அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டின்படி கவுதம் அதானி மற்றும் மருமகன் சாகர் அதானி லஞ்சக் குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டுள்ளனர்

10

அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டின்படி கவுதம் அதானி, மருமகன் சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் மீது லஞ்சக் குற்றச்சாட்டுகள் இல்லை

  • கவுதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்ட (FCPA) மீறல் (கள்) குற்றச்சாட்டுகள் இல்லை. மேலும், அமெரிக்க நீதித்துறையின் வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தின் குற்றச்சாட்டுகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். 
  • அஸூர் (Azure) மற்றும் CDPQ அதிகாரிகள் மட்டுமே அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகையில் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
  • அதானி அதிகாரிகள் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானதாகக் கூறும் அனைத்து செய்திகளும் ‘தவறானவை’ என அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் சுட்டிக்காட்டுகிறது.

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL) என்ற குழுமம் அண்மையில் பங்குச் சந்தைகளில் செய்த தாக்கலின் அடிப்படையில் அமெரிக்க நீதித்துறையின் பிரகாரம் கவுதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் சிரேஷ்ட நிர்வாகி வினீத் ஜெயின் ஆகியோர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்தது.

அதானி அதிகாரிகளுக்கு எதிரான லஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த, பல்வேறு ஊடக நிறுவனங்களின் செய்தி அறிக்கை ‘தவறானது’ என AGEL இதன்போது மேற்கோளிட்டுள்ளது. “எமது குறிப்பிட்ட இயக்குனர்களான திரு. கவுதம் அதானி, திரு. சாகர் அதானி மற்றும் திரு. வினீத் ஜெயின் ஆகியோர் அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை (FCPA) மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள செய்தி, ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அறிக்கைகள் தவறானவை.” என அதானி கிரீன் எனர்ஜி லிமிடெடின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “திரு. கவுதம் அதானி, திரு. சாகர் அதானி மற்றும் திரு. வினீத் ஜெயின் ஆகியோர் அமெரிக்க நீதித்துறையின் (US DoJ) குற்றப்பத்திரிகை அல்லது அமெரிக்க பங்கு பரிவர்த்தனையின் சிவில் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளில் அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை மீறுவதாகக் குற்றம் சாட்டப்படவில்லை.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டப்பூர்வ குற்றச்சாட்டில், பிரிவு(count) என்பது பிரதிவாதிக்கு எதிரான தனிப்பட்ட குற்றச்சாட்டுகளைக் குறிக்கிறது.

ஐந்து பிரிவுகளைக் கொண்ட அமெரிக்க நீதித்துறையின் குற்றப்பத்திரிகையில், கவுதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோரின் பெயர்கள் பிரிவு ஒன்று: ‘FCPAஐ மீறுவதற்கான சதி’ இலிருந்து விலக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மூன்று பெயர்களும் பிரிவு ஐந்து: ‘நீதியைத் தடுக்க சதி’ என்பதிலும் குறிப்பிடப்படவில்லை. (பக்கம் 41)

ஊழல் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகளை குறிப்பிடும் குற்றப்பத்திரிகையின் பிரிவு ஒன்றில், அஸூர் பவரின் ரஞ்சித் குப்தா, சிரில் கபேன்ஸ், சவுரப் அகர்வால், தீபக் மல்ஹோத்ரா மற்றும் ரூபேஷ் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே உள்ளதுடன் அஸூரின் மிகப்பெரிய பங்குதாரரும் கனேடிய நிறுவன முதலீட்டாளருமான CDPQஇன் (Caisse de dépôt et placement du Québec பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் கீழ் எந்த அதானி அதிகாரியும் அமெரிக்க நீதித்துறையால் பெயரிடப்படவில்லை.

எவ்வாறாயினும், அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டு பற்றிய தவறான புரிதல் காரணமாக பல்வேறு வெளிநாட்டு மற்றும் இந்திய ஊடகங்கள், அதானி இயக்குனர்கள் அமெரிக்க நீதித்துறை (US DoJ) மற்றும் அமெரிக்க பங்கு பரிவர்த்தனையின் (SEC) அனைத்து ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழும் அல்லது ஊழல் மற்றும் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டதாக தவறான மற்றும் பொறுப்பற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளன.

பிரிவு 2: “குற்றம் சாட்டப்பட்ட பத்திர மோசடி சதி”, பிரிவு 3: “குற்றம் சாட்டப்பட்ட பணப் பரிமாற்ற (wire) மோசடி சதி”, மற்றும் பிரிவு: “குற்றம் சாட்டப்பட்ட பத்திர மோசடி” ஆகியவற்றின் கீழ் மட்டுமே அதானி அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

அதானிக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை

அமெரிக்க நீதித்துறையின் குற்றப்பத்திரிகையில், இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு அதானி நிர்வாகிகளால் லஞ்சம் கொடுக்கப்பட்டமைக்கு எந்த ஆதாரமும் இல்லை. லஞ்சம் கொடுப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்டது அல்லது கலந்துரையாடப்பட்டது என்ற கூற்றுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டே குற்றப்பத்திரிகை மற்றும் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அஸூர் பவர் மற்றும் CDPQ இன் முன்னாள் ஊழியர்களின் சாத்தியக்கூறுகள் மற்றும் செவிவழி செய்திகளை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க நீதித்துறை (US DoJ) மற்றும் அமெரிக்க பங்கு பரிவர்த்தனையினால் (SEC) அதானிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந் நடவடிக்கை தார்மீக ரீதியாகவும் சட்டரீதியாகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளுகிறது.

அமெரிக்காவின் இவ் ஆதாரமற்ற மற்றும் பொறுப்பற்ற தவறான அறிக்கைளால் இந்திய குழுமத்திற்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சர்வதேச திட்ட ரத்துகள், நிதிச் சந்தை பாதிப்பு மற்றும் மூலோபாய பங்காளிகள், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து திடீர் சந்தேகத்திற்குரிய கேள்விகள் என்பனவற்றிற்கு வழிவகுத்துள்ளது.  

அதானி – அமெரிக்க மற்றும் சீன பெருநிறுவனங்களுடன் நேரடி போட்டியில்

அதானி குழுமம், உலகளாவிய ரீதியாக சக்தி மற்றும் logistics துறைகளில் குறிப்பிடத்தக்க செயற்பாடுகளை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய உட்கட்டமைப்பு நிறுவனமாகும். கடந்த சில ஆண்டுகளாக, இந்திய கூட்டு நிறுவனம் சர்வதேச சந்தைகளில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருவதுடன் ஆபிரிக்கா, பங்களாதேஷ், இலங்கை, இஸ்ரேல் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பல அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்களுடன் நேரடியாக போட்டியிடுகிறது.

அமெரிக்க நீதித்துறையின் குற்றப்பத்திரிகை அறிவிக்கப்பட்டதில் இருந்து, குழுமம் அதன் பட்டியலிடப்பட்ட 11 நிறுவனங்களில் அதன் சந்தை மூலதனத்தில் சுமார் US$55 பில்லியன் இழப்பை சந்தித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here