அலியான்ஸ் லங்கா தொடர்ந்து 3வது ஆண்டிலும் தலைக்கவசங்களை நன்கொடையளித்து, சிறுவர் வீதிப் பாதுகாப்பு மீதான அர்ப்பணிப்பை தொடர்கிறது

24

இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றும், சர்வதேச பெருநிறுவனமான Allianz SE இன் உறுப்பு நிறுவனமுமான அலியான்ஸ் லங்கா, வீதிப் பாதுகாப்பு குறித்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதுடன், குறிப்பாக, வீதிகளில் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக, சிறுவர்களுக்கான பாதுகாப்பு தலைக்கவசங்களை விநியோகிக்கும் வருடாந்த நிகழ்ச்சித்திட்டத்தை அலியான்ஸ் லங்கா முன்னெடுத்துவருகின்றது. மோட்டார்சைக்கிள்களில் பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களில் பலரும் பெரும்பாலான சமயங்களில் தலைக்கவசமின்றி பயணிக்கின்றமை, வீதிகளில் பிரயாணம் செய்கின்ற இத்தகைய பிரிவினர் மத்தியில் பேராபத்திற்குள்ளாக்கின்றது என்பதே அதற்கான காரணம். அந்த வகையில், வீதிகளில் பயணிக்கின்ற சிறுவர்கள் பாதுகாப்பு குறித்த தனது அர்ப்பணிப்பினை வெளிச்சம் போட்டுக் காட்டியவாறு, தொடர்ச்சியாக தனது 3வது வருடாந்த சிறுவர் பாதுகாப்பு தலைக்கவச விநியோக முன்னெடுப்பை அலியான்ஸ் லங்கா மேற்கொண்டு வருகின்றது.      

கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களத்திற்கும், அலியான்ஸ் லங்கா நிறுவனத்திற்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நீண்ட ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையின் அனுகூலத்துடன், இந்த ஆண்டு முயற்சிக்கு மீண்டும் ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களத்தின் ஒத்தாசை கிடைத்துள்ளது. 2024 ஆகஸ்ட் 26, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் 25 நகரங்கள் மத்தியில் 1,200 தலைக்கவசங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன. 2022 ஆம் ஆண்டில் 1,500 தலைக்கவசங்களும், 2023 ஆம் ஆண்டில் 1,000 தலைக்கசவங்களும் வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டிருந்த முயற்சிகளை அடுத்து தற்போதைய முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.  

இதற்கிடையில், இந்த ஆண்டில் இடம்பெறும் அலியான்ஸ் லங்கா சிறுவர் பாதுகாப்பு தலைக்கவச விநியோக முயற்சிக்கு HHCo Industries (Private) Limited இன் ஆதரவும் கிடைத்துள்ளதுடன், இந்த ஆண்டில் விநியோகிக்கப்படவுள்ள 200 தலைக்கவசங்களுக்கான பங்களிப்பினை இந்த நிறுவனம் வழங்குகின்றது. தனது கூட்டாளர்களுடன் இணைந்து உழைத்து வருகின்ற அலியான்ஸ் லங்கா, இந்த பயனை உண்மையில் பெறுவதற்கு தகைமையுள்ள பயனாளிகளை  மிகவும் கவனமாக ஆராய்ந்து தேர்ந்தெடுத்துள்ளதுடன், ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து, பாடசாலை நேரங்களின் போது இச்சிறுவர்களின் பாதுகாப்பையும் கண்காணிக்கும். வழங்கப்படுகின்ற தலைக்கவசங்கள் சரியாக உபயோகிக்கப்படுவதையும், வீதிப் பாதுகாப்பு குறித்து சிறுவர்களுக்கு அறிவூட்டப்படுவதையும் இந்த ஒத்துழைப்பு உறுதி செய்கின்றது. வீதிப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த பரந்த விழிப்புணர்வு முயற்சியும் இந்த முன்னெடுப்பின் கீழ் மேற்கொள்ளப்படும்.      

அலியான்ஸ் லங்கா பிரதம விநியோக அதிகாரி திரு. ரங்க டயஸ் அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து அலியான்ஸ் லங்கா ஆழ்ந்த அர்ப்பணிப்பு கொண்டுள்ளது. வீதியில் செல்லும் அனைவரினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதில் எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பை ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களத்துடனான எமது கூட்டாண்மை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. இந்த ஆண்டில் 25 நகரங்கள் மத்தியில் 1,200 தலைக்கவசங்களை விநியோகிப்பதனூடாக, அத்தியாவசியமான பாதுகாப்பு ஏற்பாட்டை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி, வீதிப் பாதுகாப்பு கலாச்சாரத்திற்கு பங்களிப்பதே எமது நோக்கம். எமது சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை விரிவுபடுத்தி, பரந்துபட்ட சமூகங்கள் மத்தியில் நல்விளைவைத் தோற்றுவிப்பதில் அலியான்ஸ் அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றது. நாம் தற்போது முன்னெடுத்து வருகின்ற ஏனைய பல்வேறு முயற்சிகளுடன் சேர்ந்து, இந்த முயற்சியும் சிறுவர்கள் தொடர்புபட்ட விபத்துக்கள் ஏற்படுகின்ற ஆபத்தை கணிசமான அளவில் குறைக்குமென நாம் நம்புகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.    

