அலியான்ஸ் லங்கா நிறுவனம் வீதிப் போக்குவரத்தில் சிறுவர்களின் பாதுகாப்பிற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது

27

அலியான்ஸ் லங்கா நிறுவனம், நாட்டின் மிகவும் பெறுமதிமிக்க சொத்தாகிய நமது சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான தனது பயணத்தின் மற்றொரு முக்கியமான படியாக  “ அலியான்ஸ் ப்ரோடெக்ட் “ என தொனிப்பெயரின் கீழ்  , இந்த செப்டெம்பர் மாதத்தில், வீதிப்போக்குவரத்தின் போது சிறுவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான தனது அர்ப்பணிப்பினை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 700 இற்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், ஒட்டுமொத்த வீதி விபத்துக்களில் கிட்டத்தட்ட 40% மோட்டார் சைக்கிள் தொடர்பான விபத்துக்களாகும். இதற்கிடையில், உயிரிழந்தவர்களில் 63% பேர் பொருளாதார ரீதியாக தேசத்திற்கு வலுச் சேர்க்கக்கூடிய 15 முதல் 64 வயதுக்குட்பட்ட வயதினராக உள்ளதுடன், இதில் பலரும் சிறுவர்கள் என்பது மிகவும் வருந்தத்தக்கது.  

அலியான்ஸ் ப்ரோடெக்ட் இல் வீதிப் போக்குவரத்தின் போது சிறுவர்களின் பாதுகாப்பை ஊக்குவிப்பதில் ஓயாத அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்ற அலியான்ஸ் லங்கா நிறுவனம், மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் சிறுவர்களுக்காக மற்றுமொரு சிறுவர்-பாதுகாப்பு-தலைக்கவச விநியோக கட்டத்தை தொடங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட இதேபோன்ற ஒரு திட்டமானது மகத்தான வெற்றியை ஈட்டியதைத் தொடர்ந்து, இலங்கை பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து, தகுதியான பயனாளிகளை இனங்காணவும் பாடசாலை நேரங்களில் அவர்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கவும், அலியான்ஸ் லங்கா நடவடிக்கை எடுத்தது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, விபத்துகளைக் குறைத்து, இளம் தலைமுறையினரின் நலனை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, சிறுவர்களுக்குப் பாதுகாப்பு கவசங்களை விநியோகிப்பதில் இந்த முயற்சி தொடர்ந்தும் கவனம் செலுத்துகிறது.

2023 செப்டெம்பர் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், வீதிப் பாதுகாப்பை ஊக்குவிக்கும் அதே வேளையில், நாடளாவிய ரீதியில் உள்ள சிறுவர்களின் உயிரைப் பாதுகாப்பதில் அலியான்ஸ் லங்காவின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகளின் மூலம், 20 வெவ்வேறு கிளை வட்டாரங்களில் சிறுவர்களுக்கு 1,000 பாதுகாப்பு தலைக்கவசங்களை விநியோகிக்க இந்த முயற்சி திட்டமிட்டுள்ளது. இந்த மூலோபாய முயற்சி, அதன் முந்தைய முயற்சிகளின் நீட்டிப்பாக உள்ளதுடன், குறிப்பாக கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கும் சிறுவர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நிலைமை காணப்படுவதால், அந்த சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் அலியான்ஸ் லங்காவின் அர்ப்பணிப்பை காண்பிக்கிறது.

அலியான்ஸ் லங்கா நிறுவனத்தின் பிரதம விநியோக அதிகாரி ரங்க டயஸ் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “நாம் 2022 இல் ஈட்டிய வெற்றிகளின் அடிப்படையில் இந்த புதிய கட்டத்தை தொடங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். வீதி விபத்துக்களில் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் எமது பங்களிப்பினை ஆற்றும் வர்த்தக நிறுவனமாக, மனச்சாட்சியுடன் செயற்படுவதற்கு அலியான்ஸ் லங்கா உறுதிபூண்டுள்ளது. சிறுவர்களின் பாதுகாப்பில் நீடித்த நற்பலனை ஏற்படுத்தும் வகையில், இந்த முயற்சியை இன்னும் பல ஆண்டுகளாகத் தொடர நாங்கள் திட்டமிட்டுள்ளதால், எமது அர்ப்பணிப்பு இன்றைக்கு அப்பால், எதிர்காலத்திலும் நீண்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.  

இந்த நற்பலனை ஏற்படுத்தும் முயற்சியின் முக்கிய நிகழ்வு அலியான்ஸ் லங்கா நிறுவனத்தின் மாலபே கிளையில் இடம்பெற்றதுடன், இதில் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் பிராந்திய பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து பங்குபற்றியிருந்தனர். சிறுவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இந்த ஒத்துழைப்பு எடுத்துக்காட்டுவதுடன், இந்த முக்கிய இலக்கை அடைவதில் கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதிப் பிரிவின் பணிப்பாளரான, பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட அவர்கள் கருத்து  தெரிவிக்கையில், “இலங்கையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் மிகவும் பொதுவானவை. சிறுவர்களிடையே தலைக்கவசம் பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்கும் அலியான்ஸ் ப்ரோடெக்ட் போன்ற பிரச்சார முயற்சிகள், கடுமையான காயங்களைக் குறைப்பதற்கும், எமது

சிறுவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும் இன்றியமையாதவை,” என்று குறிப்பிட்டார்.

இந்த ஆண்டுக்கான முயற்சியை பரந்த அளவிலான பிராந்தியங்களை உள்ளடக்கி, நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் எட்டும் வகையில் அலியான்ஸ் லங்கா விரிவுபடுத்தும். மாலபே, இரத்தினபுரி, வென்னப்புவ, தம்புள்ளை, அம்பாறை, நெல்லியடி, அம்பலாந்தோட்டை, எல்பிட்டிய, களுபோவில, கம்பளை, தனமல்வில, சாவகச்சேரி, நிட்டம்புவ, குருநாகல், பலாங்கொடை, மாத்தளை, முல்லைத்தீவு, கிரிஉல்ல, கல்முனை மற்றும் ஜா-எல, ஆகிய பிரதேசங்களில் உள்ள சமூகங்களை உள்ளடக்கியதாக இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த விரிவான எட்டுகையின் மூலம், இலங்கை முழுவதும் உள்ள சிறுவர்களுக்கான வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு பகுதிகளில் உள்ள இளம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் கைகளில் சிறுவர் பாதுகாப்பு தலைக்கவசங்கள் சென்றடைவதை உறுதி செய்வதை அலியான்ஸ் லங்கா தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here