இலங்கையின் கல்வித்துறையின் முன்னோடியாக திகழும் LPEC Campus, Iconic Awards 2024 விருது விழாவில் சிறந்த கல்வி நிறுவனத்துக்கான விருதை வென்றுள்ளது. மேற்படி விருதானது LPEC Campus நிறுவனம் கொண்டுள்ள கல்வித் திறன், புத்தாக்கக் கற்பித்தல் முறைகள் மற்றும் பூரண மாணவர் அபிவிருத்திக்கான அயராத அர்ப்பணிப்புக்கு கிடைத்த சான்றுப்பத்திரமாகும். எதிர்கால தொழில் வல்லுநர்களை உருவாக்கவும் அவர்கள் தெரிவு செய்துள்ள துறைகளில் அவர்களை முதன்மையானவர்களாக மாற்றவும் மாணவர்களை வலுவூட்டுவதற்கு LPEC Campus நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு இந்த விருதின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நவீன பாட விதானங்கள் மற்றும் நவீன வசதிகள் மூலம் LPEC Campus நிறுவனம் கல்வித் துறையில் புதிய திருப்புமனையை ஏற்படுத்தும் வகையில் தொழில் கல்வியில் முதல்வனாக மாறியுள்ளது.நாட்டின் தொழில் படைக்கு ஏற்ற வகையில் தொழில் வல்லுநர்களை உருவாக்கும் LPEC Campus நிறுவனம் கடந்த 14 ஆண்டுகளாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட டிப்ளோமாதாரிகளை உருவாக்கியுள்ளதோடு பூரண அரச நிறுவனமான SDFL உடன் இணைந்து சான்றிதழ்களை வழங்கி வருகிறது. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட UK Accredited, QS 5 STARS கொண்ட மலேசிய அரச பல்கலைக்கழகமான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (MUST) மற்றும் கம்போடிய நாட்டு அரச பல்கலைக்கழகமான PSB ஆகிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டப்படிப்பு பாடநெறிகளை வழங்கும் LPEC Campus, UK Accredited கல்வி நிறுவனமாகும். கிரிபத்கொடை நகரில் அமைந்துள்ள LPEC Campus (www.lpec.lk) நவீன தொழில் சந்தையில் நிலவும் கேள்விக்கேற்ப உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அங்கீகாரம் பெற்ற டிப்ளோமா, பட்டப்படிப்பு, விஷேட பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு பாடநெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. LPEC Campus நிறுவனம் மனித வள முகாமைத்துவம், மனித வள முகாமைத்துவ நிறைவேற்றாளர், வர்த்தக முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் முகாமைத்துவம், உளவியல் மற்றும் ஆலோசனைகள், சட்டம், தகவல் தொழில்நுட்பம், ஆங்கில டிப்ளோமா மற்றும் வர்த்தக நிர்வாக விஞ்ஞானமானி, தகவல் தொழில்நுட்ப விஷேட பட்டப்படிப்பு மற்றும் மனித வள முகாமைத்துவம் தொடர்பான வர்த்தக முகாமைத்துவம், வர்த்தக முகாமைத்துவம், உளவியல் மற்றும் ஆலோசனை தொடர்பான விஞ்ஞானமானி, சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் தொடர்பான வர்த்தக முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பு பாடநெறிகளை வழங்குகிறது. 0112907133, 0112907429 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற முடியும்.
Popular
தெங்குச் செய்கையில் அதிக விளைச்சலுக்காக DIMO Agribusinesses இடமிருந்து வெற்றிகரமான தீர்வுகள்
உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், நாட்டின் கேள்வியை பூர்த்தி செய்யும் அளவுக்கு சந்தையில் தேங்காய் விநியோகம் இல்லாததால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை என்பது தெளிவாகிறது. இதற்குத் தீர்வாக, தென்னங் காணிகளின்...
அதிநவீன Gastroenterology & Endoscopy சேவையை அறிமுகப்படுத்தும் நைன்வெல்ஸ் மருத்துவமனை
பெண்கள் மற்றும் சிறுவர்களின் சுகாதாரப் பராமரிப்பில் இலங்கையின் முன்னணி நிறுவனமாக புகழ்பெற்று விளங்கும் நைன்வெல்ஸ் மருத்துவமனை, அதிநவீன எண்டோஸ்கோபி வசதியுடனான சமிபாட்டுத்தொகுதி பிரச்சினைகள் தொடர்பான gastroenterology & endoscopy சேவையை அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறது....
AESL ~ $3 பில்லியன் மின்பரிமாற்றத் திட்டத்தை வென்றது;
இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய திட்ட வெற்றி
Editor’s Synopsis
இந்த திட்டம் 6 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வெளியேற்றும்
AESL இன் orderbook இப்போது ~$6.5 பில்லியனாக உள்ளது
AESL இந்த திட்டத்தை 4.5 ஆண்டுகளில் BOOT...
Richwin Investment and Credit நிறுவனத்துக்கு Pinnacle Sri Lanka மற்றும் People’s Excellency இரட்டை விருதுகள்
Richwin Investment and Credit நிறுவனம் Pinnacle Sri Lanka 2024 விருது விழாவில் நிதிச் சேவை உயர் விருதை வென்றுள்ளது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற மேற்படி விருது விழாவில்...
Datatech Lanka நிறுவனத்துக்கு இரண்டு தேசிய மட்டத்திலான உயர் விருதுகள்
இலங்கையின் ஜப்பான் மொழி பாடசாலைகளில் முதன்மை நிறுவனமான Datatech Lanka குழுமத்துக்குச் சொந்தமான Institute of Datatech Lanka தனியார் நிறுவனத்துக்கு இலங்கை இளம் தொழில்முயற்சியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த 2024 ஆம்...