ஆசிரி ஆய்வுகூடம் அறிமுகப்படுத்தும் உலகில் வேகமான தனியான குருதியியல் பகுப்பாய்வு கட்டமைப்பு இலங்கையில் குருதி சீர்கேடு நோயைக் கண்டறிவதில் புதிய சகாப்தத்தை மீள்வரையறுக்கும்

11

துல்லியம் மற்றும் மிகு நுட்பமான நோய் அறியும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையற்ற வேகத்தில் குருதி சீர்கேடுகளைப் பரிசோதிப்பதற்காக புரட்சிகரமாக வடிவமைக்கப்பட்டு அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட Mindray BC-6800Plus  குருதியியல் பகுப்பாய்வு உபகரணக் கட்டமைப்பை ஆசிரி ஆய்வுகூடம் அறிமுகப்படுத்தியுள்ளது. கொழும்பு 05 இல் அமைந்துள்ள ஆசிரி மெடிக்கல் வைத்தியசாலையில் உள்ள தனது முதன்மையான ஆய்வுகூடத்தில் உலகின் வேகமான இந்த வசதி அமையப்பெற்றுள்ளது.

உயர்ந்த தரத்திலான புத்தாக்கத்தைக் கொண்டுள்ள இந்தப் பகுப்பாய்வு உபகரணமானது குருதியியல் பரிசோதனைகளில் துல்லியமான கணிப்பை வழங்குவதுடன், இந்நாட்டின் நோயாளிகள் பராமரிப்புத் துறை மற்றும் மருத்துவ நோய்களை அறியும் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டும் வகையில் இது அமைந்துள்ளது.

இன்றியமையாத தேவைக்கான சேவை

அதிகரித்துவரும் சிக்கலான குருதியியல் கோளாறுகளை விரைவாகவும், துல்லியமாகவும் கண்டறிவதற்கான ஆய்வுகூடங்களுக்கான தேவை இன்றைய சுகாதாரத் துறையில் அவசியமாகியுள்ளது. Mindray BC-6800Plus  கருவியானது இந்த சவால்களை சமாளிக்கும் வகையில் அமைந்திருப்பது மாத்திரமன்றி, இணையற்ற வேகம் மற்றும் துல்லியத் தன்மையைக் கொண்டதாகும். உலகில் வேகமான குருதியியல் பகுப்பாய்வுக் கட்டமைப்பான இதன் மூலம் ஒரு மணித்தியாலத்தில் 200 மாதிரிகளைச் செயற்படுத்தக் கூடியதுடன், 100 மாதிரிகளை ஏற்கும் திறனைக் கொண்டதாகும். இது 120 மாதிரிகளில் தானியங்கி ESR பரிசோதனைகளையும், 40 மாதிரிகளில் உடல் திரவ பரிசோதனைகளையும் செய்யும் திறனைக் கொண்டிருப்பதுடன், இலங்கையின் குருதியியல் பகுப்பாய்வு தொடர்பான ஆற்றலில் பாரியதொரு மாற்றமாக அமைகின்றது. 

அத்துடன், புத்தாக்கமான தீர்வுகளுடன் இணைந்துள்ள ஆசிரி ஆய்வுகூடம், பற்றுச்சீட்டுக்கள் மற்றும் பரிசோதனை அறிக்கைகளை QR குறியீட்டின் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியிருப்பதுடன், இது நோய் அறிதலை வேகப்படுத்தி, நோயாளர்களின் பராமரிப்பின் ஒட்டுமொத்த அணுகுமுறையை சர்வதேச தரத்துடன் சீரமைக்கும் நிலைக்குக் கொண்டுசெல்கின்றது.

நிரூபிக்கப்பட்ட புத்தாக்க அம்சங்கள் மற்றும் நன்மைகள்

கட்சிதமான விதத்தில் இலகுவில் கையாளக்கூடிய வகையில் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட Mindray BC-6800Plus  உபகரணமானது நவீன அம்சங்களைக் கொண்டுள்ளது. இது 60 செக்கன்களில் மாதிரியொன்றை ஆய்வுசெய்யக் கூடியதாகவும், முழுமையான குருதிப் பரிசோதனையில் 37 அறிக்கையிடக் கூடிய மற்றும் 53 ஆய்வுக்கான அளவுருக்களையும், உடல் திரவம் தொடர்பில் மேலதிக அளவுருக்களையும் வழங்கக் கூடியதாகும். இந்தப் பகுப்பாய்வு கருவியானது நியூக்கிளியேட்டட் இரத்த குருதி அணு எண்ணிக்கை (NRBC counting)> reticulocyte பகுப்பாய்வு மற்றும் உடல் திரவப் பரிசோதனை என்பவற்றை மேலதிக எதிர்த்தாக்காற்றல் இன்றி மேற்கொள்ளக் கூடியதாகும். அதிலுள்ள SF Cube தொழில்நுட்பமானது குருதி அணுக்களின் எண்ணிக்கையிடல் மற்றும் வகைப்படுத்தலில் இணையற்ற துல்லியத்தன்மையை உறுதிப்படுத்துகின்றது. 100,000 மாதிரிகளின் முடிவுகளைச் சேமிக்கும் திறன் மற்றும் தானியங்கி தரக் கட்டுப்பாட்டுத் திட்டம் என்பவற்றின் மூலம் பரிசோதனை முடிவுகளின் துல்லியத்தன்மை, உற்பத்தித் திறன் மற்றும் நோயாளர் பாராமரிப்பு என்பவற்றை மேம்படுத்தி நோய் அறிதலின் உயர்ந்த தன்மையை BC-6800Plus உறுதிப்படுத்துகின்றது.  

