடியில் சுற்றுச்சூழலுடன், அரிய பவளப்பாறைகள் மற்றும் திகைப்பூட்டும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உள்ளடக்கியது. இலங்கை உயிர்ப்பல்வகைமை கூற்றுப்படி, இலங்கையின் கரையோரப் பகுதிகள் பல கடல் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளன. அவற்றில், 200 இற்கும் மேற்பட்ட பவளப்பாறை இனங்கள் மற்றும் 900 பாறைகளுடன் தொடர்புடைய மீன் இனங்கள் உள்ளன.
பவளப்பாறைகள், உலகின் 1% இற்கும் குறைவான கடல்களை உள்ளடக்கிய உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளாகும். அவை குறிப்பிடத்தக்க 25% கடல் உயிரினங்களை கொண்டுள்ளன., அதே நேரத்தில் கடலோர பாதுகாப்பு, உணவு, பொழுதுபோக்கு மற்றும் வாழ்வாதாரம் போன்ற முக்கிய சேவைகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழங்குகின்றன. இருப்பினும், புவி வெப்பமடைதல், அதிகப்படியான மீன்பிடித்தல், மாசுபாடு மற்றும் கட்டுப்பாடற்ற கடல் போக்குவரத்து போன்ற சவால்கள் தற்போது இந்த விலைமதிப்பற்ற சுற்றுச்சூழல் அமைப்பின் நீண்ட கால நிலைத்தன்மை மற்றும் உயிர்வாழ்வை அச்சுறுத்துகின்றன.
“ஸ்பா சிலோன் (SPA CEYLON) ஆனது, நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் முழுமையான ஆரோக்கியத்திற்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நாமமாக திகழ்வதோடு, நம்மைத் தாங்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கேற்ப விரிவடைகிறதென்று நாம் நம்புகிறோம். அதனால்தான், ஸ்பா சிலோன், “வண்ணத்துப்பூச்சி மற்றும் யானைகள் பாதுகாப்பு மற்றும் மனித-யானை மோதல் போன்ற சுற்றுச்சூழல் காரணங்களில் தொடர்ந்து பங்காற்றி வெற்றிபெற்று வருகிறது” என்று ஸ்பா சிலோன் இணை நிறுவனரும் குழுமப் பணிப்பாளருமான ஷலின் பாலசூரிய தெரிவித்தார். “பவளப்பாறைகளைப் பாதுகாப்பதன் மூலம், நமது பூமியின் ஆரோக்கியத்திற்காகவும், இயற்கையுடன் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காகவும், நமது நோக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் நமது சொந்த நலனுக்காகவும் முதலீடு செய்கிறோம்” என்று ஷலின் மேலும் தெரிவித்தார்.
“கடல் பாதுகாப்பிற்கான நமது அர்ப்பணிப்பு, எமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நடைமுறைகளின் விரிவாக்கமாகும். பண்டிகை (festive) தொகுப்பை உருவாக்குவதன் மூலம், கடலுக்கடியில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் எதிர்கால சந்ததியினர் செழிப்பான கடலின் அழகையும் நன்மைகளையும் அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக இந்தச் செய்தியை நாங்கள் 30 நாடுகளிற்கும் அதிகமாக உலகளவில் எடுத்துச் செல்வோம். ஒவ்வொரு முறையும் நீங்கள் எங்கள் Under Sea பண்டிகை தொகுப்பில் இருந்து வாங்கும் போதும் அல்லது பரிசளிக்கும் போதும், அழிந்து வரும் கடல் சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், எங்கள் தீவில் பின்தங்கிய கடலோர சமூகங்களை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கிறீர்கள்.” என்று ஸ்பா சிலோன் இணை நிறுவனர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ஷிவந்த டயஸ் தெரிவித்தார்.
காடுகள், சதுப்புநிலங்கள், கடற்கரைகள், தேசிய பூங்காக்கள் மற்றும் பவளப்பாறைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இலங்கையின் உயிர்ப்பல்வகைமை வாழ்க்கைத் தொடரின் ஐந்து முக்கியமான கவனம் செலுத்தப்படும் பகுதிகளில் Life to Our Coral Reefs (LOCR) ஒன்றாகும். Life to Our Coral Reefs திட்டம் இலங்கையின் பல்லுயிர்ப் பெருக்கத்தால் Department of Wildlife Conversation (DWC), International Union For Conservation Nature (IUCN) மற்றும் Blue Resources Trust (BRT) ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்பட்டது. (LOCR) Life to Our Coral Reefs முன்முயற்சியானது, பவளப்பாறைகள் மற்றும் பிற முக்கிய நீர் வளங்களுக்கு நீடித்த நன்மைகளை கொண்டு வர தனியார் துறையின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது, இது எதிர்கால சந்ததியினருக்கு அவற்றின் பின்னடைவை உறுதி செய்கிறது. Life to Our Coral Reefs என்ற முயற்சியின் மூலம், BSL ஆனது, ஸ்பா சிலோனை புத்தம் புதிய பங்காளராகக் கொண்டு, முக்கிய பவளச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் செயல்பட்டு வருகிறது. இந்த ஒத்துழைப்பு ஸ்பா சிலோனின் உலகளாவிய வரம்பையும் BSL இன் பாதுகாப்பு நிபுணத்துவத்தையும் ஒன்றிணைத்து, இலங்கையின் கடல் உயிர்ப்பல்வகைமை பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை விரிவுபடுத்துகிறது.
டில்மா சிலோன் டீ கம்பனி (BLC) இன் தலைவரும், இலங்கையின் உயிர்ப்பல்வகைமை அமைப்பின் தலைவருமான டில்ஹான் பெர்னாண்டோ, “காலநிலை மாற்றம் முதல் வாழ்விட இழப்பு வரையிலான இன்றைய சுற்றுச்சூழல் சவால்களின் மையமாக உயிர்ப்பல்வகைமையின் பெருக்கம் உள்ளது. அதை முன்னெடுத்துச் செல்வதும், பாதுகாப்பதும் நம் அனைவரின் மீதும் – வணிகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனிநபர்கள் மீது உள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கும் உண்மையான, விஞ்ஞான ஆதரவு தீர்வுகளைக் காண்பதற்கும் அனைவரையும் ஒன்றிணைப்பதற்காக இலங்கை உயிர்ப்பல்வகைமை உருவாக்கப்பட்டது. எங்கள் பவளப்பாறைகளைப் பாதுகாப்பதற்கான இந்த இன்றியமையாத பயணத்தில் ஸ்பா சிலோனுடன் கைகோர்ப்பதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். இந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் அழகை மட்டுமல்ல, நமது பெருங்கடல்களுக்கும் சமூகங்களுக்கும் இன்றியமையாத வாழ்க்கையின் மரபு. தனிப்பட்ட கார்ப்பரேட்டுகளாக நாம் செய்யும் அனைத்தும் கடலில் ஒரு துளி போல் உணரலாம். ஆனால் நாம் உள்நாட்டிலும் உலக அளவிலும் இணைந்து செயல்படும்போது, மாற்றத்தின் அலைகளை உருவாக்க முடியும். இந்த ஒத்துழைப்பின் மூலம், வருங்கால சந்ததியினருக்காக நமது கடல் பாரம்பரியத்தைப் பாதுகாக்க மற்றவர்களை ஊக்குவிப்பதோடு, உண்மையிலேயே நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவோம் என்று நம்புகிறோம்.