இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கானவர்கள், குறிப்பாக இளம் வயதினர் தொழில்வாய்ப்புக்களைத் தேடியும், சிறந்த வாய்ப்புக்களை நாடியும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதில் கவனம் செலுத்தியுள்ளனர். 2022 ஆம் ஆண்டின் முடிவில் 300,000 க்கும் மேற்பட்டவர்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளதுடன், அவர்களில் பலரும் முறைசார் தொழில் தகைமை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நபர்கள் தங்களுடைய குடும்பங்களுக்காக உழைக்கும் வழிகளைத் தேடுகின்றார்கள். எனினும், புலம்பெயர்கின்றவர்கள் முகங்கொடுக்கின்ற ஒரு முக்கியமான தடையாக ஆங்கில மொழி தேர்ச்சி மதிப்பீடு காணப்படுவதுடன், கனடா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பல பிரபலமான நாடுகளுக்கு புலம்பெயர்வதற்கு இது மிகவும் முக்கியமான ஒரு தேவைப்பாடாக உள்ளது. இதன் பின்னணியில், Pearson இன் ஆங்கில பரீட்சைகளுக்கான PTE தொகுதியானது இந்த இளைஞர்களும்,யுவதிகளும் வெளிநாடுகளில் தமது கனவுகளை நனவாக்குவதற்கு உதவுகின்றது. 2023 ஆம் ஆண்டில் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு இலங்கையிலிருந்து 3,200 க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளதுடன், அவற்றுள் 84% வீதமானோர் அதற்குத் தேவையான அனுமதியைப் பெற்றுள்ளமை அபிலாஷை கொண்ட இலங்கை மக்களுக்கு அங்கு செல்வதற்கான சிறந்த வாய்ப்புக்கள் உள்ளதை காண்பிக்கின்றது.
இந்த வகையில், கல்விச் சேவைகளில் சர்வதேச பெருநிறுவனமான Pearson, இலங்கையில் PTE Core இனை அறிமுகப்படுத்துவதற்காக விசேட நிகழ்வொன்றை அண்மையில் ஏற்பாடு செய்துள்ளதுடன், இலங்கையில் ஆங்கில மொழி தேர்ச்சி மதிப்பீட்டைப் பொறுத்தவரையில் இது ஒரு முக்கியமான சாதனை இலக்காக மாறியுள்ளது. பரீட்சைகளுக்கான Pearson Test of English (PTE) தொகுதியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள PTE Core ஆனது வெளிநாட்டில் கல்வி கற்பதற்கும், தொழில் புரிவதற்கும் மற்றும் புலம்பெயர்வதற்கான வாய்ப்புக்களுக்கும் வழிவகுப்பதுடன், குறிப்பாக கனடா நாட்டுக்கு செல்வதற்கு இது பெரிதும் உதவுகின்றது. இந்த அறிமுக நிகழ்வில், இலங்கையில் Pearson இன் முக்கியமான முகவர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கான சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், Pearson தெற்காசியாவின் அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், இலங்கையில் முகவர்களின் பெறுமதிமிக்க பங்களிப்புக்களைச் சுட்டிக்காட்டியதுடன், இச்சந்தர்ப்பத்தில் அவர்களுடைய சாதனைகளையும் போற்றினர்.
கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் வர்த்தகத்திற்கான ஆலோசகரான டானியல் பூட் மற்றும் Pearson தெற்காசியாவிற்கான தொழில்வாய்ப்பு மற்றும் தகைமைகளுக்கான பணிப்பாளரான திருமதி பிரமிளா போல்ராஜ் உள்ளிட்ட பல மதிப்பிற்குரிய பிரமுகர்கள் மற்றும் தொடர்புபட்ட முக்கிய தரப்பினரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். கனடாவில் தொழில் புரிவதற்கும், புலம்பெயர்வதற்கும் சிறந்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையான ஆங்கில மொழி தேர்ச்சிக்கு அனுசரணையளிப்பதற்கு PTE Core வழங்கும் வாய்ப்பினை அவர்கள் நிகழ்வில் பங்குபற்றி, விளக்கினர்.
இந்நிகழ்வானது PTE Core இன் பன்முக ஆற்றல் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதுடன், கனேடிய எல்லை முகவர் நிறுவனத்தால் இது ஏற்றுக்கொள்ளப்படுவதையும் வலியுறுத்துகின்றது. சௌகரியமான வடிவம், விரைவான பெறுபேறுகள், மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ள PTE Core, கனடாவில் தொழில்புரிய அல்லது கனடாவுக்கு புலம்பெயர விரும்புகின்ற இலங்கையர்களுக்கு மிகவும் உகந்த தெரிவாகும். Pearson Test of English (PTE) பெறுபேற்றுப் புள்ளிகள் சர்வதேச அளவில் 3,000 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், மற்றும் தொழில் தகமை சார்ந்த நிறுவனங்களை எட்டுவதற்கான வாய்ப்பினை வழங்குவதுடன், ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கான வீசா மற்றும் குடிவரவு நடைமுறைகளுக்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், Oxford University, Harvard Business School, மற்றும் Macquarie University அடங்கலாக, புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களால் PTE அங்கீகரிக்கப்பட்டுள்ளமை அதன் நம்பகத்தன்மையையும் மற்றும் சர்வதேச மட்டத்திலான அங்கீகாரத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
Pearson தெற்காசியாவிற்கான தொழில்வாய்ப்பு மற்றும் தகைமைகளுக்கான பணிப்பாளரான திருமதி பிரமிளா போல்ராஜ் அவர்கள் இன்றைய ஒருங்கிணைந்த உலகில் PTE Core எந்தளவுக்கு தொடர்புபட்டுள்ளது என்பதை வலியுறுத்தி கருத்து வெளியிடுகையில், “PTE Core அறிமுகத்தைக் காண்பதையிட்டு மிகவும் பெருமைப்படுகின்றேன். புதிய ஆக்கமான இந்த பரீட்சை, இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் நம்பகமான மதிப்பீட்டுத் தீர்வுகளை வழங்கவேண்டும் என்பதில் Pearson இன் அர்ப்பணிப்புடன் ஒன்றியுள்ளது மட்டுமன்றி, இதில் தோற்றுகின்றவர்கள் தம்முடைய கல்வி மற்றும் தொழில்சார் அபிலாஷைகளை தன்னம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்வதற்கும் அவர்களுக்கு அதிகாரமளிக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.
PTE Core இலங்கையில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையானது ஆங்கில மொழி தேர்ச்சி மதிப்பீட்டில் பரிமாண மாற்றமொன்றுக்கு வித்திட்டுள்ளதுடன், சர்வதேச அரங்கில் பல்வகைப்பட்ட வாய்ப்புக்களை கைப்பற்றுவதற்கு மக்களுக்கு சௌகரியமான வழியையும் ஏற்படுத்தியுள்ளது.
PTE Core அல்லது PTE English Exams Suite தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள அல்லது Pearson சர்வதேச வலையமைப்பின் அங்கமாக மாறுவதற்கு PearsonPTE.com க்கு செல்லுங்கள்.