“Mindray BC-6800Plus ஆனது இலங்கையின் குருதியியல் நோய் அறிதலில் புதிய தசாப்தத்தை உருவாக்குகின்றது” என ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஆய்வுகூடப் பணிப்பாளர் திரு. நீல் பிரியத் ஜோன் தெரிவித்தார். “இது எமது நோய் அறியும் திறனை மேலும் அதிகரிப்பதுடன், இதன் மூலம் விரிவான மற்றும் உரிய நேரத்தில் பகுப்பாய்வு முடிவுகளை வழங்குவதற்கான வாய்ப்பும் கிடைக்கின்றது. செயற்படுத்துவதற்கு உகந்த இந்தக் கருவியில் காணப்படும் நவீன அம்சங்கள் மூலம் பல்வேறு நிலைமைகள் குறித்த முக்கியமான தகவல்களை வழங்க முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “40 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் முன்னணி தனியார் மருத்துவ நோய் அறிதல் வலையமைப்பில் உள்ள ஆசிரி ஆய்வுகூடங்கள், Mindray BC-6800Plus இல் முதலீடு செய்திருப்பதன் ஊடாக புத்தாக்கம் மற்றும் சிறப்பின் மீது கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை பறைச்சாற்றுகின்றது. நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட குருதியியல் பகுப்பாய்வு உபகரணமானது குருதியியல் பகுப்பாய்வு மேலதிக தகவலறிந்த முடிவுகளை வழங்குவதுடன், மேம்பட்ட நோயாளர் பராமரிப்பையும் உறுதிப்படுத்தி தனியார் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் புதிய தரத்தை உருவாக்குகின்றது” என்றார். 

நோயாளர் பராமரிப்பில் ஏற்படுத்தியுள்ள சிறந்த தாக்கம்

குருதியியல் பகுப்பாய்வுக் கருவியை அறிமுகப்படுத்தியிருப்பதானது நோயறிதல் சந்தையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வேகம், துல்லியம் மற்றும் பயன்படுத்த இலகுவான தன்மை ஆகியவற்றுடன் இணைந்த இவ் உபகரணமானது குருதியியல் பரிசோதனையில் புதியதொரு எல்லையை உருவாக்கும். நாடு முழுவதிலும் காணப்படும் 120ற்கும் அதிகமான ஆசிரி ஆய்வுகூட வலையமைப்புக்களின் ஊடாக இந்தத் தொழில்நுட்பத்தை அணுகும் வசதியை நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். 

குருதி சீர்கேடுகளைக் கண்டறிவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

மேம்பட்ட குருதியியல் பகுப்பாய்வு கருவியானது குருதி தொடர்பான சீர்கேடுகளைக் கண்டறிவதில் குறிப்பிடத்தக்க உயர் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகின்றது. அதன் புதுமையான அம்சங்கள் மற்றும் செயல்திறன் ஆசிரி ஆய்வுகூடங்களின் தரம் மற்றும் அர்ப்பணிப்புடன் இணைந்து, இலங்கையின் தனியார் சுகாதாரத் துறையில் ஆசிரி குழுமத்தின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துகிறது.“Biomedica Pvt Ltd ஆகிய நாம் சீனாவின் முன்னணி மருத்துவ உபகரண நிறுவனமான Mindray இன் Vitro Diagnostic தயாரிப்புக்களின் அங்கீகரிக்கப்பட்ட தனித்துவமான விநியோகஸ்தர்களாக விளங்குகின்றோம். தொழில்துறையில் 35 வருடத்துக்கும் அதிகமான சிறப்பைக் கொண்ட நாம், இலங்கையின் தனியார் மருத்துவ ஆய்வுகூடத் துறையில் 40 வருடப் பூர்த்தியைக் கொண்டாடும் ஆசிரி ஆய்வுகூடங்களுடன் இணைந்து சேவையாற்றுவதையிட்டு  பெருமையடைகின்றோம். ஆசிரி ஆய்வுகூடங்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் உலகின் அதிவேகமான குருதியியல் பகுப்பாய்வுக் கருவியான Mindray BC6800 Plus ஐ நாம் வழங்கியுள்ளோம்” என திரு.பாலமுருகன், தனியார் துறைக்கான தேசிய விற்பனை முகாமையாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here