அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஜெயலால் ஹேவாவசம் அவர்கள் மதிப்புமிக்க Global CEO Leadership Excellence விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்

7

2024 டிசம்பர் 5 அன்று கொழும்பு ITC Ratnadipa ஹோட்டலில் இடம்பெற்ற இலங்கையின் அங்குரார்ப்பண Global CEO Awards விருதுகள் இரவில், அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஜெயலால் ஹேவாவசம் அவர்கள் மதிப்புமிக்க Global CEO Leadership Excellence Award விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் மிகவும் புகழ்பூத்த பிரதம நிறைவேற்று அதிகாரிகள் 50 பேருக்கு அங்கீகாரமளிக்கும் இந்த விருதுகள் நிகழ்வானது அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தை தொடர்ந்தும் வெற்றிகரமாக வழிநடத்திச் செல்வதில் திரு. ஜெயலால் அவர்களின் தலைமைத்துவம் மற்றும் உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் காண்பித்துள்ளது. காப்புறுதித் துறையில் இரு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட அனுபவத்துடன், 2020ம் ஆண்டில் அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்டில் அவர் இணைந்த காலம் முதற்கொண்டு, முக்கியமான சாதனைகளை நிலைநாட்டி, எதிர்காலத்திலும் தக்கவைக்கக் கூடிய வளர்ச்சியுடன் அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தை நிலைபெறச் செய்வதில் அவரது தலைமைத்துவம் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.

இச்சாதனைக்கு அலியான்ஸ் லங்கா நிறுவனத்தின் தலைசிறந்த அணியின் கூட்டு முயற்சிகளும் பங்களிப்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மாலக மிஹிந்துகுலசூரிய (பிரதம காப்புறுதி ஆலோசனை மற்றும் மூலோபாய அதிகாரி – அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்), இஷானி சேனவீர (பிரதம பணியாளர் மற்றும் கலாச்சார அதிகாரி – அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்), சமந்த பெரேரா (பிரதம இடர் அதிகாரி – அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்), சமீர தர்மசேன (தொழிற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி – அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்), சமிலா டி சில்வா (பிரதம நிதி அதிகாரி – அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்), சுரன் டி சில்வா (முகவர் கற்றல் மற்றும் மேம்பாடு, நிறுவன விற்பனை ஆகியவற்றுக்கான தலைமை அதிகாரி – அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்), ஜானக் சேனநாயக்க (தகவல் தொழில்நுட்ப தலைமை அதிகாரி – அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்), மற்றும் சோலித விஜேவர்த்தன (முகவர் திட்டமிடல் மற்றும் விற்பனை ஆளணி நிர்வாகத்திற்கான தலைமை அதிகாரி – அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்) உள்ளிட்ட அதிகாரிகள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.   

அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் ஆனது ஜேர்மனியின் மியூனிக்  மாநகரத்தைத் தலைமையகமாகக் கொண்டு, பிரதானமாக காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ வணிக சேவைகளை வழங்கி வருகின்ற உலகளாவிய நிதியியல் சேவைகள் வழங்குனரான Allianz SE இன் முழுமையான உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here