தலைக்கவசங்களை விநியோகிக்கும் பிரதான நிகழ்வுகள் இலங்கை மத்தியிலுள்ள பல்வேறு அலியான்ஸ் லங்கா கிளைகளில் இடம்பெறவுள்ளன. ஆகஸ்ட் 26 அன்று தெஹியத்தகண்டி, கொட்டாவை, அளுத்கமை, நாவலப்பிட்டி, வெள்ளவாய, வவுனியா, சிலாபம், எம்பிலிப்பிட்டி மற்றும் கம்பஹா கிளைகள் விநியோக நிகழ்வுகளை நடாத்தவுள்ளன. ஆகஸ்ட் 28 அன்று மட்டக்களப்பு, பாணந்துறை, மாத்தறை, கண்டி, பதுளை, சாவகச்சேரி, நீர்கொழும்பு மற்றும் அவிசாவளை ஆகிய கிளைகளில் விநியோக நிகழ்வுகள் இடம்பெறும். ஆகஸ்ட் 29 அன்று, பொலன்னறுவை, பிலியந்தலை, தங்காலை, பிலிமத்தலாவை, பண்டாரவளை, அக்கரைப்பற்று, குளியாப்பிட்டி மற்றும் ஹன்வெல்ல கிளைகளில் விநியோகங்கள் இடம்பெறும். தலைக்கவசங்களை விநியோகிப்பதற்கும், வீதிப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைத் தோற்றுவிப்பதற்கும் ஒவ்வொரு கிளையிலும் உத்தியோகபூர்வ வைபவங்கள் இடம்பெறவுள்ளன. ஆகவே இந்த ஆண்டில் இடம்பெறும் நிகழ்ச்சித்திட்டம், தலைக்கவசங்களை வழங்குவது மாத்திரமன்றி, இளையோர் மற்றும் முதியோர் வேறுபாடின்றி, வீதியில் போக்குவரத்து செய்கின்றவர்கள் மத்தியில் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வு கொண்ட கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொலிஸ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. இந்திக ஹப்புகொட, பணிப்பாளர் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “அலியான்ஸ் லங்கா உடனான இக்கூட்டாண்மை, எமது சிறுவர்களின் பாதுகாப்பு குறித்த எமது பகிரப்பட்ட பொறுப்பிற்கு சான்றாக உள்ளது. 2022 மற்றும் 2023 இடையேயான காலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துகள் காரணமாக ஏற்பட்ட இறப்புகள் எண்ணிக்கை 1,314 இருந்து 1,177 ஆக குறைந்தாலும், 2022 மற்றும் 2023 இடையேயான காலத்தில்மோட்டார் சைக்கிள் விபத்துகளின் மொத்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிள் விபத்துகளின் மொத்த எண்ணிக்கை 12,556 ஆக உயர்ந்துள்ளது, இதில் இறப்புகள், பெரிய அளவிலான காயங்கள், சிறிய காயங்கள் மற்றும் சொத்து சேதம் அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது. தலைக்கவசங்களை வழங்கி, வீதிப் பாதுகாப்பினை ஊக்குவிப்பதால், எதிர்வரும் தலைமுறைகள் மத்தியில் வலுவான மற்றும் பாதுகாப்பான இலங்கை தேசத்தை நாம் கட்டியெழுப்புகின்றோம். மிகவும் முக்கியமான இந்த முயற்சிக்காக அலியான்ஸ் லங்காவுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.

இந்த முயற்சியுடன், சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் தனது வளங்கள் மற்றும் கூட்டாண்மைகளின் அனுகூலத்தை அலியான்ஸ் லங்கா தொடர்ந்தும் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றது. வீதிப் போக்குவரத்தின் போது பெரும்பாலும் பாதிப்பிற்கு முகங்கொடுக்கக்கூடியவர்களாக காணப்படுகின்ற சிறுவர்களைப் பாதுகாப்பதற்காக இந்நிறுவனம் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகள், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் நிலைபேணத்தக்க இலக்குகள் மீது அது காண்பிக்கும் அர்ப்பணிப்பையும் வெளிக்காண்பிக்கின்றது.
அலியான்ஸ் லங்கா என்ற பொதுவான பெயரில் அறியப்படுகின்ற அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் மற்றும் அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் ஆகியன ஜேர்மனியின் மூனிச் மாநகரத்தைத் தலைமையகமாகக் கொண்டு, பிரதானமாக காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ வணிக சேவைகளை வழங்கி வருகின்ற உலகளாவிய நிதியியல் சேவைகள் வழங்குனரான Allianz SE இன் முழுமையான உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனங்களாகும். Interbrand and Brand Finance 2023 இடமிருந்து “World’s No.1 Insurance Brand” என்ற சர்வதேச அங்கீகாரத்தை அலியான்ஸ் பெற்றுள்ளது. அலியான்ஸ் குழுமத்தின் உலகளாவிய பலம் மற்றும் வலுவான மூலதனமயம், உள்நாட்டு நிபுணத்துவம் மற்றும் வணிக ஆற்றல் ஆகியன ஒன்றிணைந்து, அலியான்ஸ் லங்காவின் வெற்றிக்கான வலுவான சூத்திரமாகக் காணப்படுகின்றன. மகத்துவத்தின் பாரம்பரியம் மற்றும் புத்தாக்கத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் பாதுகாப்பான மற்றும் சுபீட்சத்துடனான எதிர்காலத்தை வளர்த்து, தனது வாடிக்கையாளர்களின் பரந்துபட்ட தேவைகளை அலியான்ஸ் லங்கா நிறைவேற்றி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here